கட்டுரைகள்
Published:Updated:

“அம்மாக்களே, காயப்படுத்தக்கூடாதுன்னு கத்துக்கொடுங்க!”

சரண்யா மோகன்
பிரீமியம் ஸ்டோரி
News
சரண்யா மோகன்

ஒரு கட்டத்தில் இனிமேல் தங்கச்சி கதாபாத்திரத்தில் நடிக்கவே கூடாதுன்னு முடிவு பண்ணுன சமயத்தில்தான், `வேலாயுதம்’ பட வாய்ப்பு வந்துச்சு.

குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி தங்கை கேரக்டர்களில் நடித்து ஹீரோயினானவர், சரண்யா மோகன். திருமணத்திற்குப் பிறகு முழுமையான இல்லத்தரசியாகவும், பரதநாட்டிய ஆசிரியையாகவும் மேடம் இப்போ பிஸி.

``சினிமாவிற்குள் வரவேண்டும் என்கிற ஆசை எப்படி வந்தது..?’’

“ஒரு நாள் நானும் என் தங்கையும் ஒரு நடனப் போட்டிக்குப் போயிட்டு அப்பாவுடன் ஸ்கூட்டரில் வந்திட்டிருந்தப்போ, ‘இதுதான் நாகவள்ளி வீடு’ன்னு இயக்குநர் ஃபாசில் சாரோட வீட்டை அப்பா காட்டினார். தமிழ் வெர்ஷனுக்கு `சந்திரமுகி’ன்னு பெயர் வெச்சிருந்த மாதிரி, மலையாளத்தில் அந்த கேரக்டர் பெயர் நாகவள்ளி. நானும் தங்கச்சியும் நாகவள்ளி கேரக்டர் பரதநாட்டியம் ஆடுற மாதிரி ஆடிப் பழகியிருக்கோம். என் தங்கச்சிக்கு ஆர்வம் தாங்கலை. நாகவள்ளியைப் பார்த்தே ஆகணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிட்டா. அப்பாவும் சும்மா கேட்டை மட்டும் திறந்து காட்டி ஏமாத்திடலாம்னு கதவைத் திறந்ததும், ஃபாசில் சார் எதிர்த்த மாதிரி உட்கார்ந்திருந்தார். எங்களைப் பார்த்ததும், `உள்ளே வாங்க’ன்னு கூப்பிட்டுப் பேசினார். கொஞ்ச நாளிலேயே, `காதலுக்கு மரியாதை’ படத்தோட மலையாள வெர்ஷனான ‘அனியத்திப்ராவு’ல என்னை நடிக்க வைக்கிறதுக்காக ஃபாசில் சார் கேட்டார். அப்போ நான் மூணாம் க்ளாஸ் படிச்சிட்டிருந்தேன். அதுக்கப்புறம், தமிழ்லயும் அதே கேரக்டரில் நடிச்சேன். குழந்தை நட்சத்திரமா ஐந்து படங்களில் நடிச்சதுக்கு அப்புறம், ஃபாசில் சாரோட `ஒரு நாள் ஒரு கனவு’ங்கிற படத்தில் ஸ்ரீகாந்த் சாரோட தங்கச்சியா நடிச்சேன்.’’

“அம்மாக்களே, காயப்படுத்தக்கூடாதுன்னு கத்துக்கொடுங்க!”

``விஜய்யின் ‘வேலாயுதம்’ பட வாய்ப்பு கிடைத்தது எப்படி..?’’

“தமிழ் சினிமாவில் நான் ஹீரோயினா நிறைய படங்களில் நடிச்சிருந்தாலும், என் பெயரைச் சொன்னால் தங்கச்சி கதாபாத்திரங்களில் நடிக்கிறவர்னுதான் பல பேருக்கும் தெரியும். அதனால, ஒரு கட்டத்தில் இனிமேல் தங்கச்சி கதாபாத்திரத்தில் நடிக்கவே கூடாதுன்னு முடிவு பண்ணுன சமயத்தில்தான், `வேலாயுதம்’ பட வாய்ப்பு வந்துச்சு. முதலில் தயாரிப்புத் தரப்பில் இருந்து போன் பண்ணி, `விஜய் சார் ஹீரோ, மோகன் ராஜா இயக்குநர், ஜெனிலியா, ஹன்சிகா ஹீரோயின்ஸ், நீங்கதான் விஜய் சாருக்கு தங்கச்சி’ன்னு சொன்னதும், ‘சார், நான் தங்கச்சியா நடிக்கிறதில்லைன்னு முடிவு பண்ணியிருக்கேன்’னு சொன்னேன். `எதுக்கும் நீங்க கதை கேட்டுட்டு முடிவு பண்ணுங்க’ன்னு சொன்னாங்க. விஜய் சார் மாதிரியான மாஸ் ஹீரோ படத்துல ஒரு ஹீரோயின் இருந்தாலே அவங்களுக்குக் குறைவான சீன்ஸ்தான் இருக்கும். இதுல ரெண்டு ஹீரோயின் வேற. அப்படி இருக்கும்போது தங்கச்சி கேரக்டருக்கு பெருசா எதுவும் இருக்காது. அதுனால ஈசியா நோ சொல்லிடலாம்னு முடிவு பண்ணிட்டுத்தான் கதையே கேட்டேன். மோகன் ராஜா சார் கதை சொல்லி முடிச்சதும், `நான் இந்தப் படத்தில் நடிக்கிறேன் சார்’னு சொல்லிட்டேன்!’’

“அம்மாக்களே, காயப்படுத்தக்கூடாதுன்னு கத்துக்கொடுங்க!”
“அம்மாக்களே, காயப்படுத்தக்கூடாதுன்னு கத்துக்கொடுங்க!”

’’சில வருடங்களுக்கு முன் உடல் பருமனாக இருந்த உங்கள் புகைப்படத்தை வைத்து ட்ரோல் செஞ்சாங்களே... எப்படி எடுத்துக்கிட்டீங்க?’’

’’ப்ச்... அதை நான் கண்டுக்கவே இல்லை. ஆனா, என் குடும்பத்தை அது ரொம்ப பாதிச்சது. பையன் பிறந்தப்போ ஆப்ரேஷன் பண்ணிட்டு நான் ரொம்பக் கஷ்டப்பட்டேன். ஆனா, அது எதுவுமே தெரியாமல், ஒரு போட்டோவை மட்டும் வெச்சுக்கிட்டு ட்ரோல் பண்ணிட்டு இருக்காங்களேனு என் கணவர் ரொம்ப வருத்தப்பட்டார். என்னை ட்ரோல் பண்ணவங்களோட அம்மாவும் என் சூழ்நிலையைத் தாண்டிதான் வந்திருப்பாங்க. அவங்களோட அக்கா, தங்கச்சி, மனைவி, மகள்னு அவங்களுக்கும் கல்யாணம் ஆகி குழந்தை பிறக்கும்போது, இப்படி மாறத்தான் செய்வாங்க. அதையெல்லாம் யோசிக்காமல் கிண்டல் பண்றாங்களேனுதான் எனக்கு வருத்தம் இருந்துச்சு. எல்லா அம்மாக்களும் தங்களோட பிள்ளைகளுக்கு, குறிப்பா மகன்களுக்கு பெண்களோட வேல்யூ என்ன, அவங்களை எப்படி மதிக்கணும்னு சொல்லிக் கொடுத்து வளர்க்கணும். அப்படிச் சொல்லிக்கொடுத்து வளர்த்தால்தான், பெண்களின் உடல் சார்ந்த இந்த கேலிகள் குறையும்!’’

“அம்மாக்களே, காயப்படுத்தக்கூடாதுன்னு கத்துக்கொடுங்க!”
“அம்மாக்களே, காயப்படுத்தக்கூடாதுன்னு கத்துக்கொடுங்க!”
“அம்மாக்களே, காயப்படுத்தக்கூடாதுன்னு கத்துக்கொடுங்க!”

``மறுபடியும் நடிக்கணும்கிற திட்டம் இருக்கா?’’

``இப்போவரை எந்தத் திட்டமும் இல்லை. ஆனா, என் கணவர் என்னை திரும்பவும் நடிக்கச் சொல்லியிருக்கார். ‘திறமையான நடிகையை வீட்டுக்குள்ள அடைச்சு வைக்கிறது சரியில்லை. உனக்கு எப்போ நடிக்கணும்னு தோணினாலும், உனக்குப் பிடிச்ச மாதிரி கதைகள் வந்தாலும் நிச்சயமா நடி’ன்னு சொல்லியிருக்கார். பார்க்கலாம் எதிர்காலம் என்ன ஆச்சரியம் வைச்சிருக்குனு!’’