Published:Updated:

``ஊரடங்கு நாள்களில் மட்டுமல்ல.... என் இயல்பு வாழ்க்கையே இப்படித்தான்!'' - நடிகை சீதா

நடிகை சீதா
நடிகை சீதா ( ராஜசேகரன் )

"டிராஃபிக் ஜாம், ஹார்ன் சத்தம், காற்று மாசு, ஒலி மாசு என எதுவுமே இல்லை. சிக்னலை தாண்ட முடியுமா, லேட்டாகிடுமா, டைரக்டர் இந்நேரம் வந்திருப்பாரா... இப்படி டென்ஷன், ஸ்ட்ரெஸ் எதுவுமே இல்லை."

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக `லாக் டவுண்' என்ற பெயரில் வீட்டுக்குள் முடங்கியிருப்பது நமக்கெல்லாம் புதிய அனுபவம். சாமானியர் முதல் பிரபலங்கள்வரை அனைவருக்கும் இப்படித்தான். இன்னும் எத்தனை நாள்கள் இப்படிப் போகுமென்ற பயமும் கவலையும் பலருக்கும் இருப்பதை மறுக்க முடியாது.

"நமக்கான மகிழ்ச்சி நம்மிடம்தான் இருக்கிறது. தேடிப்போய் மகிழ்ச்சியைப் பெறமுடியாது!"
என்கிறார் நடிகை சீதா.
கொரோனா எதிரொலி: தனியார் பள்ளிகளின் ஆன்லைன் வகுப்புகள், அரசுப்பள்ளிகளின் நிலை என்ன?

தன் வீட்டு மாடித்தோட்டத்தில் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக்கொண்டே, பக்தி ஸ்லோகங்களை சன்ன ஸ்ருதியில் கேட்டுக்கொண்டிருந்த அவரிடம் பேசினோம்.

Actress Seetha
Actress Seetha
Rajasekaran

"உலகம் முழுக்கவே ஓர் அசாதாரணமான சூழ்நிலை நிலவுகிறது. இன்பம், துன்பம் இரண்டையுமே நாம் எப்படி எடுத்துக்கிறோம்கிறது ரொம்பவும் முக்கியம். இதுவரை நாம் யாருமே சந்திக்காத ஒரு சூழ்நிலை. கஷ்டமாகத்தானிருக்கிறது. ஆனாலும், இதை நாம் கடந்துதான் ஆக வேண்டும். `கடந்து விடுவோம்' என்ற நம்பிக்கைதான் இங்கு முக்கியம்.

பரபரவென்று அலைந்து திரிந்துகொண்டிருந்தோம். இப்போ திடுதிப்புபென்று வீட்டுக்குள் அடைந்து கிடக்கிறதுங்கிறது கொஞ்சம் சிரமமான விஷயம்தான். நகரமே அமைதியா இருக்கு. டிராஃபிக் ஜாம், ஹார்ன் சத்தம், காற்று மாசு, ஒலி மாசு என எதுவுமே இல்லை. சிக்னலைத் தாண்ட முடியுமா, லேட்டாகிடுமா, டைரக்டர் இந்நேரம் வந்திருப்பாரா... இப்படி டென்ஷன், ஸ்ட்ரெஸ் எதுவுமே இல்லை.

Home Garden
Home Garden
RajaSeakaran

ஓடிக்கொண்டே இருந்த நாம், நின்று நிதானித்து, நம்மை நாமே யோசித்துப் பார்க்கக்கூடிய நேரம் இது. `இதுவும் கடந்து போகும்' என எடுத்துக்கிட்டு இதையே சாதகமாகப் பயன்படுத்திக்கொள்வோம். இந்த நாள்கள்... நமக்கான வாழ்க்கையை நமக்கு நாமே வாழக்கூடிய நாள்களாகக் கிடைச்சிருக்கு.

என்ன ஒன்று... நல்ல நண்பர்களை நேரில் பார்த்துப் பேச முடிவதில்லை. ஆனாலும் நீண்ட நாள்களாகப் பேசவேண்டுமென நினைச்சுக்கிட்டிருந்த உறவுக்காரர்கள், நண்பர்கள்கிட்ட பேச முடிகிறது. ரொம்ப நாள்களாகச் செய்யாமலிருந்த வேலைகளைச் செய்திட முடிகிறது...'' என்றவர், வீட்டுவேலை, தோட்டம், சமையல் என லாக் டவுண் நாள்களில் பிசியாகவே இருக்கிறார்.

"வீட்டில் ஒவ்வோர் அறையாகப் பார்த்துப் பார்த்து சுத்தம் செய்கிறேன். எது தேவையான பொருள், எது தேவையில்லை எனப் பிரித்தெடுத்துத் தூக்கி எறிகிறேன். வீட்டைச் சுத்தம் செய்யும்போதெல்லாம் மனதுக்குள் ஒரு மகிழ்ச்சியும் தெளிவும் பிறக்கும்.

Seetha
Seetha

வெளியில் போய் காய்கறிகளையெல்லாம் பார்த்துப் பார்த்து இப்போது வாங்க முடியவில்லைதான். அதனால், நான் கூடைகளில் சிறுகீரை, முளைக்கீரை, அரைக்கீரை, அகத்திக் கீரை, முருங்கைக் கீரை, புளிச்சக்கீரை, பருப்புக் கீரை, வெந்தயக்கீரை, மணத்தக்காளி, சுக்கான் கீரை எனப் பல வகைக் கீரைகளையும், புதினா, துளசி, கொத்தமல்லி, இஞ்சினு மருத்துவக் குணமுள்ள செடிகளையும் விதைச்சிருக்கேன்.

சுழற்சி முறையில் விதைப்பதால் எப்போதும் வீட்டுத்தேவைக்கு காய்கறிகளும் கீரைகளும் கிடைத்துக்கொண்டே இருக்கும். காய்கறிகளில் தக்காளி, கத்திரிக்காய், பாகற்காய், பீர்க்கங்காய், புடலை, முள்ளங்கி, வெங்காயம் எனக் காய்த்துக் குலுங்கி நிற்கின்றன.

காலையில் எழுந்ததும் ஸ்ட்ராங்கா ஒரு காபி. பூஜையெல்லாம் முடிச்சிட்டு மாடித்தோட்டத்துக்கு ஒரு விசிட் போவேன். அன்றைக்குத் தேவையான காய்கறிகளைப் பறிச்சிக்கிட்டு வருவேன். பீர்க்கங்காய் சட்னி, தக்காளி சட்னி, பிரண்டை சட்னி என இவற்றில் ஏதாவது ஒரு சட்னியை அம்மா அரைச்சிருப்பாங்க.

பிரேக் ஃபாஸ்ட் முடிஞ்சதும், அம்மா இஞ்சி, ஏலக்காய் போட்டு ரெடி பண்ற டீ தயாரா இருக்கும். பதினோரு மணிக்கு சின்னவெங்காயம் சேர்த்து ஏதேனும் ஒரு கீரை, சீரகம், மிளகு, சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாகக் கொதிக்க வைத்த சூப் ஒரு கப். மதியம் இரண்டு மணிக்கு சாப்பாடு. பெரும்பாலும் அம்மா சமையல்தான். பச்சடி, பொரியல், ரசம், ஆந்திரா ஸ்டைல் கடைசல்னு வெரைட்டியா இருக்கும்.

Seetha
Seetha
`` `பையா'ல நடிக்க முடியலனு நயன்தாரா இன்னும் ஃபீல் பண்றாங்க; ஏன்னா?!" - லிங்குசாமி #10YearsOfPaiya

சாயங்காலம் ஐந்து மணிக்கு மாடித்தோட்டத்துக்கு வந்துடுவேன். பழைய பாடல்களைக் கேட்டுக்கிட்டே ஒவ்வொரு செடிக்கும் தண்ணீர் ஊற்றுவேன்.

உதிர்ந்த பழுத்த இலைகளை எடுத்து ஓரமாகப் போடுவது, செடிகளைப் பராமரிப்பது, அங்கிருக்கிற பூக்கள்கிட்ட பேசிக்கிட்டே தண்ணீர் ஊத்தறதுன்னு நேரம் போவதே தெரியாது.

Seetha
Seetha

நைட் ஒரு குளியல் போட்டுட்டு டின்னருக்கு ரெடி ஆகணும். சப்பாத்தி அல்லது சிறுதானிய தோசை, தொட்டுக்க கொத்சு அல்லது சப்ஜி. அப்புறம் அம்மாவும் நானும் கொஞ்ச நேரம் அரட்டை அடிச்சிட்டுதான் தூங்கப்போவோம்.

ஊரடங்குக்காக மட்டுமல்ல, பெரும்பாலும் இதுதான் என் ரொட்டீன். ஷூட்டிங் இல்லாத நாள்களில் இப்படித்தான் பொழுதுபோகும். அதனாலேயோ என்னவோ, எனக்கு இந்த லாக் டவுண் நாள்களில் பெரிய வித்தியாசம் தெரியலை...'' என்ற சீதாவின் இயல்பு வாழ்க்கை இனிமையாகவும் இருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு