Published:Updated:

`நோ மேக்கப்' லுக், ஹேண்ட்மேடு காஸ்ட்யூம்... ஆலியா - ரன்பீர் திருமண அலங்காரத்தில் என்ன ஸ்பெஷல்!

ஆலியா - ரன்பீர் திருமணம்

ஆடம்பரமான பிரைடல் மேக்கப்பைத் தவிர்த்து `நோ மேக்கப்' லுக்கில் சிம்பிள் மேக்கப்பில் தேவதைபோல காட்சியளித்தார் ஆலியா. மணப்பெண்கள் என்றாலே ஹெவி மேக்கப், அடர் நிற ஆடைகள் என்ற ஸ்டீரியோடைப்பை உடைத்திருக்கும் அவருக்குப் பாராட்டுகள் குவிந்துவருகின்றன.

`நோ மேக்கப்' லுக், ஹேண்ட்மேடு காஸ்ட்யூம்... ஆலியா - ரன்பீர் திருமண அலங்காரத்தில் என்ன ஸ்பெஷல்!

ஆடம்பரமான பிரைடல் மேக்கப்பைத் தவிர்த்து `நோ மேக்கப்' லுக்கில் சிம்பிள் மேக்கப்பில் தேவதைபோல காட்சியளித்தார் ஆலியா. மணப்பெண்கள் என்றாலே ஹெவி மேக்கப், அடர் நிற ஆடைகள் என்ற ஸ்டீரியோடைப்பை உடைத்திருக்கும் அவருக்குப் பாராட்டுகள் குவிந்துவருகின்றன.

Published:Updated:
ஆலியா - ரன்பீர் திருமணம்

பிரபலங்களின் திருமண நிகழ்வுகள் கோலாகலமான விழாக்கள் போல நடைபெறும். ஆடை, அலங்காரம், இடம் என ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்துத் தேர்ந்தெடுப்பார்கள். அந்த வகையில், ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாலிவுட்டின் நட்சத்திர ஜோடியான ஆலியா பட் - ரன்பீர் கபூரின் திருமணம் மும்பையில் உள்ள கபூர் குடும்பத்தினரின் வீட்டில் நடந்தது. குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் எனக் குறிப்பிட்ட சிலர் மட்டுமே திருமண நிகழ்வில் கலந்துகொண்டனர். அதில் ஆலியா எளிமையான ஒப்பனையில் அசத்தியுள்ளார். திருமணத்துக்கான அவரது ஒப்பனையை பிரபல ஒப்பனைக் கலைஞர் புனித் பி சைனி செய்திருக்கிறார்.  

ரன்பீர்- ஆலியா
ரன்பீர்- ஆலியா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்திய திருமண உடைகளுக்கு டிசைனர் சப்யாசாச்சி (Sabyasachi) மிகவும் பிரபலம். கையால் செய்யப்பட்ட வேலைப்பாடுகள் கொண்ட ஆடைகளையும், நகைகளையும் பாரம்பர்ய முறையில் தனித்துவமாக வடிமைப்பதில் சிறப்புடையவர் இவர். ஹேண்ட்மேடு சாயம் பூசப்பட்ட வெள்ளை மற்றும் தங்க நிறம் கலந்த ஆர்கன்ஸா புடவையில், அழகான கோல்டன் எம்பிராய்டரி வேலைப்பாடுகள் நிறைந்த ஆடையை ஆலியாவும், அதே நிற உடையை ரன்பீர் கபூரும் தங்களுடைய திருமண உடைகளாகத் தேர்ந்தெடுத்தனர். கையால் நெய்யப்பட்ட முக்காடும், முத்து மற்றும் வைரங்களால் செய்யப்பட்ட நகைகளையும் அணிந்திருந்தார் ஆலியா. ஆடம்பரமான பிரைடல் மேக்கப்பை தவிர்த்து `நோ மேக்கப்' லுக்கிப் சிம்பிள் மேக்கப்பில் தேவதைபோல காட்சியளித்தார் அவர். மணப்பெண்கள் என்றாலே ஹெவி மேக்கப், அடர் நிற ஆடைகள் என்றிருந்த ஸ்டீரியோடைப்பை உடைத்திருக்கும் ஆலியாவுக்குப் பாராட்டுகள் குவிந்துவருகின்றன.

திருமண நிகழ்வின் புகைப்படங்களை ஆலியா பட் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார். 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism