Published:Updated:

டாப்ஸி தேவதை... விஜய்யின் அன்பு... 160 முறை கன்னத்தில் அறைந்த நீலாம்பரி!

 இயக்குநர் பாரதிராஜா உடன் நடிகை ராதிகா...
பிரீமியம் ஸ்டோரி
இயக்குநர் பாரதிராஜா உடன் நடிகை ராதிகா...

“என் சினிமா பயணத்தில் நிறைய ஏற்ற இறக்கங்களைப் பார்த்திருக்கிறேன்.

டாப்ஸி தேவதை... விஜய்யின் அன்பு... 160 முறை கன்னத்தில் அறைந்த நீலாம்பரி!

“என் சினிமா பயணத்தில் நிறைய ஏற்ற இறக்கங்களைப் பார்த்திருக்கிறேன்.

Published:Updated:
 இயக்குநர் பாரதிராஜா உடன் நடிகை ராதிகா...
பிரீமியம் ஸ்டோரி
இயக்குநர் பாரதிராஜா உடன் நடிகை ராதிகா...

திறமையான திரைக் கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் விருது வழங்கி கெளரவிக்கும் ஆனந்த விகடன் சினிமா விருதுகள் நிகழ்ச்சி, ஜனவரி 11-ம் தேதி சென்னை வர்த்தக மையத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. தமிழ்த் திரையுலக நட்சத்திரங்கள் ஏராளமானோர் சங்கமித்த நிகழ்ச்சியில், பெண் கலைஞர்கள் பலரும் விருதுகளை வென்றது கண்கவர் நிகழ்ச்சியாக அமைந்தது. நடிகர் சதீஷூடன் இணைந்து நேர்த்தியாகவும் கலகலப்பாகவும் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார், தொகுப்பாளர் நட்சத்திரா.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
  • `வெள்ளாவி வச்சுதான் வெளுத்தாய்ங் களா?’ பாடல் ஒலிக்க, பிங்க் நிறப் புடவையில் தேவதையாக அரங்கத்தில் நுழைந்தார், டாப்ஸி பன்னு. ரசிகர்கள் கரவொலி எழுப்பி அவரை உற்சாகப்படுத்தினர். சிறந்த நடிகைக்கான விருதை டாப்ஸிக்கு வழங்கினார், சிறந்த நடிகருக்கான விருது வென்ற தனுஷ். “9 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில்தான் `ஆடுகளம்’ திரைப்படம் வெளியானது. அதே நாளில் இன்று சிறந்த நடிகைக்கான விருது பெறுவதில் மகிழ்ச்சி” என்றார் டாப்ஸி. `கேம் ஓவர்’ படத்தில் டாப்ஸியின் கேரக்டரைப்போலவே நிஜ வாழ்வில் தன்னம்பிக்கைப் பெண்ணாக வாழ்ந்துகொண்டிருக்கும் ப்ரீத்தி ஸ்ரீனிவாசன், தன்னைப்போல முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையை மாற்றுவதற்காக `சோல்ஃப்ரீ’ அமைப்பை நடத்திவருகிறார். அவர் சிறப்பு விருந்தினராக மேடையேற்றப்பட்டார்.

 லிஜோமோளுக்கு ஆரத்தி எடுக்கும் அம்பிகா...
லிஜோமோளுக்கு ஆரத்தி எடுக்கும் அம்பிகா...

தன் போராட்ட வாழ்க்கையை விளக்கியவர், வாகனங்களில் செல்லும்போது சாலை விதிகளை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும் எனத் தாயுள்ளத்துடன் கோரிக்கை வைத்தார். மாற்றுத்திறனாளிகளும் தியேட்டரில் படம் பார்க்க சிறப்பு வசதி செய்துதர குரல் கொடுக்க வேண்டும் என நடிகர் தனுஷிடம் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் ப்ரீத்தி. பிறகு, டாப்ஸிக்கு ஓர் ஓவியத்தையே பரிசாக வழங்கினார். அதைப் பெற்றுக்கொண்ட டாப்ஸி, ப்ரீத்தியை கட்டித்தழுவி நன்றி தெரிவித்தார்.

  • “ ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில், ரம்யா கிருஷ்ணன் என் கன்னத்தில் அறை கொடுக்கும் காட்சி 160 டேக்குக்குப் பிறகே ஓகே ஆனது” என்று இயக்குநர் மிஷ்கின் மேடையில் நகைச்சுவையாகக் கூறும்போது, கீழே உட்கார்ந்திருந்த ரம்யா கிருஷ்ணன் குலுங்கிச் சிரித்தார். பின்னர், மேடையேறிய ரம்யா கிருஷ்ணனுக்கு, சிறந்த குணச்சித்திர நடிகைக்கான விருதை வழங்கினார் மிஷ்கின்.

 டாப்ஸிக்குப் பரிசு வழங்கும் ப்ரீத்தி ஸ்ரீனிவாசன்
டாப்ஸிக்குப் பரிசு வழங்கும் ப்ரீத்தி ஸ்ரீனிவாசன்

“என் சினிமா பயணத்தில் நிறைய ஏற்ற இறக்கங்களைப் பார்த்திருக்கிறேன். ஆனாலும், என்னுடைய முழுத் திறமையை ஒவ்வொரு படத்திலும் வெளிப்படுத்துகிறேன். அந்த வகையில் `சூப்பர் டீலக்ஸ்’ என் சினிமா கரியரில் முக்கியமான படம்” என்று பேசிய ரம்யா, `வயசானாலும் உன் ஸ்டைலும் அழகும்’ எனத் தொடங்கும் `படையப்பா’ பட வசனத்தைப் பேச, பின்னணியில் அந்த பி.ஜி.எம் ஒலிக்க அரங்கமே அதிர்ந்தது. பிறகு, அதே டயலாக்கை கோபமாகவும் காமெடியாகவும் பேசிக்காட்டி, தான் ஒரு தேர்ந்த நடிகை என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்தார்.

டாப்ஸி தேவதை... விஜய்யின் அன்பு... 160 முறை கன்னத்தில் அறைந்த நீலாம்பரி!
  • இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரிடமிருந்து, சிறந்த வில்லிக்கான விருதை பெற்றார் சாய் தன்ஷிகா. “வாழ்க்கை, உழைப்பு, வெற்றி, தோல்வி உட்பட எனக்கு அனைத்தையும் கற்றுக்கொடுத்தது சினிமாதான். பெண்ணாகச் சமுதாயத்தில் எழுந்து நிற்பதே பெரிய போராட்டம்தான். வாழ்க்கையில் எத்தகைய பிரச்னைகள் வந்தாலும் துவண்டுவிடாமல் போராடி பெண்கள் மேலே வர வேண்டும்” என்றார். பின்னர், `கபாலி’ படத்தில் ரஜினி பேசும் `தமிழன் எப்போதும் அடிமையாகத்தான் இருக்கணுமா?’ என்ற வசனத்தைக் கெத்தாகப் பேசிக்காட்டியவர், அனைவரின் கைதட்டல் மழையில் நனைந்தார்.

  • `சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்துக்காகச் சிறந்த அறிமுக நடிகைக்கான விருதை வென்றார், லிஜோமோள் ஜோஸ். அவருக்கு விருது வழங்கியதுடன், தமிழ் சினிமாவுக்கு வரவேற்கும் விதமாக லிஜோவுக்கு ஆரத்தி எடுத்து பொட்டு வைத்தார் நடிகை அம்பிகா. பிறகு, லிஜோமோளை வெட்கப்படுவதுபோல நடித்துக்காட்டச் சொல்லி பலமுறை வலியுறுத்தினார் சதீஷ். ஆனால், லிஜோமோள் வெட்கப்படுவதற்கு மிகவும் வெட்கப்பட்டு நிற்க எல்லோரும் ரசித்துக் கைதட்டினர்.

  • கிராமத்துப் பின்னணியே அறியாத சைந்தவி, `அசுரன்’ படத்தில் வரும் `எள்ளுவய’ பாடல் மூலம் தன் குரலால் தாலாட்டுப் பாடி, தமிழ் ரசிகர்களின் மனத்தைக் கரைத்து செவிகளைக் குளிர வைத்தார். அவருக்குச் சிறந்த பின்னணிப் பாடகிக்கான விருதை வழங்கினார்கள், பாடலாசிரியர் யுக பாரதியும் அமீன் ரஹ்மானும். “இந்தப் பாடலைக் கேட்டுவிட்டு, `மிகச் சிறப்பாக இந்தப் பாடலைப் பாடிய பாடகிக்குச் சிறந்த வாழ்க்கை அமையப்போகிறது’ என ஜி.வி.பிரகாஷுக்கு மெசேஜ் அனுப்பினேன். அவர், `இந்தப் பாடகிக்கு ஏற்கெனவே நல்ல வாழ்க்கை அமைந்துவிட்டது’ என்று பதில் மெசேஜ் அனுப்பினார்” எனச் சுவாரஸ்யமான தகவலை மேடையில் பகிர்ந்தார் யுகபாரதி.

“வைக்கம் விஜயலட்சுமி பாட வேண்டிய பாடல் இது. அவர் ஊரில் இல்லாததால், அவசரம் கருதி ட்ராக் பாடத்தான் ஜி.வி.பிரகாஷ் சார் கூப்பிட்டார். அதனால், என் குரலிலேயே இந்தப் பாடல் ரிலீஸாகும் என நான் நினைக்கவில்லை.கல்யாணத்துக்குப் பிறகும் என் இசைப் பயணத்துக்குக் கணவரும் புகுந்த வீட்டினரும் ஒத்துழைப்பு கொடுப்பதற்கு நன்றி” என்ற சைந்தவியை இடைமறித்து, `உங்க கணவரை வீட்டில் எப்படிக் கூப்பிடுவீங்க?’ என்றார் சதீஷ். “பாப்பா”னு கூப்பிடுவேன் எனக் கொஞ்சலாகக் கூறியபோது சைந்தவியின் முகத்தில் வெட்கம் மின்னியது.

  • சிறந்த வசனகர்த்தாவுக்கான விருதை, `சில்லுக்கருப்பட்டி’ படத்தின் இயக்குநர் ஹலிதா ஷமீமுக்கு வழங்கினார் நடிகை நமீதா. அப்போது நமீதாவுக்குக் காதல் வசனம் ஒன்றை ஹலிதா சொல்லிக்கொடுக்க, அதைத் தன் கொஞ்சல் தமிழில் பேசி அப்ளாஸ் வாங்கினார் நமீதா.

டாப்ஸி தேவதை... விஜய்யின் அன்பு... 160 முறை கன்னத்தில் அறைந்த நீலாம்பரி!
  • `பிகில்’ பட `வெறித்தனம்’ பாடலுக்காகச் சிறந்த நடன இயக்கத்துக்கான விருதைப் பெற்றார்கள், ஷோபி – லலிதா தம்பதி. “ஒவ்வொரு பெண்ணுக்கும் வாழ்க்கையில் பல கனவுகள் இருக்கும். அதை அடைவதற்கான ஒவ்வொரு கட்டத்திலும் மிகவும் போராட வேண்டியிருக்கும். சிறுவயதிலேயே அப்பாவை இழந்தேன். டான்ஸராக இருந்து படிப்படியாக இன்றைய உயரத்தை எட்டியிருக்கிறேன். எங்கள் மீது நடிகர் விஜய் சார் வைத்திருக்கும் அன்புக்கும் நம்பிக்கைக்கும் நன்றி” என லலிதா உருக்கமாகக் கூற, பார்வையாளர்களும் நெகிழ்ச்சியானார்கள். பிறகு, விருது வழங்கிய நடிகை வேதிகாவுடன் இணைந்து, `வெறித்தனம்’ பாடலுக்கு ஷோபியும் லலிதாவும் நடனமாடி அரங்கைக் கலகலப்பாக்கினார்கள்.

  • ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்துக்காகச் சிறந்த ஆடை வடிவமைப்பாளர் விருதை உத்ரா மேனனுக்கு வழங்கினார் நடிகை சுனைனா.

  • விருது நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக எஸ்.எஸ்.வாசன் விருதைப் பெற்றார், இயக்குநர் பாரதிராஜா. ஃபேஷனின் அப்டேட் வெர்ஷனாக பட்டுப் புடவையில் மின்னிய நடிகை ராதிகா, தன் குருநாதர் பாரதிராஜா குறித்து அறிமுக உரையாற்றி அவரை மேடைக்கு அழைத்தார்.

  • தமிழ் சினிமாவில் பூக்கும் ஆச்சர்ய மலர்களாக, கடந்த ஆண்டு திரை வானில் பெரும் நம்பிக்கையை விதைத்த பெண் இயக்குநர்கள் மதுமிதா (‘கே.டி (எ) கருப்புதுரை’ படம்) மற்றும் ஹலிதா ஷமீம் (‘சில்லுக்கருப்பட்டி’ படம்) இருவரும் மேடையில் கெளரவிக்கப்பட்டனர்.

பல்வேறு சுவாரஸ்யத் தருணங்கள் மற்றும் கண்கவர் நடன நிகழ்ச்சிகளுடன் விருது வழங்கும் நிகழ்ச்சி அமர்க்களமாக நடந்து முடிந்தது.