Published:Updated:

ஆங்கர் to ஆக்டர் - “என்னைக் கல்யாணம் பண்ணச் சொன்ன ஜோதிகா!”

அகல்யா
பிரீமியம் ஸ்டோரி
அகல்யா

ஆதித்யா டி.வி-க்கு வந்த புதிதில் எனக்கு எப்படி காமெடி கவுண்டர்ஸ் போடணும்னு எதுவும் தெரியாது. நிறைய கத்துக்கிட்டேன்

ஆங்கர் to ஆக்டர் - “என்னைக் கல்யாணம் பண்ணச் சொன்ன ஜோதிகா!”

ஆதித்யா டி.வி-க்கு வந்த புதிதில் எனக்கு எப்படி காமெடி கவுண்டர்ஸ் போடணும்னு எதுவும் தெரியாது. நிறைய கத்துக்கிட்டேன்

Published:Updated:
அகல்யா
பிரீமியம் ஸ்டோரி
அகல்யா

‘ரொம்பவே கஷ்டப்பட்டுதான் இன்னைக்கு ஆங்கரா இந்த இடத்தைத் தக்க வச்சிருக்கேன். பல தடைகள், புறக்கணிப்புகள், கிண்டல்கள்னு எல்லாமே அனுபவிச்சிருக்கேன். இந்தத் துறைதான் வேணும் என்கிற பிடிவாதம்தான் இத்தனை வருஷமா என்னை இந்தத் துறையில் பயணிக்க வச்சிருக்கு!' எனப் புன்னகைக்கிறார் அகல்யா வெங்கடேசன். ஆதித்யா தொலைக்காட்சியில் ஆங்கராக ஒன்பது ஆண்டுகள் வலம் வந்துகொண்டிருக்கிறார்.

‘‘நான் விஸ்காம் படிச்சிட்டிருக்கும்போது இன்டர்ன்ஷிப்பிற்காக இமயம் டி.வி-க்குப் போயிருந்தேன். எப்பவும் கலகலன்னு பேசிட்டே இருக்கிறது என் இயல்பு. அப்படி நானும், என் ஃப்ரெண்ட்டும் ஜாலியா பேசிட்டிருக்கிறதைப் பார்த்துட்டு நீங்க ஏன் ஆங்கரிங் பண்ணக்கூடாதுன்னு கேட்டாங்க. பேசுறது பிடிக்கும் என்பதால் உடனே ஓகே சொல்லிட்டேன். இமயம் டி.வி-யில் முதல் லைவ் ஷோ பண்ணினேன். அப்படி ஆரம்பிச்சதுதான், தொடர்ந்து பண்ணப் பண்ண எனக்கு ரொம்பப் பிடிச்சுப்போச்சு.

பிறகு, ராஜ் டி.வி, புதுயுகம்னு ஆங்கரிங் பண்ணிட்டிருந்தேன். ஒருமுறை ஆதித்யா டி.வி-யில் ஆங்கரிங்கிற்கான ஆடிஷன் நடக்குதுன்னு கேள்விப்பட்டு அதில் கலந்துகிட்டேன். அதில் செலக்ட் ஆகி 2014-ல் ஆங்கராக ஆதித்யா டி.வி-க்குள் நுழைஞ்சேன்.

ஆங்கர் to ஆக்டர் - “என்னைக் கல்யாணம் பண்ணச் சொன்ன ஜோதிகா!”
ஆங்கர் to ஆக்டர் - “என்னைக் கல்யாணம் பண்ணச் சொன்ன ஜோதிகா!”
ஆங்கர் to ஆக்டர் - “என்னைக் கல்யாணம் பண்ணச் சொன்ன ஜோதிகா!”
ஆங்கர் to ஆக்டர் - “என்னைக் கல்யாணம் பண்ணச் சொன்ன ஜோதிகா!”

ஆங்கரிங் துறையை நான் தேர்வு செய்தப்போ டஸ்கி ஸ்கின் டோன், ஒல்லியான உடல்வாகு. ‘இவங்க எப்படி ஆங்கருக்கு செட்டாவாங்க’ என்பதையெல்லாம் ஆரம்பத்தில் எதிர்கொண்டேன். ஆனாலும், ஆங்கர்னா இப்படித்தான் இருக்கணும் என்கிற எண்ணத்தை மாத்தணும்னு நினைச்சேன். இப்போ எல்லாமே மாறிடுச்சு. நிறம், தோற்றம் எல்லாம் முக்கியமில்லை. உங்ககிட்ட திறமை இருந்தால் போதும்.

ஆதித்யா டி.வி-க்கு வந்த புதிதில் எனக்கு எப்படி காமெடி கவுண்டர்ஸ் போடணும்னு எதுவும் தெரியாது. நிறைய கத்துக்கிட்டேன். எப்படிக் கலாய்க்கணும் என்பதில் ஆரம்பிச்சு, பன்ச் வரைக்கும் எல்லாமே தெரிஞ்சிகிட்டேன். என்னோட பிளஸ், சிரிப்பு. நிகழ்ச்சியில் சொதப்பினாலும் சிரிச்சே சமாளிச்சிடுவேன்’’ என்றவரிடம் ஆங்கரிங் துறையில் மறக்க முடியாத பாராட்டு குறித்துக் கேட்கவும், சிரிக்கிறார்.

‘‘ ‘நீங்க சொல்லுங்க dude' என ஒரு ஷோ பண்ணினேன். அந்த ஷோவிற்குத் திரைப் பிரபலங்கள் பலரிடம் இருந்தும் பாராட்டும் வாழ்த்தும் கிடைச்சிருக்கு. `சங்கத்தமிழன்' படத்தில் நடிக்கும்போது விஜய் சேதுபதி இந்த ஷோ பற்றி ராஷி கண்ணாகிட்ட சொல்லி என்னை அறிமுகப்படுத்தி வச்சாரு. அவர் என்னைப் பற்றிச் சொல்லும்போது அப்படியே காத்துல மிதந்துகிட்டு இருந்தேன். குறிப்பிட்டு இந்த ஷோவிற்கும், ‘மாமோய் நீங்க எங்க இருக்கீங்க' ஷோவிற்கும் நிறைய பாராட்டு கிடைச்சிருக்கு. திரைப் பிரபலங்கள் பலரும் இந்த ரெண்டு ஷோக்களையும் குறிப்பிட்டுப் பாராட்டியிருக்காங்க’’ என்றவரிடம் பட வாய்ப்புகள் குறித்துக் கேட்டோம்.

ஆங்கர் to ஆக்டர் - “என்னைக் கல்யாணம் பண்ணச் சொன்ன ஜோதிகா!”
ஆங்கர் to ஆக்டர் - “என்னைக் கல்யாணம் பண்ணச் சொன்ன ஜோதிகா!”
ஆங்கர் to ஆக்டர் - “என்னைக் கல்யாணம் பண்ணச் சொன்ன ஜோதிகா!”
ஆங்கர் to ஆக்டர் - “என்னைக் கல்யாணம் பண்ணச் சொன்ன ஜோதிகா!”

‘‘ஆங்கரிங் பண்ணிட்டு இருக்கும்போதே ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைச்சது. ஆனா, அந்தப் படம் ரிலீஸ் ஆகவே இல்லை. பிறகு, ‘தேவராட்டம்' படத்தில் நடிகர் சூரியின் மனைவியா நடிக்க வாய்ப்பு வந்துச்சு. முத்தையா சார், ‘மாமோய் நீங்க எங்க இருக்கீங்க' பார்த்துட்டு இந்த கேரக்டருக்கு நான் செட்டாவேன்னு கூப்பிட்டிருந்தாங்க. அந்தப் படத்தில் நடிச்சேன். அடுத்து, ஜோதிகா மேம் கூட ‘ராட்சசி' படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைச்சது. சின்ன வயசில இருந்து ஜோ மேம்னா ரொம்பப் பிடிக்கும். அவங்களுக்கு கிஃப்ட் வாங்கிக் கொடுத்தேன்.. அப்போ ‘சீக்கிரமே கல்யாணம் பண்ணுங்க அகல்யா’ன்னு சொன்னாங்க.

அதே மாதிரி, எனக்கு சீக்கிரமே கல்யாணம் ஆகப் போகுது. ‘ராஜவம்சம்' படத்தில் நடிச்சப்போ சசிகுமார் அண்ணனைச் சந்திச்சேன். இப்போ அவர்தான் என் அண்ணன். என் நிச்சயதார்த்தத்திற்கு அண்ணன் வந்து சிறப்பிச்சிருந்தார். என்னோடது அரேஞ்டு மேரேஜ். அவர் பெயர் அருண்குமார். தமிழ்நாடு காவல் துறையில் சப்-இன்ஸ்பெக்டராக இருக்கிறார். திருமணத்துக்குப் பிறகும் என்னுடைய ஆங்கர், ஆக்டர் பயணம் தொடரும்’’ என்றவரிடம் அடுத்த பிளான் குறித்துக் கேட்டோம்.

`` ‘யானை' படத்தில் நல்ல கேரக்டர் ரோலில் நடிச்சிருக்கேன். அதுதவிர, கிட்டத்தட்ட அஞ்சு படங்கள் ரிலீஸுக்காக வெயிட்டிங். சீரியல் வாய்ப்புகள் வந்துச்சு. தொடர்ந்து படங்களில் நடிக்கிறதனால சீரியலில் நடிக்க முடியலை. ஆனாலும், காமெடியான ஒரு நல்ல கேரக்டர் அமைஞ்சா நிச்சயம் நடிப்பேன்’’ என்றார் அகல்யா.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism