Published:Updated:

லாக்ஸ் அண்ட் லாக்ஸ் ஒன்லி ஸ்ருதி ஹாசன்! - சோஷியல் மீடியா ரவுண்ட் அப்

#SocialMediaRoundup

லாக்டெளன்கள் மாறினாலும், குவாரன்டீன்கள் காணாமல் போனாலும் சினிமா ஷூட்டிங் இல்லையென்பதால் செலிபிரிட்டிகளின் ஒரே ஸ்ட்ரெஸ் பஸ்டர் சோஷியல் மீடியாதான். பிரபலங்கள் அங்கே ஷேர் செய்யும் சுவாரஸ்யங்கள், இங்கே உங்கள் பார்வைக்கு. #SocialMediaRoundup

லாக்ஸ் அண்ட் லாக்ஸ் ஒன்லி ஸ்ருதி ஹாசன்! - சோஷியல் மீடியா ரவுண்ட் அப்

லாக்டெளன்கள் மாறினாலும், குவாரன்டீன்கள் காணாமல் போனாலும் சினிமா ஷூட்டிங் இல்லையென்பதால் செலிபிரிட்டிகளின் ஒரே ஸ்ட்ரெஸ் பஸ்டர் சோஷியல் மீடியாதான். பிரபலங்கள் அங்கே ஷேர் செய்யும் சுவாரஸ்யங்கள், இங்கே உங்கள் பார்வைக்கு. #SocialMediaRoundup

Published:Updated:
#SocialMediaRoundup

மேக் அப் டிப்ஸ், ஹேர் டிப்ஸ் ஆகியவற்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வந்த நடிகை சமீரா ரெட்டி, இன்று குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது பற்றி ஒரு பதிவிட்டிருக்கிறார்.

"தாய்ப்பால் கொடுக்கும் முழு செயல்முறையைப் பற்றி கவலை கொண்ட தாய்மார்களிடமிருந்து எனக்கு பல மெசேஜுகள் வருகின்றன. எனவே, புதிய அம்மாக்களுக்கான அப்டேட் தருகிறேன். என் மகள் நைரா பிறந்து 11 மாதங்கள் ஆகின்றன. நான் இன்னும் அவளுக்கு தாய்ப்பால்தான் கொடுக்கிறேன். ஒரு புதிய அம்மாவுக்கு இருக்கும் சுய சந்தேகத்துடன் எனக்கும் குழப்பமான தருணங்கள் இருந்தன. நான் குழந்தை மருத்துவரை அணுகினேன். ஆனால், முதலில் நான் என் உள்ளுணர்வு சொல்வதைக் கேட்டேன். நான் நைராவுக்கு ஐந்தரை மாதங்கள் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுத்தேன். பின்னர் மற்ற பொருள்களை அறிமுகப்படுத்தினேன். தேவைக்கேற்ப உணவுக்கு இடையில் நான் இப்போது அவளுக்குத் தொடர்ந்து தாய்ப்பால் கொடுத்து வருகிறேன்.

ஒரு தாய் மனச்சோர்வடைந்து, நம்பிக்கையில்லாமல், கவலைப்படலாம் அல்லது மன அழுத்தத்திற்கு ஆளாகலாம். அது தாய்ப்பால் கொடுப்பதை பாதிக்கிறது. இந்தக் காரணிகள் தாயின் பால் உற்பத்தியை நேரடியாகவோ மறைமுகமாகவோ பாதிக்கும். இதனால் குழந்தை குறைவான பால் எடுத்துக்கொள்ள நேரிடும். எனவே, உங்களைச் சுற்றியுள்ளவர்கள் உங்களை ஊக்குவிக்க வேண்டும். ஒரு புதிய அம்மாவின் ப்ரஷரை உடல் ரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும் புரிந்துகொள்வது இந்த நேரத்தில் முக்கியமானது. நாம் எல்லா தாய்மார்களையும் ஆதரிக்க வேண்டும். அவர்கள் மீது அன்பையும் மரியாதையையும் காட்ட வேண்டும். எல்லா தாய்மார்களையும் கொண்டாடுவோம்" என்று அறிவுரை சொல்லியிருக்கிறார் சமீரா.

View this post on Instagram

I get many messages from mothers having anxiety about the whole process of Breastfeeding !So here is an update post for new mommies or to be . 🍼 Nyra turns 11 months in a few days and yes im still breastfeeding her. In my experience the first three months were tricky with managing flow but then it just balances out and becomes part of the schedule. I always say if you used only formula or did a combination for whatever reasons please don’t let anyone make you feel bad about it. As a mother you have choices that are yours and no one else can judge you. I’ve had moments of confusion myself with self doubt that can be very hard on a new mom and I consulted the Pediatrician but first I’ve always listened to my own Instinct. Trust it . I exclusively breastfed Nyra till 5.5 months and then introduced solids . I continue to feed her now in between meals on demand . 🌈 I’ve said this in an earlier post - A mother may be depressed, lacking in confidence, worried, or stressed and it affects breastfeeding. These factors do not directly affect her milk production, but can interfere with the way in which she responds to her baby. This can result in the baby taking less milk, and failing to stimulate milk production. So the people around you need to be encouraging you . Understanding the pressure on a new mom physically and emotionally is important in this overwhelming time. 🙌🏻 . I would also like to give a shoutout to moms who have struggled with low milk production . This could happen due to a pathological reason including endocrine problems or a host of other factors .A few mothers have a physiological low breast-milk production, for no apparent reason, and production does not increase when the breastfeeding technique and pattern improve. There is no reason to shame them or make them feel any pressure in not being able to BF. we need to support all mothers and show love and respect . To all mommies- we are doing our best . So let’s celebrate that . 👏🏻 . #imperfectlyperfect . There is fantastic support group of mothers On Facebook that I recommend https://www.facebook.com/groups/breastfeedingsupportforindianmoms #breastfeeding #support #momlife #motherhood

A post shared by Sameera Reddy (@reddysameera) on

தினமும் யாரோ ஒரு சினிமா பிரபலமாவது தங்களது சிறுவயது புகைப்படத்தை பதிவிட்டு கமென்ட்ஸ் கேட்கின்றனர். அப்படி இன்று மகிமா நம்பியார் தனது சிறுவயது புகைப்படத்தை பதிவிட்டு, `இப்போதும் இப்படிதான் சிரிக்கிறேனா?' என்று கேள்வி கேட்டுள்ளார்.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை தமிழக அரசு ரத்து செய்த செய்திதான் மீம் கிரியேட்டர்களுக்கு இன்றைய கன்டன்ட். ஏராளமான மீம்கள் குவிந்து கிடக்கின்றன. அப்படித்தான் ரசித்த மீம்களை ஜீவாவும் ப்ரியா பவானி ஷங்கரும் தங்களது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியாக பதிவிட்டிருக்கின்றனர்.

ஆயுஷ்மான் குரானாவுக்கு சூர்யா - ஜோதிகா உட்பட ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அவர் அமிதாப் பச்சனோடு இணைந்து நடித்துள்ள `குலாபோ சிதாபோ' படம் அமேசான் ப்ரைமில் ஜூன் 12-ம் தேதி வெளியாக இருக்கிறது. அதை வைத்து டங் ட்விஸ்டர் ஒன்றைப் பேசி தனது இன்ஸ்டாகிராமில் அப்லோட் செய்துள்ளார். அதோடு மட்டுமல்லாமல் இதேபோன்று பேசச் சொல்லி கரண் ஜோஹர், வருண் தவான், அர்ஜுன் கபூர், டாப்ஸி ஆகியோரையும் சேலஞ்சுக்கு இழுத்துவிட்டிருக்கிறார் .

ஸ்ருதிஹாசனுக்கு இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்கள் 14 மில்லியனைத் தொட்டுள்ளனர். அதை மகிழ்ச்சியோடு, "140 லட்சம் ஃபாலோயர்களுக்கும் நன்றி. நான் உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன். தினமும் நீங்கள் என் மீது காட்டும் அன்புக்கு நான் எப்போதும் நன்றியுள்ளவளாக இருக்கிறேன். வரலாற்றில் இது ஒரு விசித்திரமான நேரம். தவிர, அனைவருக்கும் பல வித்தியாசமான உணர்ச்சிகள் உள்ளன. இந்தச் சூழலில் உங்கள் அனைவருடனும் இணைந்து என் வாழ்க்கையைப் பகிர்ந்துகொள்வது திகைப்பாக இருக்கிறது" என்று கூறி ஒரு பூமராங் வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.