`பேட் மேன்' (Pad man), `சஞ்சு', `ரான்ஜானா' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள பாலிவுட் நடிகை சோனம் கபூர் தற்போது கர்ப்பமாக உள்ளார். தன் கணவன் ஆனந்த் அஹுஜாவுடன் முதல் குழந்தையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் நிலையில், கர்ப்ப காலத்தின் முதல் மூன்று மாதங்கள் தனக்கு எளிதானதாக இல்லை என்று தெரிவித்துள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
``கர்ப்ப காலம் அழகானதுதான், ஆனால் அது கடினமானதும்கூட என்பதை ஒருவரும் உங்களுக்குச் சொல்ல மாட்டார்கள்" என மனம் திறந்துள்ளார். சமூக ஊடகத்தில் அவரின் இந்தப் பேச்சுக்கு பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
மேலும் தாய்மை என்பது ஒருவரின் சிறந்த வெர்ஷன். அந்தப் பரிணாமத்தை நான் எதிர்நோக்கி இருக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, தனது கர்ப்பத்தைப் பற்றிய மகிழ்ச்சியான செய்தியைப் பகிர்ந்து கொள்ளும்போது, சோனம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் கணவருடன் இருக்கும் படங்களைப் பதிவிட்டு, தன் குழந்தையை வரவேற்கும் அழகான குறிப்பையும் பகிர்ந்துள்ளார்.

அதில் ``நான்கு கைகள். எங்களால் இயன்றவரை உன்னை உயர்த்துவோம். இரண்டு இதயங்கள். உன்னுடைய ஒவ்வோர் அடியிலும் அது ஒன்றாய் துடிக்கும். உன் மீது அன்பையும் ஆதரவையும் பொழிவதற்காக ஒரு குடும்பம் உள்ளது" என குறிப்பிட்டுள்ளார்.