Published:Updated:

ஃபர்ஸ்ட் இயர்... ஃபர்ஸ்ட் டே!

தான்யா ரவிச்சந்திரன்
பிரீமியம் ஸ்டோரி
News
தான்யா ரவிச்சந்திரன்

படம் ரிலீஸ் ஆன அன்னிக்கு காலையில ‘முதல் நாள் முதல் ஷோ’ பார்க்கற த்ரில் எக்ஸைட்டிங்தான், நான் முதல் நாள் காலேஜ் போன அன்னிக்கும் இருந்துச்சு.

நியாயமாகப் பார்த்தால், பள்ளி கல்லூரிகள் இந்நேரம் திறந்திருக்க வேண்டும். ‘நீங்கள் முதன்முதலில் கல்லூரி சேர்ந்த அனுபவத்தைச் சொல்லுங்களேன்’ என்று இவர்களிடம் கேட்டோம்.
ஃபர்ஸ்ட் இயர்... ஃபர்ஸ்ட் டே!

தான்யா ரவிச்சந்திரன்

படம் ரிலீஸ் ஆன அன்னிக்கு காலையில ‘முதல் நாள் முதல் ஷோ’ பார்க்கற த்ரில் எக்ஸைட்டிங்தான், நான் முதல் நாள் காலேஜ் போன அன்னிக்கும் இருந்துச்சு. சென்னை எம்.ஓ.பி. வைஷ்ணவால பி.காம். சேர்ந்தேன். ‘காலேஜ்ல புது ஃப்ரெண்ட்ஸ் எப்படிப் பழகுவாங்க... நான் எப்படி அவங்களை ஃபேஸ் பண்ணப்போறேன்...’ இப்படி யோசிச்சிட்டே போனேன். ஆனா என்னுடைய அதிர்ஷ்டமோ என்னவோ முதல்நாளே ஈஸியா எல்லார்கிட்டேயும் பழக முடிஞ்சது. ஃபன் நிறைஞ்ச நாள்கள் அவை. எம்.எஸ்.எஸ்.டபிள்யூல பி.ஜி.யும் முடிச்சேன். சிம்பிளா சொல்லணும்னா என்னோட ரெண்டு காலேஜ் லைஃப்லேயும் ஃபன் மொமன்ட்ஸ்தான் அதிகம்.

ஃபர்ஸ்ட் இயர்... ஃபர்ஸ்ட் டே!

நிவேதா பெத்துராஜ்

பிரிட்டிஷ் யுனிவர்சிட்டியில படிக்கணும்னு கனவு கண்ட பொண்ணு நான். என்னுடைய காலேஜ் லைஃப் ஸ்டார்ட் ஆனது ஸ்காட்லாந்துல. ‘ஹரியாட் வாட்’ யுனிவர்சிட்டியில ஹ்யூமன் ரிசோர்ஸ் மேனேஜ்மென்ட் கோர்ஸ். முதல் நாள் காலேஜ்ல ஓரியன்டேஷன் டே. அப்பாவும் நானும் போயிருக்கோம். அறிமுகம் முடிஞ்சு கிளாஸ் போறதுக்கு முன்னாடி, ‘யுனிவர்சிட்டியை ஒரு ரவுண்ட் சுத்திப் பார்த்துடலாமே’ன்னு அப்பா ஆசைப்பட்டாங்க. அப்படி ரவுண்ட் வந்தப்ப ஒரு இடத்துல, ஸ்டூடண்ட்ஸ் ஒண்ணா தம் அடிச்சிட்டு இருந்த காட்சியும் எங்க கண்ணுல பட்டுச்சு. நான் கேர்ள்ஸ் ஸ்கூல்ல படிச்சு வளர்ந்ததால, பாய்ஸ் அண்ட் கேர்ள்ஸ் ஒண்ணா சந்திக்கறதே எனக்குப் புதுசா தெரிஞ்சது. பசங்களும் பொண்ணுகளுமா ஸ்மோக் பண்றதைப் பார்த்ததும் செம ஷாக். எப்படி ரியாக்ட் பண்றதுன்னு தெரியாம, நானும் அப்பாவும் சில நிமிடங்கள் பேசிக்கவே இல்லை. அப்பா ஏதாவது அட்வைஸ் பண்ணுவார்னு நினைச்சேன். ஆனா, எதுவும் சொல்லலை.

ஃபர்ஸ்ட் இயர்... ஃபர்ஸ்ட் டே!

இயக்குநர் நவீன்

பத்தாவது முடிச்சிட்டு கோயம்புத்தூர் பக்கத்துல இருக்கிற கருமத்தம்பட்டியில பாலிடெக்னிக்ல சேர்ந்தேன். ‘நாவரசு’ங்கிற பையன் ராகிங் கொடுமைக்கு ஆளாகிக் கொல்லப்பட்டிருந்த சமயம் அது. அதனால ‘இனிமே பிரச்னை இருக்காது’ன்னு நினைச்சுட்டுப் போனா, அப்பவும் ராகிங் இருந்தது. சீனியர்கள்கிட்ட குறைந்தபட்சம் ஒரு அடியாவது வாங்காம முதலாண்டைக் கடக்கவே முடியாதுங்கிற நிலைமைதான். அப்ப அனுபவிச்ச சில விஷயங்களை இப்ப நினைச்சாக்கூட திகிலா இருக்கு. ஆனா இன்னைக்கு நிலைமை மாறி, மாணவர்கள்கிட்ட நட்புணர்வு பெருகிடுச்சுன்னு நினைக்கிறேன்.

ஃபர்ஸ்ட் இயர்... ஃபர்ஸ்ட் டே!

கதிர்

நான் கோயம்புத்தூர்ல குமரகுரு காலேஜ்ல சிவில் இன்ஜீனியரிங் எடுத்துச் சேர்ந்தேன். ‘சிவில் படிச்சா கன்ஸ்ட்ரக்‌ஷன் பிஸினஸ் பண்ணலாம்’கிறது அப்பாவின் ஐடியா. முதன் முதலா காலேஜ் போறப்ப பயமெல்லாம் இல்லை. ஏன்னா, என் ஸ்கூல்ல எனக்கு சீனியரா இருந்த நிறைய பேர் அந்தக் காலேஜ்ல இருந்தாங்க. மேனேஜ்மென்ட் சீட்லதான் சேர்ந்தேன். அதனால, இங்கதான் சேரப்போறோம்ங்கிறது முன்னாடியே தெரியும். நிறைய சினிமாக்களைப் பார்த்துட்டு ‘காலேஜ் இப்படிதான் இருக்கும்’னு விதவிதமான கற்பனையோட போனேன். அதேபோல முதல் நாள்லயே கிளாஸ் கட் அடிக்கவும் செய்தேன். காலேஜுடைய முதல் நாள் மறக்கக்கூடாதுன்னுதான். கட் அடிச்சுட்டு அடிக்கடி ஊட்டி கிளம்பிப் போயிடுவோம். ஒருமுறை போன இடத்துல நல்ல மொபைலைத் தொலைச்சுட்டேன். அதைத் தேடுறதுக்காக தொடர்ந்து நாலு நாள் மூணு கார்ல போனோம். அதுக்கு, புது மொபைலையே வாங்கியிருக்கலாம். கடைசி வரை அந்த மொபைல் கிடைக்கலை.

ஃபர்ஸ்ட் இயர்... ஃபர்ஸ்ட் டே!

திவ்யா சத்யராஜ்

எத்திராஜ் கல்லூரியில நியூட்ரிஷன் கோர்ஸ்ல சேர்ந்த நாள்கள் பசுமையா நினைவுல இருக்கு. காலேஜ்ல சேர்ந்து ரெண்டு மூணு நாள் இருக்கும். கேன்டீன் போய் காபி குடிச்சிட்டிருந்தேன். பக்கத்துல வந்த சில சீனியர்கள் ‘சத்யராஜ் பொண்ணுன்னா ஓவர் பந்தாவா’ன்னு கேட்டு ரகளைய ஆரம்பிச்சாங்க. எனக்குமே ராகிங்லாம் இருந்தாதான் காலேஜ்னு தோணுச்சு. அதனால சீனியர்கள் சொன்ன சில வேலைகளையெல்லாம் மறுக்காம செஞ்சேன். அப்பாவுடைய டயலாக்கையெல்லாம் பேசச் சொல்லிக் கேட்டிருக்காங்க. சொன்னபடியெல்லாம் கேட்டதாலேயே பிறகு எல்லா சீனியர்களுமே எங்கூட நல்லாப் பேச, பழக ஆரம்பிச்சிட்டாங்க.

ஃபர்ஸ்ட் இயர்... ஃபர்ஸ்ட் டே!

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ வெங்கட்

நான் கோயம்புத்தூர்ல காலேஜ்ல நுழைஞ்ச நாள்கள் ஒருநாளும் மறக்காது. ஏன்னா, அங்கதான் மனைவி அஜந்தா கிடைச்சாங்க. அவங்க செகண்ட் இயர். நான் டைரக்ட் செகண்ட் இயர்ல போய்ச் சேர்றேன். கிளாஸ்ல நாங்க ரெண்டு பேரும் ஒரே பெஞ்ச்ல உட்கார்ந்திருந்தோம். ஆரம்பத்துல முறைச்சிட்டிருந்தோம். பிறகு வழக்கமான புரப்போசல், நான்தான் காதலைச் சொன்னேன். அடுத்த சில நாள்கள்ல அவங்களும் சம்மதம் சொல்லிட்டாங்க. அப்புறமென்ன, காலேஜ் முடியற வரைக்குமே வாழ்க்கை ஜாலியாப் போயிட்டிருந்தது. கோயம்புத்தூர்ல நாங்க சேர்ந்து சுத்தாத இடம், தியேட்டரே இல்லை.

ஃபர்ஸ்ட் இயர்... ஃபர்ஸ்ட் டே!

கிரிக்கெட் வீரர் சாய் கிஷோர்

ஒரு காலேஜ் இல்ல, எங்கிட்ட ரெண்டு காலேஜ் ஸ்டோரி இருக்கு. `கம்ப்யூட்டர் இன்ஜினீயர்’ ஆசையில முதல்ல எஸ்.ஆர்.எம். காலேஜ்ல அட்மிஷன் போட்டு காலேஜும் திறந்திடுச்சு. முதல் நாள் நானும் என் அண்ணனும் (இரட்டையர்கள்) ஒண்ணா கிளம்புனோம். அம்மா, ‘நான் வேணும்னா வந்து டிராப் பண்ணட்டுமா’ன்னு எல்லாம் கேட்டது நினைவிருக்கு. ஆனா, ஒரு மாசம்தான் போனேன். அதுக்குள்ளேயே, ‘இந்தக் காலேஜ் நமக்கு செட் ஆகாது’ன்னு தோணிடுச்சு. ஏன்னா, கிரிக்கெட் மேட்ச் போகணும்னா, அனுமதி வாங்கறது பெரும்பாடா இருந்தது.

அதனால, நல்ல ஒரு நாளாப் பார்த்து சத்தமில்லாம, நின்னுட்டேன். பிறகு, விவேகானந்தாவுல பி.சி.ஏ. கோர்ஸ்ல சேர்ந்தேன். இங்க கிளாஸ்ல மொத்தம் 50 பேர். நான் கடைசியாச் சேர்ந்ததால 51-வது ஆள். அதனால கிளாஸ்ல எல்லோருமே என்னை ‘51’ன்னு நம்பரைச் சொல்லித்தான் கூப்பிட்டாங்க. அது ஒரு மாதிரி ரவுசா இருக்கும். ஆனா, இங்க சீக்கிரமே பசங்ககூட செட் ஆயிட்டேன்.

ஃபர்ஸ்ட் இயர்... ஃபர்ஸ்ட் டே!

ஸ்மிருதி வெங்கட்

சென்னை எம்ஓ.பி.வைஷ்ணவாவுல எலக்ட்ரானிக்ஸ் மீடியாவுல சேர்ந்தேன். சீனியர்கள் ஜாலியாக் கலாய்ச்சாங்களே தவிர, ராகிங்லாம் கிடையாது. ஆனா சேர்ந்த கொஞ்ச நாள்லயே ‘நாட்டி’ன்னு பேர் வாங்கிட்டேன். அதனால புரபசர்கள் சிலருக்கு என்னைப் பிடிக்காமப்போச்சு. அதேபோல கொஞ்ச நாள்லயே சின்னதா ஒரு ஆக்சிடென்ட். அதனால காலேஜ் போக முடியலை. அட்டெண்டன்ஸ் இல்லாததால முதல் செமஸ்டரை முடிக்கவும் முடியலை. பிளஸ் டூ வரைக்கும் 90%க்கு மேல எடுத்திட்டிருந்த மகள், காலேஜ்ல முதல் செமஸ்டரே எழுதலைன்னா வீட்டுல விடுவாங்களா... கத்தித் தீர்த்துட்டாங்க. அடிபட்டது சரியாகி மறுபடி காலேஜ் வந்ததும் ஒரு வைராக்கியம் வந்திடுச்சு. சின்சியராப் படிக்கத் தொடங்கிட்டேன். அடுத்தடுத்த செமஸ்டர்ல நல்ல மார்க் வாங்கியதுடன், விஜய் டிவியில் இண்டெர்ன்ஷிப் போய் அங்கயும் காலேஜுக்குப் பேர் வாங்கிக் கொடுத்ததுல ஆரம்பத்துல என் மேல கோபமா இருந்த புரபசர்களெல்லாம் கூல் ஆகிட்டாங்க. காலேஜ்ல வெளியில வந்தப்ப அவுட்ஸ்டேண்டிங் ஸ்டூடன்ட்டா வந்தேன்.

ஃபர்ஸ்ட் இயர்... ஃபர்ஸ்ட் டே!
ஃபர்ஸ்ட் இயர்... ஃபர்ஸ்ட் டே!
ஃபர்ஸ்ட் இயர்... ஃபர்ஸ்ட் டே!
ஃபர்ஸ்ட் இயர்... ஃபர்ஸ்ட் டே!
ஃபர்ஸ்ட் இயர்... ஃபர்ஸ்ட் டே!
ஃபர்ஸ்ட் இயர்... ஃபர்ஸ்ட் டே!
ஃபர்ஸ்ட் இயர்... ஃபர்ஸ்ட் டே!