சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

கனாக் கண்டேனடி!

சஞ்சிதா ஷெட்டி
பிரீமியம் ஸ்டோரி
News
சஞ்சிதா ஷெட்டி

ரெண்டு கனவுகள் அடிக்கடி வருது. ஒண்ணு, சூப்பர் உமன் மாதிரி நிறைய பவர்ஸோடு ஆக்‌ஷன்ல இறங்கற கனவு.

கொரோனா பீதியில் படுத்தால் தூக்கம் வர மறுக்கிறது பலருக்கு. மனதை மடைமாற்ற, ‘உங்களுக்கு அடிக்கடி வரும் கனவு என்ன; எதனால் அந்தக் கனவு வந்ததென நினைக்கிறீர்கள்’ எனக் கேட்டோம்...
கனாக் கண்டேனடி!

பார்வதி நாயர்

ரெண்டு கனவுகள் அடிக்கடி வருது. ஒண்ணு, சூப்பர் உமன் மாதிரி நிறைய பவர்ஸோடு ஆக்‌ஷன்ல இறங்கற கனவு. நான் தைரியமான பொண்ணா இருக்கறதால இந்தக் கனவு வந்திருக்கலாம்னு நினைக்கிறேன். இன்னொண்ணு, ரியல் லைஃப்ல எப்ப நடக்குமோன்னு ஏங்க வைக்கற கனவு.

அதாவது, சர்வதேச அளவுல எனக்கு மிகப்பெரிய அங்கீகாரமும் அடையாளமும் கிடைக்கிற விழாவுல நான் கலந்துக்கிட்டு ஒரு அவார்டு வாங்குறேன். ஏ.ஆர்.ரஹ்மான் சார் ரெண்டு ஆஸ்கரைக் கைகள்ல‌ ஏந்தியபடி நின்னாரே, அதேபோல நானும் விருதுகளோடு நிக்குறேன். அந்த விருது என்னுடைய‌ நடிப்புக்கா, சமூக சேவைக்கா அல்லது டைரக்‌ஷனுக்கான்னு தெரியல. இந்தக் கனவு ராத்திரியில மட்டுமல்ல, பகல்லகூட வந்திருக்கு.

கனாக் கண்டேனடி!

சஞ்சிதா ஷெட்டி

அட, இது நல்லா இருக்கே. ‘சூதுகவ்வும்’ல கனவுக்கன்னி ஷாலுவா நடிச்சிருக்கேன். கனவு பத்தி எங்கிட்டேயேவா! கனவை நம்பினால் தான் கனவு. இல்லேனா, ‘நாம நினைச்சதால வந்தது’ன்னு சிம்பிளா எடுத்துட்டு, அடுத்த வேலையைப் பாக்கப் போயிடுவோம். நான் தியானம், ஆன்மிகம்னு இருக்கறதால, ஏகப்பட்ட கனவுகள் வந்திருக்கு. ஆனா, காலையில எழுந்து பார்த்தா, எதுவும் நினைவில் இருக்காது. அதைப்போல நம்ப முடியாத கனவுகளும் வந்திருக்கு.

உதாரணம் சொல்லணும்னா, கடலை அப்படியே கயிறாக்கறது மாதிரி கனவு வந்திருக்கு. கடலை எப்படிக் கயிறாக்க முடியும்? சாத்தியமே இல்லியே! வேணும்னா, கிராஃபிக்ஸ்ல பண்ணிக்கலாம். அதுக்கு ஹெவி பட்ஜெட் ஆகும்.

அதேநேரம், நான் காண விரும்புகிற, நிறைவேறணும்னு ஆசைப்படற கனவு ஒண்ணு இருக்கு. ‘எவரெஸ்ட் சிகரம் மீது ஏறணும்’ங்கிறதுதான் அது. இந்தக் கனவு சாத்தியமாகணும்னா நான் கனவு மட்டும் கண்டா போதாது. ட்ரெக்கிங் செய்யணும். மலையேறுறதுக்கான ப்ராக்டீஸ் பண்ணணும்... அப்படி அதுக்கான ஒர்க் அவுட்ஸை பண்ணினால்தான் சாத்தியமாகும்.

கனாக் கண்டேனடி!
me_jackline

ஜாக்குலின்

என் அம்மாதான் இப்போ நாங்க இருக்கிற வீட்டைக் கட்டினாங்க. அது மாதிரி, எனக்குப் பிடிச்ச மாதிரி ஒரு ட்ரீம் ஹவுஸ் கட்டணும்னு ரொம்ப நாள் ஆசை. அது எப்படி இருக்கணும்னு அடிக்கடி யோசிப்பேன். எவ்வளவு அசதியா தூங்கப்போனாலும் நான் இந்த ட்ரீம் ஹவுஸை பத்தி நினைச்சுட்டுதான் தூங்குவேன். அதுதான் அடிக்கடி கனவாவும் வரும். கனவுல அந்த வீடு வந்ததுனா, எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும். அந்த ட்ரீம் ஹவுஸ்ல எனக்குப் பிடிச்சது எல்லாமே இருக்கும். சினிமா பார்க்க ஒரு ரூம் இருக்கும். அதுல புரொஜெக்டர் எல்லாம் ஜாலியா படங்கள் பார்க்கற மாதிரி இருக்கும். கனவுல நான் அந்த வீட்டுல இருக்கிற மாதிரி, நிஜத்திலயும் ஒரு நாள் இருப்பேன்னு நம்பிக்கை இருக்கு.

கனாக் கண்டேனடி!

ரஞ்சித் ஜெயக்கொடி

நான் ஒரு ஃபிளைட்டை மிஸ் பண்ணிட்டேன். உடனே வேறொரு ஃபிளைட்ல ஏத்தி விடுறாங்க. ஃபிளைட்டுக்குள் எல்லாரும் மாஸ்க் போட்டுகிட்டுதான் உட்கார்ந்திருக்காங்க. உள்ளே போன என்னை யாரும் சட்டையே செய்யலை. ஃபிளைட் கிளம்பி ரொம்ப தூரம் பறந்து ஒரு கடற்கரையில போய் என்னை மட்டும் இறக்கி விட்டுட்டு மறுபடியும் டேக் ஆஃப் ஆகிப் போயிடுது. இப்படியொரு கனவு. என் கணக்குப்படி இப்ப இருக்கிற கொரோனாச் சூழலுடன் தொடர்புடையதாகவே இதை நினைக்கிறேன். மாஸ்க் இப்ப நாம எல்லாருமே போட்டுட்டிருக்கோம். தனியா கடற்கரையில கொண்டுபோய் விடறது க்வாரன்டீனுக்கோ என்னவோ?

கனாக் கண்டேனடி!

நல்லப்பன் மோஹன்ராஜ்

ஸ்கூல் நாள்கள்ல இருந்தே பாக்குறது, விளையாடுறதுன்னு எல்லாமே ஃபுட்பால்தான். அதனாலயோ என்னவோ, கனவுலயும் அதிகமா ஃபுட்பால்தான் வந்திருக்கு. ஒருநாள் வெறித்தனமா பிராக்டீஸ் பண்ற மாதிரி வரும். இன்னொரு நாள் மோஹன் பகான், ஈஸ்ட் பெங்கால் ஆடற கொல்கத்தா டெர்பில விளையாடுற மாதிரி வரும். இந்தியன் டீமுக்கு ஆடுறது, பைசைக்கிள் கிக் அடிக்கிறதுன்னு கணக்கில்லாம வந்திருக்கு. கஷ்டப்பட்டு உழைச்சதுல பிறகு இந்தக் கனவுகள்ல நிறைய நனவாச்சு. மோஹன் பகானுக்கு ஆடினேன். இந்தியன் டீமுக்கும் ஆடினேன். பைசிக்கிள் கிக்ல கோல்தான் அடிக்க முடியல. ஆனால், டிஃபண்டர் அப்டிங்கிறதால, பைசைக்கிள் கிக் மூலமா கிளியர்ஸ் பண்ணியிருக்கேன்.

கனாக் கண்டேனடி!

கலையரசன்

அடிக்கடி பாம்பு என் கனவுல வருது. என்னைச் சுத்தி நிறைய பாம்புகள் இருக்கிற மாதிரி வரும். எல்லாம் சேர்ந்து என்னைத் துரத்தற மாதிரியும், நான் தப்பிச்சு ஓடுற மாதிரியும் வந்திருக்கு. எனக்குப் பாம்புனா பயம். அதனால, அடிக்கடி வருதோன்னு நினைக்கிறேன். அதே மாதிரி, சினிமா தொடர்புடைய நிறைய கனவுகள் வந்திருக்கு. பெரும்பாலும் அந்தக் கனவுகளை மறந்திடுவேன். சில கனவுகள் கலைஞ்சு எழுந்ததுமே, 'மறந்திடக் கூடாது'ன்னு டைரியில எழுதியெல்லாம் வச்சிருக்கேன்.

கனாக் கண்டேனடி!

பி.ஜி.முத்தையா

அம்மாதான் அடிக்கடி கனவுல வர்றாங்க. அவங்க இறந்து மூணு வருஷமாச்சு. இருந்தபோது நடந்த நிகழ்வுகளைப் பத்திப் பேசுவாங்க. அடுத்து செய்ய வேண்டிய வேலைகளை, அதுபத்தின அவங்க யோசனைகளைத் தெளிவாச் சொல்வாங்க. இப்படி அவங்க பேசிட்டே இருக்கிறதால, அவங்க இழப்பின் வலிகூடக் கொஞ்சம் தணிஞ்ச மாதிரி இருக்கு. ஒருத்தர் நம் வாழ்வில் நம் உணர்வுகளுடன் ஆழமா ஒன்றிப்போயிருந்தா, இந்த மாதிரி எப்பவும் கூடவே தொடர்வாங்கன்னு சிலர் சொல்லக் கேட்டிருக்கேன். ஒரு நாலு நாள் என் அம்மா என் கனவுல வரலைன்னா நானே தேட ஆரம்பிச்சிடுவேன்.

கனாக் கண்டேனடி!

ஆயிஷா

ஏதோவொரு வெளிநாட்டுல, பாஷை தெரியாத ஆளுங்க கூட நின்னு ஷாப்பிங் செய்துட்டிருக்கிற மாதிரி கனவு ஒண்ணு அடிக்கடி வந்துட்டே இருக்கு. எந்த நாடுன்னு இதுவரை கண்டு பிடிக்கலை. பொதுவா ட்ராவல் பண்ண விரும்பற பொண்ணு நான். ஆனா, ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு புது நாடா தெரியுது. அதேபோல கொஞ்ச நேரம்னாலும், அந்த நாட்டை நல்லா ரசிச்சுச் சுத்திப் பார்க்கிறேன். அந்த நேரத்துல என்னை யாராச்சும் எழுப்பிட்டா, அவ‌ங்க அவ்ளோதான். என்ன ஒரு வருத்தம், கனவுலதான் எல்லா நாடுகளையும் சுத்திட்டிருக்கேன். நிஜத்துல நடந்தா எவ்ளோ நல்லா இருக்கும்?