Published:Updated:

“அந்த நாள் ரொம்ப ஸ்பெஷல்!”

அஞ்சனா சந்திரன்
பிரீமியம் ஸ்டோரி
News
அஞ்சனா சந்திரன்

சந்திரனை முதன் முதலாச் சந்திச்சது ஒரு தீபாவளி நாளில்தான். அந்த ஞாபகம் மனசுல அப்படியே இருக்கு.

“பண்டிகை, திருவிழா என மறக்க முடியாத தினங்களின் நினைவுகள் அழுத்தமாக மனதுக்குள் பதிந்து போயிருக்கும். இவர்களிடம் அந்த ஞாபகங்களைக் கிளறி விட்டோம்...
“அந்த நாள் ரொம்ப ஸ்பெஷல்!”

இயக்குநர் விருமாண்டி

அப்பா பெரிய கருப்புத்தேவர் அப்போது சென்னையில் தங்கியிருந்து நடித்துக்கொண்டிருந்தார். எங்க ஊர் கருமாத்தூரில் மகா சிவராத்திரி. செலவுக்கு அப்பா பணம் அனுப்புவார்னு வீட்டுல எல்லாரும் எதிர்பார்த்திட்டிருந்தோம். முக்கியமான திருவிழாங்கிறதால் சொந்த பந்தம்னு ஊர் ரெண்டுபடும். திருவிழாவுக்கு முதல் நாள் மணி ஆர்டரில் 100 ரூபாய் அனுப்பி வச்சிருந்தார் அப்பா. ஷூட்டிங் இல்லாததால் பணம் புரட்ட முடியலைன்னும், அதனால் சிக்கனமா செலவு செய்யச் சொல்லியும் கடிதம் எழுதியிருந்தார்.

பின் குறிப்புன்னு போட்டு, கட்டியிருந்த ஹெச்.எம்.டி.வாட்ச்சை அடகு வச்சுதான் இந்தப் பணத்தையே அனுப்பறதாகவும் என்னுடைய அம்மாவுக்கு அந்த விஷயம் தெரிய வேண்டாம்னும் குறிப்பிட்டிருந்தார். எனக்கு நிலைமையைப் புரிய வைக்க அதைத் தெரிவித்திருந்தார்.

அதன்பிறகு எவ்வளவோ சிவராத்திரிகளும் மத்த பண்டிகைகளும் வந்துபோனாலும் அந்த சிவராத்திரியையும், அந்த நூறு ரூபாய் வந்த விதத்தையும் மறக்க முடியலை.’’

“அந்த நாள் ரொம்ப ஸ்பெஷல்!”

பாடகர் வேல்முருகன்

சிறு வயது முதலே பொங்கல், என் மனசுக்கு ரொம்பவே பிடிச்ச ஒரு பண்டிகை. வாழ்க்கையின் முக்கியமான நிகழ்வுகள் அந்த நாள்ல நடந்துட்டே வந்திருக்கு. பத்து வருஷத்துக்கு முன்னாடி, அதாவது 2011 பொங்கலுக்கு ‘ஆடுகளம்’ படம் ரிலீஸ் ஆகுது. சரியா அடுத்த பொங்கலுக்கு சென்னை போரூர்ல சொந்தமா வீடும் ஒரு காரும் வாங்கினேன்.

அதேபோல 2020 பொங்கல் பண்டிகையில்தான் சென்னை கே.கே நகர் வீட்டு கிரகப் பிரவேச நிகழ்ச்சியும் நடந்தது. நமக்கு முக்கியமான பண்டிகை எப்பவுமே பொங்கல்தான் சார்.

“அந்த நாள் ரொம்ப ஸ்பெஷல்!”

அஞ்சனா சந்திரன்

சந்திரனை முதன் முதலாச் சந்திச்சது ஒரு தீபாவளி நாளில்தான். அந்த ஞாபகம் மனசுல அப்படியே இருக்கு. முதல் கட்டத்தில் எங்களுடைய காதல் மேஜிக் மாதிரிதான் தோணுச்சு. பரஸ்பரம் ஒருத்தருக்கு ஒருத்தர் புரிஞ்சு தெரிஞ்சு வந்ததே எங்களுடைய காதல். அவர் என் முகம் பார்த்துச் சிரிக்க, கண்ணும் கண்ணும் பேசிக்க, மனசாலயும் ஒண்ணானோம். அந்த மகிழ்ச்சி ஏற்கெனவே இருந்த பண்டிகைக் கொண்டாட்டத்தைப் பல மடங்கு கூட்டியது.

அடுத்து, எங்களது பேரன்பின் அடையாளமாக மகன் ருத்ராக்ஷ் 2018-ல் பிறந்ததும் தீபாவளியை ஒட்டிய ஒரு நாள்தான். எனவே பொதுவாகவே தீபாவளின்னா எனக்கு ஸ்பெஷல்.

“அந்த நாள் ரொம்ப ஸ்பெஷல்!”

அகல்யா வெங்கடேசன்

பொதுவாக பண்டிகை என்றாலே வீடே கலகலப்பாக மாறிடும். அதுவும் குறிப்பிட்டுச் சொல்லணும்னா எங்க வீட்ல எப்பவும் பொங்கல் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடுவோம். ஒவ்வொரு பொங்கல் நாளிலும் எங்க அம்மா ‘ஆனி போய் ஆடி வந்தா நீ டாப்பா வந்துடுவேன்’னு ‘களவாணி’ பட டயலாக்கைச் சொல்லுவாங்க. இப்போ வரைக்கும் அவங்க சொல்ற வார்த்தை நிஜமாகியிருக்கு. ஆரம்பத்தில் அம்மா சொன்னப்போ ‘இமையம்’ சேனலில் வி.ஜே-வாக இருந்தேன். பிறகு, ஆதித்யா சேனலுக்கு வந்தேன். பிறகு படங்களில் நடிச்சேன். திடீர்னு ஜோதிகா மேம்கூட எல்லாம் நடிச்சேன். அப்போதான் அம்மா சொல்றது நிஜமாகவே உண்மையாகிடுச்சுன்னு ரொம்பவே சந்தோஷமா இருந்துச்சு. அதனாலேயே எனக்குப் பொங்கல் பண்டிகை எப்பவும் ஸ்பெஷல்!

“அந்த நாள் ரொம்ப ஸ்பெஷல்!”

மனோபாலா (நடிகர்- இயக்குநர்)

நான் இயக்குநர் ஆகுறதுக்கு முன்னாடி, கமல்ஹாசன் வீடுதான் எங்களுக்கெல்லாம் சரணாலயம். சந்தானபாரதி, நான், அனந்து, ஆர்.சி.சக்தின்னு கமலுக்குப் பிடிச்ச ஆட்கள் இருப்பாங்க. தீபாவளி ரொம்பச் சிறப்பா இருக்கும். அப்பவே இருபதாயிர ரூபாய்க்கு மேல பட்டாசுகள் வாங்கி வச்சிருப்பார். எல்லாருக்கும் டிரஸ் எடுத்துக் கொடுப்பார். நாங்க கொண்டாடின ஒரு தீபாவளியில மொட்டை மாடிக்குப் போய், ராக்கெட் பத்த வச்சோம். அப்ப கமலோட மாமா ஒருத்தர், ‘ராக்கெட்டை ஒரு காலி சோடா பாட்டிலுக்குள் வச்சுக் கொளுத்தினா, நேரே மேல்நோக்கிப் போய் வெடிக்கும்’ன்னார். கமல் ராக்கெட் கொளுத்தும் போது, பாட்டில் சாய்ந்து, ராக்கெட் விர்ருனு அவர் வீட்டுக்கு எதிரே இருக்கற பெட்ரோல் பங்கிற்குப் போயிடுச்சு. இப்ப அந்த பெட்ரோல் பங்க் மால் ஆக மாறிடுச்சு. ராக்கெட் போனதும் அங்கே இருக்கறவங்க பதறிட்டாங்க. நாங்க எல்லாரும் பயந்து நடுங்கி மொட்டை மாடியில் இருந்து கீழிறங்கி வந்து சாப்பிடுற மாதிரி நடிச்சோம். இப்ப நினைச்சாலும் சிரிப்பு வருது. கமல் எல்லாருக்கும் டிரஸ் எடுத்து, கூடவே பணமும் வச்சுக் கொடுப்பார். தீபாவளிக்கான பர்ச்சேஸிங் பிராசஸே பெரிய திருவிழா மாதிரி நடக்கும்.

“அந்த நாள் ரொம்ப ஸ்பெஷல்!”

கு.உமாதேவி (பாடலாசிரியர்)

தீபாவளி, வருஷப்பிறப்புனாலே சட்னு ஞாபகத்துக்கு வர்றது, வீட்ல இட்லி, தோசை பண்ணுவாங்க என்பதுதான். வந்தவாசி பக்கம் அத்திப்பாக்கம்தான் எங்க ஊரு. இப்பவரை என் மனசுல இருக்கற தீபாவளியா ஒரு தீபாவளி இருக்கு. அப்ப எனக்கு நாலு வயசிருக்கும். திருவிழாவுல இட்லி, தோசை, அதிரசம்னு பலகாரங்கள் பண்ணுவாங்க. இட்லி தோசையையும் அன்னிக்குத்தான் வீடுகள்ல பார்க்க முடியும். மதிய சாப்பாட்டுக்கு மாட்டுக்கறி இருக்கும். ஸோ, சொந்த பந்தங்கள் மாடு வெட்டி, கறியைப் பங்குபிரிச்சுப்பாங்க. அதிகாலை ரெண்டரை மணிக்கு எங்க அம்மா, வீட்டுவாசலைச் தெளிச்சு, கோலம்போட்டு எங்க பங்கு மாட்டுக் கறியை வாங்குறதுக்காகப் பக்கத்துத் தெருவுக்குக் கிளம்பினாங்க. அதை எடுத்துட்டு வர கையில ஒரு பாத்திரம் வேறு கொண்டு போனாங்க. அதைப் பார்த்த நானும் அவங்க கூட வாரேன்னு அடம்பிடிச்சு, ஏன் எதுக்குன்னு தெரியாமலேயே ஒரு சின்னப் பாத்திரத்தைக் கேட்டு வாங்கி, கையில கொண்டு போனேன்.

எங்க ஊர்லேயே அஞ்சு தெருதான். அதுல நீளமான தெரு அதான். போற வழியெங்கும் லைட் எரியுது. வீடுகள் முன்னாடி அங்கங்கே வெட்டின மாட்டுக்கறியைப் பகிர்ந்துட்டு இருந்தாங்க. சலசலன்னு பேச்சு சத்தம். மரத்தூண்கள்ல மாட்டுத் தொடை தொங்கும். வழியெங்கும் அந்தக் காட்சி கண்முன் விரியுது. எங்க அப்பா பங்கு சேர்ந்திருந்த அண்ணனோட வீடு தெருக்கோடியில இருந்துச்சு. நாங்க அங்கே போனதும், அப்ப மாடு வெட்டுறதுக்கு ரெடியான அண்ணன், ‘பாப்பாவைத் திரும்பி நிற்க வைங்க’ என்று சொல்ல, அம்மாவும் ஒரு துண்டால என்னை மறைச்சாங்க. மாடு எப்படி வெட்டினாங்கன்னு தெரியாது. அதன்பிறகு மாடு வெட்டினதை நான் பார்த்ததும் இல்ல. திரும்பி வரும்போது, பொழுது விடியவும் ஆரம்பிச்சிடுச்சு.