Published:Updated:

திரை விலகியது!

நரேன்
பிரீமியம் ஸ்டோரி
நரேன்

நான் தமிழில் அறிமுகமான ‘சித்திரம் பேசுதடி’ படம். ஐம்பது நாள்களில் படப் பிடிப்பை முடிச்சி ட்டோம். ஆனா, பல மாத போராட்ட ங்களுக்குப் பிறகு அது ரிலீஸ் ஆச்சு

திரை விலகியது!

நான் தமிழில் அறிமுகமான ‘சித்திரம் பேசுதடி’ படம். ஐம்பது நாள்களில் படப் பிடிப்பை முடிச்சி ட்டோம். ஆனா, பல மாத போராட்ட ங்களுக்குப் பிறகு அது ரிலீஸ் ஆச்சு

Published:Updated:
நரேன்
பிரீமியம் ஸ்டோரி
நரேன்
தியேட்டர்கள் திறந்தாச்சு. உங்களுக்குத் தியேட்டரில் நிகழ்ந்த சுவாரஸ்ய அனுபவம் என்ன என்று இவர்களிடம் கேட்டோம்.
திரை விலகியது!

சதீஷ்

“சேலம் அருகே இளம்பிள்ளைதான் எங்க ஊர். எங்க வீட்டுக்கு எதிரிலேயே ரெண்டு தியேட்டர்கள் இருக்கு. ஸ்கூல் விட்டதும் தியேட்டர்ல போய் விளையாடுவோம். ஆபரேட்டர்ல ரூம்ல உட்கார்ந்து அலப்பறையா படம் பார்ப்போம். ‘எதிர்நீச்சல்’ முதல் ஷோ பார்த்த அனுபவம் மறக்க முடியாது. நானும் சிவகார்த்திகேயனும் ஒண்ணா உட்கார்ந்து படம் பார்த்திட்டிருந்தோம். ‘இந்தந்த சீன்களில் எல்லாம் கைதட்டுவாங்க’ன்னு நாங்க நினைச்சிருந்த மாதிரியே ஆடியன்ஸும் என்ஜாய் பண்ணினாங்க. அவங்க கைதட்டும்போதெல்லாம் நானும் சிவாவும் அவ்ளோ சந்தோஷப்பட்டோம். இதைப் போல மறக்க முடியாத இன்னொரு அனுபவம். விஜய் சாரோட ‘கத்தி’ நடிக்கும்போது, தனுஷ் சாரோட ‘விஐபி’ படம் ரிலீஸ் ஆகியிருந்தது. காசி தியேட்டர்ல படம் போட்டதுக்குப் பிறகு கடைசி சீட்டுல விஜய் சாரும் நானும் ஒண்ணா உட்கார்ந்து படம் பார்த்தோம். ‘யாராவது கண்டுக்கிட்டா என்னாகும்’னு எனக்கு ஒரு பதற்றம் இருந்துச்சு. ஆனா, விஜய் சார் ரொம்ப கூலா இருந்தார். ஒரு ஹீரோ, இன்னொரு ஹீரோ படத்தை தியேட்டர்ல போய்ப் பார்த்து ரசிக்கறது எனக்கு ஆச்சரியமாகவும் சந்தோஷமாகவும் இருந்துச்சு.”

திரை விலகியது!

நரேன்

“நான் தமிழில் அறிமுகமான ‘சித்திரம் பேசுதடி’ படம். ஐம்பது நாள்களில் படப் பிடிப்பை முடிச்சி ட்டோம். ஆனா, பல மாத போராட்ட ங்களுக்குப் பிறகு அது ரிலீஸ் ஆச்சு. படம் வெளியான அன்று உதயம் தியேட்டர்ல நானும் மிஷ்கினும் சேர்ந்து படம் பார்க்கப் போயிருந்தோம். தியேட்டர்ல கூட்டமே இல்ல. வித்தியாசமான கதைக்களம் என்பதால படம் புரியலபோல. சத்தமா பேசிக்கிட்டும், திடீர் திடீர்னு சம்பந்தமே இல்லாம கைதட்டிக்கிட்டும் இருந்தாங்க. சிலர் தம்மடிக்க வெளியே போனாங்க. மனசு உடைஞ்சு அழுதுட் டேன். மிஷ்கின் ‘படத்தை ஜனங்க ஏத்துக்கறதுக்கு கொஞ்சம் டைம் ஆகும். நம்பிக்கை இழக்காதீங்க நரேன்’னு எனக்கு ஆறுதல் சொன்னார். அதன்பிறகு ‘வாளமீனு’ பாட்டு ஹிட்டாகி ‘என்ன படம்?’னு எல்லாரையும் கேட்க வச்சது.”

திரை விலகியது!

ஸ்ரேயா அஞ்சன்

“நடிக்க வர்றதுக்கு முன்னாடி நான் ‘ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ’ போனதே இல்லை. அதனால முதல்முதலா ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ அனுபவம்தான் என்னுடைய மறக்க முடியாத தியேட்டர் அனுபவம். பொதுவா விடியற்காலையில நல்லாத் தூங்கற நான், சென்னையில ‘மாஸ்டர்’ பார்க்க அலாரம் வச்சு எழும்பிப் போனேன். விஜய், விஜய் சேதுபதி ரெண்டு பேருடைய ரசிகர்களுடைய ஆரவாரங்களுக்கு மத்தியில் நானுமே என்ஜாய் பண்ணிப் படத்தைப் பார்த்தேன்.”

திரை விலகியது!

ஓவியர் மருது

“பள்ளிக்கூடத்துக்கு அடுத்து நான் அதிகம் கற்றுக்கொண்டது தியேட்டர்களில்தான். சோலைமலைத் தாத்தா அதிகமான பீம்சிங் படங்களுக்கு எழுதினார். அவருடன் போய்த்தான் மதுரை ரீகல் டாக்கீஸ் எனக்கு அறிமுகமானது. அங்க பார்த்த ‘யுலீசஸ்’ படம் இன்னும் மனசுல அப்படியே நிற்குது. அந்தப் படத்துல ஒற்றைக் கண் பூதமெல்லாம் வரும். அதேபோல அங்க நிறைய அனிமேஷன் படங்களும் பார்த்திருக்கேன். டிக்கெட் எடுக்கிற இடத்துலயே அடுத்த மாதம் வெளியாகவிருக்கும் படங்கள், நடித்தவர்கள், இயக்குநர்கள் பெயர்கள் எழுதப்பட்டிருக்கும். அந்தக் காலத்தைத் திருவிழாக்காலம்னு சொல்லலாம். பின்னாளில் நான் ஓவியன் ஆனதற்கும் அதுதான் அடிப்படை. போதிய வசதிகள், கேமராக்கள் இல்லாத போதே அயல்நாட்டுப் படங்கள் அக்கறையுடன் தயாரிக்கப்பட்டன. சில சமயம், அடுத்தடுத்த நாள்கள் போறப்ப, அதே நபர் அதே நாற்காலியில உட்கார்ந்து படம் பார்த்திட்டிருப்பார். ரீகல் தவிர்த்து நியூ சினிமா, பரமேஸ்வரி தியேட்டர்களும் என் கனவுகளுக்கு வண்ணம் பூசின.”

திரை விலகியது!

பாக்யராஜ் கண்ணன்

“எங்க ஊரான சின்ன ராமநாதபுரம் டென்ட் கொட்டகையில் அம்மாகூடப் போய் எம்.ஜி.ஆர் படங்கள் பார்த்த நாள்கள் அப்படியே மனசுல பதிஞ்சு கிடக்குது. என்ன தின்பண்டம் கேட்டாலும் வாங்கித் தந்து கூட்டிட்டுப் போவாங்க அம்மா. அம்மாவுக்குப் பிடிச்ச எம்.ஜி.ஆர் அந்த நாள்களிலேயே எனக்கும் பிடிச்சவராயிட்டார். சினிமாவின் மீதான பிரியம் வளரத் தொடங்கியதும் அந்த நாள்கள்தான். அப்படியே படிப்பு முடிஞ்சதும் சினிமாவுக்குள் வந்துட்டேன்.”

திரை விலகியது!

சரவணன்

“கல்லூரி படிச்சிட்டிருந்த நேரம். நண்பர்களுடன் ‘புதிய பாதை’ படம் பார்க்கப்போயிருந்தேன். தியேட்டர்ல மொத்தமா பத்துப் பேர்தான் இருக்காங்க. காட்சிக்குக் காட்சி கைதட்டி விசிலடிச்சு ரசிக்கறேன். ஓரமா கதர் வேஷ்டி சட்டையில் இருந்த ஒருத்தர் என்னைக் கவனிச்சிட்டே இருக்கார். படம் முடிஞ்சதும் எங்கிட்ட வந்த அவர், ‘படம் அவ்ளோ நல்லாவா இருக்கு தம்பி’ன்னு கேக்கறார். ‘ஆமாங்க; சூப்பர் டூப்பர் ஹிட் ஆகப்போகுது பாருங்க’ன்னு சொல்லிட்டு. ‘நீங்க யாரு’ன்னு கேட்டேன். ‘நான்தான் படத்தை வாங்கியிருக்கிற டிஸ்ட்ரிபியூட்டர்’னார். ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகியா சேலத்துல சுத்திட்டிருந்த என்னை சென்னை நோக்கிக் கிளம்ப வச்சதே தியேட்டர் அனுபவங்கள்தான்.”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism