சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

தங்கப்பதக்கம் வாங்கின மாதிரி இருந்துச்சு!

இந்துஜா
பிரீமியம் ஸ்டோரி
News
இந்துஜா

அடிப்படையில நான் தெருக்கூத்துக் கலைஞன். திண்டிவனம் பக்கம் பேராவூர் கிராமத்துல பிறந்து வளர்ந்தேன். அப்பா தெருக்கூத்துக்கலைஞர்.

பரிசோ, பாராட்டோ... ஒலிம்பிக்கில் பதக்கம் கிடைத்துவிட்டதுபோல் நீங்கள் சிலிர்த்த அந்தத் தருணம், உங்கள் வாழ்வில் எப்போது நிகழ்ந்தது? - இவர்களைக் கேட்டோம்.
தங்கப்பதக்கம் வாங்கின மாதிரி இருந்துச்சு!

தலைவாசல் விஜய்

நாராயண குருவாக நான் ஒரு படத்தில் நடித்திருந்தேன். அந்த வேடத்துக்கு நான் மிகவும் நன்றாகப் பொருந்திப்போக, கேரள மக்கள் அந்தப் படத்தை பயபக்தியோடு பார்த்தார்கள். படத்தின் சிறப்புக் காட்சிக்கு, அப்போது முதல்வராக இருந்த அச்சுதானந்தன் வந்திருந்தார். இடைவேளையில் நான் அவரைப் பார்த்து வணக்கம் தெரிவித்தேன். அவர் ‘நான் நாராயண குருவைக் கண்டு’ என்றார்.

தன்னுடைய சிறிய வயதில் நாராயண குருவை நேரில் பார்த்திருக்கிறாராம் அவர். ‘அவருடைய சாயலில் உங்களைப் பார்த்தேன்’ என்றார். அவரிடம் இப்படி ஒரு பாராட்டைப் பெற்றது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இன்றும் பல கேரள வீடுகளில் நாராயணகுரு வேஷம் போட்ட என் புகைப்படத்தைப் பொக்கிஷம் போல வைத்திருக்கிறார்கள்.”

தங்கப்பதக்கம் வாங்கின மாதிரி இருந்துச்சு!
படம்: வி.சதீஷ்குமார்

த.ராமலிங்கம் (கலை இயக்குநர்)

அடிப்படையில நான் தெருக்கூத்துக் கலைஞன். திண்டிவனம் பக்கம் பேராவூர் கிராமத்துல பிறந்து வளர்ந்தேன். அப்பா தெருக்கூத்துக்கலைஞர். அம்மா, கூத்து ரசிகர். அதனால தெருக்கூத்தோட நுணுக்கங்கள் அவங்களுக்குத் தெரியும். இந்தச் சூழல்களால எனக்கும் தெருக்கூத்து கத்துக்கணும்னு ஆசை. ஆனா வாய்ப்பு அமையலை.

அந்தச் சமயத்துல‌தான் ‘கபாலி’க்குக் கலை இயக்குநரா ஒர்க் பண்ண வாய்ப்பு வந்தது. அந்தப் பட வேலைகளுக்குப் போறதுக்கு முன்னாடி, கூத்தைத் கத்துக்கிட்டே ஆகணும்னு முயற்சி எடுத்துக் கத்துக்கிட்டேன். அதே வேகத்துல கூத்தும் ஆடினேன். அதோட நிறைவுநாள்ல நான் ஆடினதைப் பார்த்து மகிழ்ந்த எங்க அம்மா, அவ்ளோ சந்தோஷமானாங்க. ‘நீ நல்லா ஆடினடா தம்பி’ன்னு சொல்லும்போது அவங்க முகத்துலயும் அவ்வளவு சந்தோஷம். அம்மாவுடைய‌ பாராட்டு அவ்ளோ மகிழ்வா இருந்துச்சு.

தங்கப்பதக்கம் வாங்கின மாதிரி இருந்துச்சு!

விஜய் மில்டன்

பாலாஜி சக்திவேலுக்காக ‘மூங்கில் காடுகளே’ பாடல் ஒளிப்பதிவு செய்த சமயம் அது. எங்கள் இருவ‌ருக்கும் இடையில் நல்ல புரிதல் இருந்தது. அடுத்து அவரது ‘காதல்’ ஸ்கிரிப்ட்டை வச்சுக்கிட்டு நிறைய இடங்களுக்குப் போனோம். ஒண்ணும் நடக்கலை. கடைசியாக, இயக்குநர் ஷங்கர் ‘ஒரு கோடி கொடுத்தா பண்ணிடுவியா’ன்னு கேட்க, படம் ஆரம்பிச்சுது. படமும் பெரிய ஹிட்.

அப்ப ஒரு நாள் பாலாஜி சக்திவேலும் நானும் ஒரு இடத்துல உட்கார்ந்து பேசிட்டிருக்கும் போது எதிரே டிவி ஓடிட்டிருந்தது. எதேச்சையா சேனல் மாத்தினப்ப, ஒரு சேனலில் பாலுமகேந்திரா நேர்காணல் போயிட்டிருந்தது. அதில் அவர்கிட்ட, ‘உங்க வாரிசா ஒரு ஒளிப்பதிவாளரைச் சொல்லணும்னா யாரைச் சொல்வீங்க’ன்னு கேட்கிறாங்க. அவர் யோசிக்கவே இல்ல. ‘விஜய் மில்டன் அருமையாக வெளிப்படுகிறார், அவர்கிட்டே பெரிய வித்தை இருக்கு’ன்னு சொன்னார். என் கண்கள் குளமாகிடுச்சு. ‘பேட்டி வருது’ன்னு தெரிஞ்சு பார்த்திருந்தாக்கூடப் பரவால்ல‌. திடீரெனப் பார்க்கும்போது ஒரு பரவசமான உணர்வு கிடைச்சது. யாரைப் பார்த்து சினிமாவுக்கு வந்தேனோ, அவரே என்னைப் பெருமையாக் குறிப்பிட்டது தெய்வீகமான தருணம். மகிழ்ச்சி கரைபுரண்டோடிய நிமிடங்கள் அவை.

தங்கப்பதக்கம் வாங்கின மாதிரி இருந்துச்சு!

ரியோ

என்னுடைய முதல் படம் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ ரிலீஸ் நேரம்ணே. ஃபேமிலி, ஃப்ரெண்ட்ஸ், என்னுடைய யூனிட்னு எல்லாருமே சேர்ந்து தியேட்டருக்குப் போயிருக்கோம். நாங்க பார்க்கற ஸ்கிரீனுக்குப் பக்கத்துலயே இன்னொரு ஸ்கிரீன்ல பப்ளிக் பார்த்துட்டிருக்காங்க. எங்ககூட உட்கார்ந்து படம் பார்த்த இன்னொரு வி.ஐ.பி சிவகார்த்திகேயன்.

படம் முடிஞ்சதும் மொத்தப் பேர் கண்ணுலயும் சந்தோஷக் கண்ணீர். ‘ஹேப்பியா இருக்கு’ன்னு சொன்னார் எஸ்.கே. அவர்கிட்ட இருந்து வந்த அந்த வார்த்தைகள் எனக்குப் பெரிய மகிழ்ச்சியைத் தந்துச்சு.

தங்கப்பதக்கம் வாங்கின மாதிரி இருந்துச்சு!

இனியா

‘வாகை சூடவா’ படத்தின் ஆடியோ லாஞ்ச் மேடையில், பாரதிராஜா சார் ‘ரொம்ப நாளுக்குப் பிறகு, தமிழ் சினிமாவுக்கு நல்லா நடிக்கக்கூடிய நல்ல நடிகை ஒருத்தர் வந்தி ருக்காங்க’ன்னு சொன்னார். இது நான் எதிர்பார்க்காத, என் வாழ்க்கையில் எப்போதும் மறக்கமுடியாத பாராட்டு.

அதேபோல சின்ன வயசுல இருந்தே டான்ஸ், டிராமா, மியூசிக்னு எல்லாத்துலயும் கலந் துட்டே வந்தேன். அதைப் பார்த்துட்டு என்னுடைய கிளாஸ் டீச்சர் பேரண்ட்ஸ் மீட்டிங்ல என் அம்மா அப்பாகிட்ட ‘பொண்ணு எக்ஸ்ட்ரா கரிக்குலர்ல ரொம்ப ஆர்வமா இருக்கா. அவளுக்கு டான்ஸ் முறையா கத்துக்கொடுத்தா, நல்ல எதிர்காலம் இருக்கு’ன்னு சொன் னாங்க. அவங்க பேச்சைக் கேட்டுத்தான் வீட்டுல என்னை கிளாஸிக்கல் டான்ஸ் கிளாஸ்ல சேர்த்து விட்டாங்க. அதனால, எத்தனை பாராட்டுகள் வந்தாலும் பாரதிராஜா சார், என்னுடைய வகுப்பு டீச்சர்... இந்த‌ ரெண்டு பேருடைய பாராட்டும் எனக்கு எப்பவும் மறக்காது.”

தங்கப்பதக்கம் வாங்கின மாதிரி இருந்துச்சு!

இந்துஜா

“சின்ன வயசுல இருந்தே ரஜினி சார் ரசிகை நான். ‘அவரைச் சந்திக்க மாட்டோமா’, ‘அவரோடு நின்னு போட்டோ எடுத்துக்க வாய்ப்பு கிடைக்காதா’ன்னெல்லாம் நினைச்சிருக்கேன். ஆனா, அவரே என் நடிப்பைப் பாராட்டுவார்னு நினைச்சே பார்த்ததில்லை.

தங்கப்பதக்கம் வாங்கின மாதிரி இருந்துச்சு!

கார்த்திக் சுப்பராஜ் சார் டைரக்‌ஷன்ல பிரபுதேவா சார்கூட நான் நடிச்ச ‘மெர்க்குரி’ படம் ரிலீஸானதும், ரஜினி சார் எங்க படத்தைப் பார்த்தார். மொத்த டீமையும் கூப்பிட்டுப் பாராட்டினார். க்ளைமாக்ஸ்ல வாய் பேசமுடியாத, காது கேட்கமுடியாத அந்த போர்ஷன் ரஜினி சாருக்கு அவ்ளோ பிடிச்சிருந்தது. ‘சூப்பர்ப்’னு அவர்கிட்ட இருந்து பாராட்டு கிடைச்சது, சூப்பர் மொமன்ட்!’’