Published:Updated:

காலம் எனும் தேரே!

சீதா
பிரீமியம் ஸ்டோரி
சீதா

யாராச்சும் கஷ்டப்படுறாங்கன்னு எனக்குத் தெரிஞ்சாலே நான் அவங்களுக்கு உதவி பண்ணிடுவேன். ஆனா, அந்த உதவி கிடைச்சதுக்குப் பிறகு அவ

காலம் எனும் தேரே!

யாராச்சும் கஷ்டப்படுறாங்கன்னு எனக்குத் தெரிஞ்சாலே நான் அவங்களுக்கு உதவி பண்ணிடுவேன். ஆனா, அந்த உதவி கிடைச்சதுக்குப் பிறகு அவ

Published:Updated:
சீதா
பிரீமியம் ஸ்டோரி
சீதா
“உங்களிடம் டைம் மெஷின் கிடைத்தால் என்ன செய்வீர்கள்?” என்று இவர்களிடம் கேட்டோம்.
காலம் எனும் தேரே!

வைஷ்ணவி (டி.வி நடிகை)

“யாராச்சும் கஷ்டப்படுறாங்கன்னு எனக்குத் தெரிஞ்சாலே நான் அவங்களுக்கு உதவி பண்ணிடுவேன். ஆனா, அந்த உதவி கிடைச்சதுக்குப் பிறகு அவங்க என்னைக் கண்டுக்கக்கூட மாட்டாங்க. உண்மையாவே அவங்க கஷ்டப்படுறாங்களா, இல்லை, நடிக்கிறாங்களான்னு தெரிஞ்சுக்க டைம் மெஷின் யூஸ் பண்ணுவேன். அதே மாதிரி ஃப்ரெண்ட்ஸ், சொந்தக்காரங்கன்னு நம்ம கூடவே இருக்குறவங்க சிலர் நேர்ல நம்மகிட்ட நல்லாப் பேசுவாங்க. ஆனா, பின்னாடி போய் நம்மளைப் பற்றித் தப்பாப் பேசுவாங்க. அந்த மாதிரி என்கிட்ட யாரெல்லாம் பொய்யாப் பழகுறாங்கன்னு டைம் மெஷின் யூஸ் பண்ணித் தெரிஞ்சுப்பேன்.”

காலம் எனும் தேரே!

‘இன்று நேற்று நாளை' இயக்குநர் ஆர்.ரவிக்குமார்

``கடந்த சில மாதங்களுக்கு முன்னர், உடல் நலக் குறைவால் என் அம்மா, எதிர்பாராத விதமா இறந்துட்டாங்க. அந்தத் துயரில் இருந்து இன்னும் மீளாமல் இருக்கேன். என்னை அன்பும் அக்கறையுமா பார்த்துக்கிட்டவங்க. அவங்க இழப்பைப் பேரிழப்பா உணர்றேன். டைம் மெஷின் கிடைச்சா, அம்மா இறக்கறதுக்கு சில காலத்துக்கு முன்னரே போய், அவங்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்படாமல் பார்த்து, இன்னும் கொஞ்ச வருஷம் வாழ வச்சிருப்பேன்.''

காலம் எனும் தேரே!

சீதா

“என் கைக்குக் கால இயந்திரம் கிடைத்தால், என் பத்து வயது வரையிலான காலகட்டத்திற்குச் செல்ல விரும்புகிறேன். புதுப்பேட்டையில் சித்ரா டாக்கீஸ் அருகில் ஒரு பெரும் குடும்பத்தில் நாங்கள் சேர்ந்து வாழ்ந்தோம். முற்றம் இருந்த வீடு. சுற்றி தூண்கள். தாத்தா ஆர்மோனியம் வாசிக்க, பாட்டி தித்திப்பாகப் பாடுவார். பாட்டி எந்தப் பயிற்சியும் எடுத்ததில்லை. ஆனா, பாட்டு சுருதி சுத்தமா இருக்கும். அம்மா வீணை வாசிக்க, இப்போதும் மானசீகமாக அந்தக் காலங்களுக்குப் போய் விடுகிறேன். குளிக்கத் தயாராகிற போது பாய்லரில் தண்ணீர் போடுவார்கள். இளம் சூட்டில் தண்ணீர் பரிமாறி சனிக்கிழமைன்னா எண்ணெய்க் குளியல் கண்டிப்பா நடந்திடும்.

அதன் பிறகு கபகபன்னு எடுக்கிற பசியில் சாப்பிடுகிற உணவு அமிர்தமா இருக்கும். அப்பா, சித்தப்பா, அத்தைகளோடு சேர்ந்து பட்டம் விடுவதெல்லாம் நினைக்கவே சந்தோஷமா இருக்குது. எனக்கு அம்மன் என்றால் பிரியம். அம்மனுக்குப் பால்குடம் எடுக்கிறபோது, நானும் அந்தக் கூட்டத்தில் சிறு குழந்தையாகக் கலந்துவிடுவேன். எனக்கும் மாலை போட்டு, தலையில் சிறு குடம் வைத்து முன்னுரிமை தந்து முதல் வரிசையில் விட்டுவிடுவார்கள்.

சாமி கும்பிட வருபவர்கள், `இதோ வருது பாரு குட்டிச்சாமி' என்றபடி கண்ணை மூடிக் கும்பிடுவார்கள். தாத்தா என்னைத் தேடிட்டு வருவது தெரிந்து நான் அப்படியே கூட்டத்திலிருந்து நழுவிவிடுவேன். இன்றைக்கு அந்த விளையாட்டுத்தனமான சிறுவயது மனசு இல்லாமல்போய்விட்டது. எனக்குக் கிடைத்த புகழ், வசதி, பிரியமான என் பிள்ளைகள் தாண்டி அந்தத் திரும்ப வராத காலங்களுக்குப் போகணும்போல இருக்கு. நீங்க ஒரு கேள்வியாக் கேட்டுட்டீங்க. ஆனா கால இயந்திரத்தில் பயணப்பட்டுவிட்டேன்.''

காலம் எனும் தேரே!

எஸ் ராமகிருஷ்ணன்

“கால இயந்திரம் கிடைத்தால் நான் போக விரும்பும் ஆண்டு 1863. போக விரும்பும் இடம் ரஷ்யாவிலுள்ள யஸ்னயா போல்யானா. இது எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய் வசித்த இடம். இந்த ஆண்டில்தான் டால்ஸ்டாய் தனது புகழ்பெற்ற ‘போரும் அமைதியும்’ நாவலை எழுதிக் கொண்டிருந்தார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக டால்ஸ்டாயின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு புதிய நாவலை எழுதிக்கொண்டுவருகிறேன். ஆகவே அந்தக் கால ரஷ்யாவிற்குள் சுற்றியலைவது போலவே உணர்கிறேன். கனவிலும் பனி பொழிந்துகொண்டிருக்கிறது.

உலகையே வியக்க வைத்த டால்ஸ்டாய் வாழ்ந்த யஸ்னயா போல்யானா அன்று எப்படியிருந்தது. ஒரு விவசாயியாக அவர் எப்படி வாழ்ந்தார். எப்படி வேட்டைக்குச் சென்றார். அவரது எழுதும் அறை எப்படியிருந்தது என்பதைக் காண ஆசையாக இருக்கிறது.

ரெய்னர் மரியா ரில்கே, ஆன்டன் செகாவ். மாக்சிம் கார்க்கி, பாஸ்டர்நாக் எனப் புகழ்பெற்ற எழுத்தாளர்கள் பலரும் அந்தப் பண்ணைக்குச் சென்று டால்ஸ்டாயைச் சந்தித்து உரையாடியிருக்கிறார்கள். டால்ஸ்டாயுடன் கைகுலுக்கவும் குறைந்தபட்சம் அவருடன் ஒரு தேநீர் பருகவும் விரும்புகிறேன்.”

காலம் எனும் தேரே!

டேனி (நடிகர்)

‘`கடந்த காலத்துப் பசுமையான நினைவுகளைத் திரும்பிப் பார்க்கறதுல ஒரு சுகம் இருக்கும்ணே. ஆனாலும் அது எல்லாமே நமக்குத் தெரிஞ்சது, நாம அனுபவிச்சதாத்தானே இருக்கும்? அதேநேரம் இன்னொரு ஐந்நூறு வருஷம் தாண்டி இந்த உலகம் எப்படி இருக்கும்னு நினைச்சா த்ரில்லிங்கா இருக்குமில்லையா? அதனால இதோ கைக்கு டைம் மெஷின் வந்திடுச்சு. வாங்க ஓட விடலாம்...

செல்போன், கம்ப்யூட்டர் எல்லாம் வீட்டுப் பரண்ல மேல கிடக்குதுண்ணே! நாம ரேடியோ பெட்டியைப் போட்டு வச்சோமில்லையா? புதுசா வந்திருக்கிற கருவிகள் ஒண்ணுத்துக்கும் பேர் என்னன்னே தெரியலை. சாப்பாடுன்னு என்னென்னவோ சாப்பிட்டுட்டிருக்காங்க பாருங்களேன்.

சென்னை மவுண்ட் ரோடா இது, இவ்ளோ ஃப்ரியா இருக்கு! எல்லாருக்கும் ஃபிளைட் ட்ராவல் பண்ற அளவுக்கு வசதி வந்துடுச்சு போல. சரி, சந்தோஷமா இருந்துட்டுப் போகட்டும். ஓரமா நின்னு வாழ்த்திட்டு நான் இன்னைக்கு வாழ்க்கைக்குத் திரும்பறேன். நிறைய வேலை கிடக்குதண்ணே.”

காலம் எனும் தேரே!

ஹரீஷ் பெராடி (நடிகர்)

``வேடிக்கையான கேள்வி. கண்டிப்பா கடந்த காலத்துக்குப் போக மாட்டேன். என்னோட சாய்ஸ், எதிர்காலம்தான். எல்லாருமே ஃப்யூச்சரை நோக்கி ஓடிட்டிருக்கோம். தவிர, நம்ம விஞ்ஞான வளர்ச்சி இப்பவே பிரமிக்க வைக்குது. இன்னும் பல வருஷம் முன்னோக்கிப் போனா, பல மடங்கு ஆச்சரியம் இருக்கும். அந்தக் காலகட்டத்துல சயின்ஸ் எப்படி வளர்ந்திருக்குன்னு பார்க்க விரும்புறேன்.''