தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளைக் குவித்திருக்கும் திரு, தனது கலைப்பயணத்தை நம்மோடு பகிர்ந்துகொள்கிறார்.
“ ‘மகளிர் மட்டும்’ முதல் ‘பேட்ட’ வரை... 25 ஆண்டுக்காலப் பயணத்தைச் சொல்லுங்கள்.”
“நிறைய அங்கீகாரம் கிடைச்சாச்சு. ஆனா இன்னைக்கும் ஷூட்டிங்னா எனக்குப் பதற்றமாதான் இருக்கு. பி.சி.ஸ்ரீராம் சாரிடம் கிடைச்ச பயிற்சிதான் இந்த 25 ஆண்டுக்காலப் பயணத்துக்கு அடித்தளம்.”

“உங்க குரு பி.சி.ஸ்ரீராமுடன் பணியாற்றிய அனுபவங்கள்?”
“ ‘கோபுர வாசலிலே’ படத்துல அவர்கிட்ட உதவியாளரா சேர்ந்தேன். பி.சி சார் எப்பவுமே எதையும் வெளிப்படையா கற்றுக்கொடுக்கமாட்டார். நாமதான் பார்த்துப் புரிஞ்சுக்கணும். சொல்லப்போனா அவர் எங்களுக்குத் தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொடுத்ததைவிட, தன்னம்பிக்கையைத்தான் அதிகம் கற்றுக்கொடுத்தார். போறபோக்குல, ‘அந்த ரயில் முழுக்க லைட் பண்ணிடுங்க’ன்னு சொல்லிட்டுப் போயிடுவார். ஒரு ரயில் முழுக்க லைட்டிங் பண்றது சாதாரண விஷயமில்லை. அது அவருக்கும் தெரியும். ஆனா, ‘அது பெரிய விஷயமில்லை, பண்ணிடலாம்’ங்கிற நம்பிக்கையை அவரோட மாடுலேஷன் நமக்குச் சொல்லும். அதனாலதான், அவர்கிட்ட வேலை பார்த்த எல்லோருமே சீக்கிரமாவே தங்களுக்கான இடத்தை அடைய முடிஞ்சது. அவர் இயக்கிய ‘மீரா’ படத்துல டைட்டில் கார்டுல உதவியாளர் களான எங்க எல்லோருடைய பெயர்களையும் ‘ஒளிப்பதிவாளர்கள்’னே போட்டிருந்தார். ஒருவேளை நாங்கள்லாம் பின்னாடி ஒரு இடத்துக்கு வந்துடுவோம்னு அவர் அப்பவே உணர்ந்துதான் அப்படிப் போட்டிருப்பார்னு நினைக்கிறேன்.”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALS“க்ளாஸிக் படமான ‘தேவர் மகன்’ல வொர்க் பண்ணுன அனுபவம்?”

“சிவாஜி, கமல், பரதன், பி.சி சார்னு ஒரே படத்துல பல ஜாம்பவான்களோடு சேர்ந்து பணியாற்றிய படம். பி.சி சாரைப் பார்த்து அவரை மாதிரியே எங்க டீம்ல எல்லோரும் தாடி வெச்சிருப்போம். அதனால, கேமரா டீம் மொத்தத்தையுமே சிவாஜி சார் ‘தாடிக்கார குரூப்’னு சொல்வார். எப்பவும் நாங்கதான் சீக்கிரம் வர்றதா நினைப்போம். ஆனா, எங்களுக்கு முன்னாடியே சிவாஜி சார் வந்திருப்பார். அன்னைக்கு என்ன சீன் எடுக்கப்போறாங்க, அவரோட டயலாக்ஸ் என்னன்னு டீட்டெயிலா கேட்டுத் தெரிஞ்சுப்பார். கேமராவைப் பற்றியும் நுட்பமா தெரிஞ்சு வெச்சிருப்பார். கேமரா ஓடுற சவுண்டை வெச்சே அது எத்தனை ஃப்ரேம்ல ஓடுதுன்னு சொல்லிடுவார்!”

“கமலுடன் ‘ஹே ராம்’, ‘ஆளவந்தான்’ போன்ற பரிசோதனை முயற்சிகளின் அனுபவங்கள் எப்படி இருந்தன?”
“ ‘ஹே ராம்’ படத்துக்காக நிறைய உழைச்சோம். ஆனா, அந்தப் படத்துக்கு அப்போ போதிய வரவேற்பு கிடைக்கல. என்னைக் கேட்டா, அந்தப் படத்தை முதல்ல இந்தியாவுல ரிலீஸ் பண்ணியிருக்கக் கூடாது. உலக சினிமா அரங்குல ரிலீஸ் பண்ணி, அங்கே போதிய வரவேற்பு கிடைச்சதும் இங்கே ரிலீஸ் பண்ணியிருக்கணும். அதேபோல, ‘ஆளவந்தான்’ படமும் ஒரு வித்தியாசமான பயணம். இப்போ உள்ள அளவுக்குத் தொழில்நுட்ப வளர்ச்சி இல்லாத காலத்தில் வெளிநாட்டு வி.எஃப்.எக்ஸ் கம்பெனியோட சேர்ந்து மோஷன் கன்ட்ரோல் போன்ற தொழில்நுட்பங்களை முதன்முறையா பயன்படுத்தியிருந்தோம்.”
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
“ ‘காஞ்சிவரம்’ மாதிரியான எளிமையான படங்களும் பண்றீங்க, ‘பேட்ட’ மாதிரியான பிரமாண்ட படங்களும் பண்றீங்க... எப்படி?”

“ஒவ்வொரு கதைக்கும் ஒரு தீம் இருக்கும். ஒரு ஒளிப்பதிவாளரா அதைப் பொருத்தமா கொடுக்கிறது தான் என் வேலை. பி.சி சார் ஸ்கூலுக்கு ரொம்ப நெருக்கமானவர், பிரிய தர்ஷன் சார். எங்க டீம்ல இருந்து ஜீவா, கே.வி.ஆனந்த்னு ஒவ்வொருத்தரா அவர் தன்னோட படங்கள்ல வரிசையா அறிமுகப் படுத்தினார். ஏற்கெனவே நான் அவரோட ‘லேசா லேசா’ போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு பண்ணி யிருக்கேன். ஒருமுறை அவர் யதார்த்தமா ‘காஞ்சிவரம்’ கதையைச் சொன்னப்போ, ‘இந்தப் படத்தை நான்தான் சார் பண்ணுவேன்’னு சொல்லியிருந்தேன். அதேமாதிரி அந்தப் படம் ஆரம்பிக்கும்போது என்னைக் கூப்பிட்டார். வெறும் 27 நாள்கள்ல முடிஞ்ச அளவுக்கு இயற்கை வெளிச்சத்தையே பயன் படுத்தி, எளிமையா படமாக்கினோம். அந்தக் கதைக்கு அதுதான் தேவையா இருந்தது. ஆனா, ‘பேட்ட’ படத்துக்கு ரஜினி சார்தான் தீம். அவரையும், அந்தக் கேரக்டரையும் எந்த அளவுக்குக் கொண்டாடப் போறோம்ங்கிறதுதான் தீமா இருந்தது. அதை அந்தப் படத்துக்குச் செஞ்சோம்.”

“இப்போ என்னென்ன படங்கள் பண்றீங்க?”
“என்னோட ஃபேவரைட் இயக்குநரான பிரியதர்ஷன் சார் இயக்கத்தில் மோகன்லாலின் ‘மரக்கர்‘ மலையாளப் படம் போய்க்கிட்டிருக்கு. மலையாளத்துல இதுவரை பண்ணாத அளவுக்கு மிகப்பெரிய பட்ஜெட்ல உருவாகிற வரலாற்றுப் படம் இது. தெலுங்குல கொரட்டல சிவா டைரக்ஷன்ல சிரஞ்சீவி நடிக்கிற படத்துல கமிட் ஆகியிருக்கேன்.”