Published:Updated:

``டைட்டில் வின் பண்ணினதுக்கு சாக்லேட் பேக்தான் பரிசா கிடைச்சது!" - `அசத்தப்போவது யாரு' வெங்கடேஷ்

'அசத்தப்போவது யாரு' வெங்கடேஷ்

'கலக்கப்போவது யாரு', 'அசத்தப்போவது யாரு' நிகழ்ச்சியின் மூலமாக நமக்கு பரிச்சயமான முகம் வெங்கடேஷ். ஸ்டாண்ட் அப் காமெடியில் கலக்கிக் கொண்டிருந்தவர் அவ்வப்போது சினிமாவில் நடித்திருந்தார்.

``டைட்டில் வின் பண்ணினதுக்கு சாக்லேட் பேக்தான் பரிசா கிடைச்சது!" - `அசத்தப்போவது யாரு' வெங்கடேஷ்

'கலக்கப்போவது யாரு', 'அசத்தப்போவது யாரு' நிகழ்ச்சியின் மூலமாக நமக்கு பரிச்சயமான முகம் வெங்கடேஷ். ஸ்டாண்ட் அப் காமெடியில் கலக்கிக் கொண்டிருந்தவர் அவ்வப்போது சினிமாவில் நடித்திருந்தார்.

Published:Updated:
'அசத்தப்போவது யாரு' வெங்கடேஷ்
`கலக்கப்போவது யாரு', `அசத்தப்போவது யாரு' நிகழ்ச்சியின் மூலமாக நமக்கு அறிமுகமான முகம் வெங்கடேஷ். ஸ்டாண்ட் அப் காமெடியில் கலக்கிக் கொண்டிருந்தவர் அவ்வப்போது சினிமாவில் நடித்திருந்தார். பிறகு, இவரை பெரிய அளவில் வெள்ளித்திரையிலும், சின்னத்திரையிலும் பார்க்க முடியவில்லை. 'அப்போ இப்போ' தொடருக்காக வெங்கடேஷ் தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதைத் தெரிந்துகொள்ள அவரைச் சந்தித்துப் பேசினோம்.
'அசத்தப்போவது யாரு' வெங்கடேஷ்
'அசத்தப்போவது யாரு' வெங்கடேஷ்

" எல்லாருக்கும் தொலைக்காட்சி மூலமாகத்தான் என்னைத் தெரியும். நாங்க 'காமெடி பாய்ஸ்' என்கிற பெயரில் ஸ்டேஜ் காமெடி பண்ணிட்டு இருந்தோம். அந்தக் குழுவில் நானும் இருந்தேன். அது மூலமாகத்தான் ஸ்டாண்ட் அப் காமெடியன் என்கிற பயணம் ஆரம்பிச்சது. எனக்குத் தெரிஞ்சு ஐ பேடு பயன்படுத்தின முதல் தலைவர் ஐயா கருணாநிதி அவர்கள்தான்! அந்த வகையில்,  70ஸ் கிட்ஸ் ரொம்பவே லக்கி. நாங்க எல்லா டெக்னாலஜியையும் பார்த்திருக்கோம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ரியாலிட்டி ஷோவிற்கு பிள்ளையார் சுழி போட்டதே கலக்கப்போவது யாரு நிகழ்ச்சிதான். ஒரு சேனலில் இருக்கிற புரோகிராம் அப்படியே இன்னொரு சேனலில் காப்பி அடிச்சு அதுல சக்ஸஸ் ஆனதும் எங்களுடைய நிகழ்ச்சி மட்டும்தான்! கலக்கப்போவது யாரு சீசன் 2 வில் டைட்டில் வின் பண்ணினேன். அதுக்கு சாக்லேட் பேக் தான் பரிசா கிடைச்சது. ஒருத்தங்களை நல்லா ரிஜிஸ்டர் பண்ண வச்சு அடுத்த கட்டத்துக்கு கொண்டு போகிறதுல விஜய் டிவிக்கு பெரிய பங்கு இருக்கு. விஜய் டிவியில் பலர் பெரிய இடத்துக்கு வந்துட்டாங்க. சன் டிவியில் அப்படி குறிப்பிட்டு சொல்லும்படி யாருமில்லை. எதையும் ஒப்பிட்டு குறைவா சொல்லலை. ஒருவேளை அவங்க இந்த நிகழ்ச்சியைப் பார்த்தால் இந்த பாயிண்ட்டை நாம மிஸ் பண்றோம்னு புரிஞ்சிக்கணும் என்கிற எண்ணத்தில்தான் சொல்றேன். எனக்கு அடுத்த சீசனில்தான் சிவக்கார்த்திகேயன் கலந்துக்கிட்டு டைட்டில் வின் பண்ணினார்.

'அசத்தப்போவது யாரு' வெங்கடேஷ்
'அசத்தப்போவது யாரு' வெங்கடேஷ்

நான் விளம்பரத்துறையில் போயிட்டேன். என்னுடைய கிளைன்ட் ஜூவல்லரி ஓனர் அப்படின்னா அவங்கதான் நான் எப்ப சாப்பிடணும், தூங்கணும் என்பதை தீர்மானிக்கிறாங்க. அப்படி தொடர்ந்து விளம்பரத் துறையில் பிஸியாக வலம் வர்றதனால என்னால சினிமாவில் நடிக்க தனியா நேரம் செலவிட முடியல. மதுரையில் இப்ப இருக்கிறேன். சென்னையில் ஆபிஸ் மட்டும் இருக்கு. சமீபத்தில், விளம்பரத்துறையில் இரண்டு நேஷனல் அவார்டு வாங்கினேன். ஒன்று, கொரோனா சேஃப்டி வெட்டிங், இன்னொன்று, புராடெக்ட் லான்ச் பண்ணினதற்காக! கலக்கப் போவது யாரு, அசத்தப் போவது யாரு வர்றதுக்கு முன்னாடியே இந்தத் துறையில் பயணிக்கிறேன். இந்தத் துறையில் இது எனக்கு 27ஆவது வருஷம்! அதனால இயக்குநராக இருக்கும் நண்பர்கள் சிலரே நீங்க பெரிய இடத்தில் இருக்கீங்க உங்களுக்கு எப்படி நாங்க சம்பளம் கொடுக்கிறதுன்னு சொல்லுவாங்க. நானும், கே.வி ஆனந்த்தும் நல்ல நண்பர்கள். அவரும் என்னை மாதிரி சாப்பாட்டுப் பிரியர். நாங்க சேர்ந்து பல இடங்களுக்கு டிராவல் பண்ணி நிறைய சாப்பாடு டிரை பண்ணியிருக்கோம்.

அவங்களாகவே இவங்க பிசினஸ் பண்றாங்க.. இவங்களை கூப்பிட்டா அதிகமா சம்பளம் கேட்பாங்கன்னு சொல்லுவாங்க. அதனாலேயே எனக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைக்கலைன்னு நினைக்கிறேன். வடிவேலு சாருடைய பையனுடைய கல்யாணத்திற்கு நாங்க தான் ஈவன்ட் மேனேஜ்மென்ட் பண்ணினோம். ஈவன்ட் மேனேஜ்மென்ட், விளம்பரத்துறைன்னு பிஸியா டிராவல் பண்ணிட்டு இருக்கேன். நான் 1500 பேருக்கு வேலை கொடுத்துட்டு இருக்கேன்.

'அசத்தப்போவது யாரு' வெங்கடேஷ்
'அசத்தப்போவது யாரு' வெங்கடேஷ்

மக்கள் எதுவும் தெரியாம நீயெல்லாம் கூத்தாடிப் பையன் தானேன்னு டக்குன்னு கமென்ட் பண்ணுவாங்க. அவங்களைப் பற்றி என்னன்னே தெரியாம பேசுவாங்க. நான் ஒரு வார்த்தையை விடுறதுக்கு அவ்வளவு யோசிப்பேன். யாரையும் வெளிப்பார்வையில் பார்த்து எடை போடக்கூடாது. நல்லா தானே இருந்தது இந்த புரோகிராம் ஏன் நிறுத்துனீங்கன்னு கேட்பாங்க. இப்ப 'அசத்தப்போவது யாரு சீசன் 2' விரைவில் ஆரம்பிக்க இருக்காங்க. இன்னும் காமெடித்திறன் குறையல. நான் உயிர்ப்போடு பயணிச்சிட்டு இருக்கேன். 

என் பொண்ணு ஃபேஷன் டிசைனர். இப்ப சினிமாவில் பண்ண ஆரம்பிச்சிருக்காங்க. ஆணுக்கு பின்னால் பெண் இருப்பாங்கன்னு சொல்லுவாங்க. அப்படியெல்லாம் இல்ல. அவங்க என் கூடவே சரிசமமாக இருக்காங்க. என் அப்பா இறந்த சமயம் கட்டட வேலையில் இருந்து, ஹோட்டல் வேலை வரைக்கும் எல்லா வேலைகளும் பார்த்திருக்கேன். வறுமையின் பிடியில் சிக்கி அதிலிருந்து சொந்த உழைப்பில் முன்னேறி வந்ததினால் உழைப்போட அருமை எனக்கு நல்லாவே தெரியும். என் அப்பா நல்லா வாழ்ந்தார். ஆனா, எல்லாத்தையும் இழந்துட்டு நிற்கதியானார். அவர் கடின உழைப்பாளி. அவர்கிட்ட இருந்து அந்த உழைக்குற திறமையை மட்டும் எடுத்துக்கிட்டு தொடர்ந்து உழைச்சேன். இன்றைக்கு நல்ல நிலைமையில் இருக்கேன்!" என்றார்.

'அசத்தப்போவது யாரு' வெங்கடேஷ்
'அசத்தப்போவது யாரு' வெங்கடேஷ்

இன்னும் பல விஷயங்கள் குறித்து வெங்கடேஷ் நம்மிடையே பகிர்ந்து கொண்டார். அவற்றைக்காண லிங்கை கிளிக் செய்யவும்!

படங்கள் - பரத்வாஜ்