Published:Updated:

`பணம், புகழ் எதுவும் இல்லாதபோதே என்னை நேசித்தவர்'- காதலியைக் கரம்பிடித்த `குக்கு வித் கோமாளி' புகழ்!

புகழ் - பென்ஸியா

இன்று புகழுக்கும், பென்ஸிக்கும் விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள தீவனூர் - பொய்யாமொழி விநாயகர் ஆலயத்தில் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றிருக்கிறது.

`பணம், புகழ் எதுவும் இல்லாதபோதே என்னை நேசித்தவர்'- காதலியைக் கரம்பிடித்த `குக்கு வித் கோமாளி' புகழ்!

இன்று புகழுக்கும், பென்ஸிக்கும் விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள தீவனூர் - பொய்யாமொழி விநாயகர் ஆலயத்தில் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றிருக்கிறது.

Published:Updated:
புகழ் - பென்ஸியா
`குக்கு வித் கோமாளி' நிகழ்ச்சி மூலமாக மக்களிடையே பிரபலமானவர் புகழ். அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு சினிமா வாய்ப்புகள் குவியத் தொடங்கின. அஜித், விஜய் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பும் இவருக்குக் கிடைத்தது.

இவர் கோயம்புத்தூரைச் சேர்ந்த பென்ஸியா என்பவரைக் காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாயின. பிறகு, அவரே 'பார்ட்னர்' என தன் காதலியை தன் ரசிகர்களுக்கு சமூகவலைதளங்கள் வாயிலாக அறிமுகம் செய்தார். இந்நிலையில் இன்று புகழுக்கும், பென்ஸிக்கும் விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள தீவனூர் - பொய்யாமொழி விநாயகர் ஆலயத்தில் வைத்து எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றுள்ளது.

புகழ் - பென்ஸியா
புகழ் - பென்ஸியா

இவர்கள் இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகின. பென்ஸியா இஸ்லாமிய குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் ஆரம்பத்தில் இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டிலும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். பிறகே சம்மதம் தெரிவித்திருக்கிறார்கள் என்ற தகவலும் கசிந்தன.

புகழ் ஆரம்ப காலத்தில் இருந்தே தன்னிடம் ஒன்றும் இல்லாத போதே பென்ஸி என்னை விரும்பினார் என பல இடங்களில் குறிப்பிட்டிருக்கிறார். நீண்ட வருடங்களாக காதலித்து வந்த இவர்கள் இன்று திருமணமாகி வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு கைக்கோத்து பயணிக்க இருக்கிறார்கள்.

புகழ் - பென்ஸியா
புகழ் - பென்ஸியா

குடும்பத்தார் மற்றும் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் எளிமையான முறையில் அவருடைய திருமணம் நடைபெற்றிருக்கிறது. திருமண வரவேற்பு நிகழ்வில் 'குக்கு வித் கோமாளி' குடும்பத்தினரும், சினிமா பிரபலங்களும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தம்பதிக்கு சமூகவலைதள பக்கங்களில் பலரும் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.

வாழ்த்துகள் புகழ் - பென்ஸியா