கட்டுரைகள்
சினிமா
Published:Updated:

ஷேர்பட்டா பரம்பரை: “தீவிரவாதின்னு அரெஸ்ட் பண்ணிட்டாங்க!”

டேனியல் ஜெயின் ராஜ்
பிரீமியம் ஸ்டோரி
News
டேனியல் ஜெயின் ராஜ்

தாராவியில் நான் வீடியோஸ் எடுக்கப் போயிருந்தேன். அங்கே நான் பார்த்த நிறைய விஷயங்கள் ரொம்ப எமோஷனலா இருந்துச்சு

தான் பார்த்த இடங்களை, ரசித்த உணவுகளை, தனக்குப் பிடித்த பொருள்களை ‘DAN JR VLOG’ யூடியூப் பக்கத்தில் ஷேர் செய்து மில்லியன் இதயங்களைக் கவர்ந்திருக்கிறார், டேனியல் ஜெயின் ராஜ். தான் வெற்றியடைந்த கதையைச் சொல்ல ஆரம்பித்தார்.

“நடிப்பின் மீது இருந்த ஆர்வம்தான் யூடியூப் தளத்திற்குள் நுழையக் காரணமா இருந்துச்சு. சும்மா இருக்கும்போது வெளிநாட்டு யூடியூப் சேனல்கள் நிறைய பார்ப்பேன். அதுல அவங்க பண்ற பிளாக் எல்லாமே சூப்பரா இருந்துச்சு. சரி நாமளும் சின்னச் சின்னதா நம்மளுடைய லைஃப்ஸ்டைல் குறித்துப் பதிவு பண்ணுவோம்னு முடிவெடுத்தேன். 2016-ல் சேனலும் தொடங்கினேன்.

ஷேர்பட்டா பரம்பரை: “தீவிரவாதின்னு அரெஸ்ட் பண்ணிட்டாங்க!”

என்னுடைய பூர்வீகம் சென்னைங்குறதனால அடிக்கடி மகாபலிபுரம் போயிருக்கேன். அதனால அங்கே சூழல் எப்படியிருக்கும்னு எனக்கு நல்லாவே தெரியும். வெளியூர்ல இருக்கிறவங்களுக்கு மகாபலிபுரம் ரொம்பவே புதுசு. அவங்களுக்கு நான் பார்த்து ரசித்த இடங்களைச் சுத்திக்காட்டணும்னு வீடியோ எடுத்தேன். பிறகு வளர்ப்புப் பிராணிகள் குறித்துப் பண்ணினேன். குக்கிங் பண்ணி வீடியோ போட்டேன். அது எதுவுமே பெரிய அளவில் ரீச் ஆகலை. அக்வேரியம் போய் மீன்கள் வாங்கிட்டு வர்றதை வீடியோ எடுத்துப் போட்டேன். அது நிறைய பேருக்குப் பிடிச் சிருந்தது. அவங்களுடைய பர்சனல் லைஃப்புடன் ஒத்துப்போகிற வீடியோக்களை மக்கள் ரசிக்கிறாங்கன்னு புரிஞ்சது. அதுக்கப்புறம் நான் போட்ட எல்லா வீடியோக் களும் ஹிட் அடிக்க ஆரம்பிச்சது.

ஷேர்பட்டா பரம்பரை: “தீவிரவாதின்னு அரெஸ்ட் பண்ணிட்டாங்க!”

என் அப்பா சப்-இன்ஸ்பெக்டராக இருக் கிறார். நான் யூடியூப் சேனல் ஆரம்பிச்சி ருக்கேன்னு சொன்னப்போ அவருக் குள்ளே எவ்வளவு தயக்கம் இருந்தாலும் என்கிட்ட கொஞ்சமும் காட்டிக்காமல் என்னை சப்போர்ட் பண்ணினார். ஆரம்பத்தில் என் தம்பிதான் கேமராமேனும் எடிட்டரும். ஆரம்பத்தில் அவங்க யாருக்கும் ஸ்கிரீன்ல முகம் தெரியுறதுல உடன்பாடில்லை. அம்மாவும் மனைவியும் இப்போதான் வீடியோவில் வர ஆரம்பிச்சிருக்காங்க. என்னுடைய சேனலுக்கு வர்ற கம்மென்ட் எல்லாத்தையும் அம்மா படிப்பாங்க. நான் நெகட்டிவ் கம்மென்ட்ஸை பெருசா எடுத்துக்க மாட்டேன். ஆனா, அம்மா அதுக்காக ரொம்பவே வருத்தப்படுவாங்க. இப்போ வரை ஐ.டி வேலையும் பார்த்துட்டு சேனலையும் மெயின்டெயின் பண்ணிட்டி ருக்கேன். வீட்ல ஐ.டி வேலையை விடக்கூடாதுன்னு சொல்றாங்க. ஆனா, சீக்கிரமே வேலையை விட்டுட்டு முழு நேர யூடியூபர் ஆகிடுவேன்” என்றவர் மறக்கமுடியாத அனுபவம் குறித்துப் பேசத்தொடங்கினார்.

“புனேவில் ஒரு இடத்தில் ஷூட் பண்ணிட்டிருந்தேன். அப்போ திடீர்னு ஒரு போலீஸ் அதிகாரி வந்து என்னைப் பிடிச்சு தீவிரவாதின்னு சொல்லி ஸ்டேஷனுக்குக் கூட்டிட்டுப் போனார். அங்கே அவர் என்னைத் தகாத வார்த்தைகள் எல்லாம் பயன்படுத்தித் திட்டினார். நான் ரொம்ப கூலாகதான் அந்தச் சூழலை டீல் பண்ணினேன். கடைசியில் என் மேல எந்தத் தப்பும் இல்லைங்குறதைப் புரிஞ்சுகிட்டு அவரே டீ வாங்கிக் கொடுத்து நமஸ்தே சொல்லி வழியனுப்பி வெச்சார். அந்த நிகழ்வை எப்பவும் என்னால மறக்க முடியாது.

ஷேர்பட்டா பரம்பரை: “தீவிரவாதின்னு அரெஸ்ட் பண்ணிட்டாங்க!”

அதே மாதிரி, தாராவியில் நான் வீடியோஸ் எடுக்கப் போயிருந்தேன். அங்கே நான் பார்த்த நிறைய விஷயங்கள் ரொம்ப எமோஷனலா இருந்துச்சு. நம்மளுடைய பெட்ரூமைவிடச் சின்ன இடம்தான் அவங்களுடைய மொத்த வீடே. அங்கே ஒரு வீட்டிற்குப் போயிருந்தேன். அவங்க வடை சுட்டு விக்கிறாங்க. அந்த அம்மாவுடைய கணவர் வேலைக்குப் போயிருக்கார். அவங்களுடைய குழந்தைங்க வாசலில் படுத்திருக்காங்க. அந்த வீட்டுக்குள்ளே போய் நான் வீடியோ எடுத்துட்டு இருந்தேன். அங்கே என்னால சுத்தமா நிற்கவே முடியலை. புகை போகக்கூட வழியில்லாமல் அனல் அந்த வீடு முழுக்கப் பரவி இருந்துச்சு. நாம எவ்வளவு வசதியா வாழ்ந்துட்டிருக்கோம், இப்படியும் மனிதர்கள் வாழுறாங்கன்னு ரொம்பவே எமோஷனலா இருந்துச்சு.

வி.ஜே மா.கா.பா ஆனந்த் அண்ணன் எனக்கு பயங்கர குளோஸ். என்னுடைய வீடியோஸ் பார்த்துட்டு அவரே மெசேஜ் அனுப்பியிருந்தார். வீடியோ குறித்து நிறைய அட்வைஸ் பண்ணுவார். மீடியாவில் அவர்தான் எனக்குக் கிடைச்ச முதல் நண்பர்”

யூடியூபில் பேசுவதுபோலவே மனம்விட்டுப் பேசுகிறார் டேனியல்.