Published:Updated:

தனுஷ் - ஐஸ்வர்யா பிரிவு: ரஜினியின் ரியாக்ஷன் என்ன? இரண்டு குடும்பங்களும் இதை எப்படி எதிர்கொள்கின்றன?

தனுஷ் - ஐஸ்வர்யா

இருவரின் விவாகரத்து பேச்சுவார்த்தை அளவிலேயே கடந்த பல மாதங்களாக இருந்தது. ஒவ்வொரு தடவையும் அந்தப் பேச்சு இறுதிக்கு வரும்போது ரஜினி அழைத்து சமாதானம் செய்வார்.

தனுஷ் - ஐஸ்வர்யா பிரிவு: ரஜினியின் ரியாக்ஷன் என்ன? இரண்டு குடும்பங்களும் இதை எப்படி எதிர்கொள்கின்றன?

இருவரின் விவாகரத்து பேச்சுவார்த்தை அளவிலேயே கடந்த பல மாதங்களாக இருந்தது. ஒவ்வொரு தடவையும் அந்தப் பேச்சு இறுதிக்கு வரும்போது ரஜினி அழைத்து சமாதானம் செய்வார்.

Published:Updated:
தனுஷ் - ஐஸ்வர்யா
நேற்று நள்ளிரவுக்கு சற்று முன்னால் நடிகர் தனுஷ் தனது சமூக வலைதள பக்கங்களில் இப்படி ஒரு பதிவிடுவார் என யாருமே எதிர்பார்க்கவில்லை. அவரின் பதிவால் சமூக வலைதளங்கள் பற்றியெரிந்தன.
"நண்பர்களாக, காதலர்களாக, பெற்றோர்களாக நாங்கள் இருந்த 18 வருட திருமண வாழ்க்கை முடிவிற்கு வருகிறது. ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்தும், புரிந்துகொண்டும் வாழ்வின் ஒவ்வொரு தருணத்தையும் கடந்து சென்றுள்ளோம். இனி நானும், ஐஸ்வர்யாவும் தனித்தனியே வாழ்க்கையைத் தொடர உள்ளோம். எங்களை நாங்களே தனித்தனியாக புரிந்து கொள்ளும் நேரம் இது! எங்களின் இந்த முடிவிற்கு மதிப்பளித்து அனைவரும் உறுதுணையாக நிற்குமாறு கேட்டுக்கொள்கிறேன்"
என்பதுதான் அந்தப் பதிவு.

அவர் பதிவிட்ட அடுத்த சில நிமிடங்களில் ஐஸ்வர்யாவும் இதேபோன்றதொரு பதிவிட்டார். ஐஸ்வர்யா பதிவில், "இதற்கு கேப்ஷன் தேவையில்லை உங்கள் அனைவரின் அன்பும், ஆதரவுமே தேவை" எனக் குறிப்பிட்டிருந்தார். கவனமாக, தன் பெயரை 'ஐஸ்வர்யா ரஜினிகாந்த்' என்று குறிப்பிட்டிருந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தனுஷ் பதிவு
தனுஷ் பதிவு

இருவரும் தனிப்பட்ட முறையில் நீண்ட ஆலோசனைகள் செய்து, இதன் சாதக பாதகங்களை அலசிப் பார்த்து, இதனால் ஏற்படும் விளைவுகளை உணர்ந்து, ஆழ்ந்த கவனத்துடன் எடுத்த முடிவாகவே இது இருக்கக்கூடும். பலமுறை பேசியும் சரிசெய்ய முடியாத கருத்துவேறுபாடுகள் இருக்கும் சூழலில், மனக்கசப்போடு வாழ்வதைவிட கைகுலுக்கிப் பிரிந்து நண்பர்களாக இருப்பது சரியானதென்ற தீர்மானத்துக்கு வந்திருக்கக்கூடும்.

இந்தத் தகவல் வெளியானதும் ரசிகர்களும், சம்மந்தப்பட்டவர்களின் நலம் விரும்பிகளும் கவலை தோய்ந்த பதிவுகளைப் பதிவிட்டனர்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சமந்தா - நாக சைதன்யா பிரிவுக்குப் பிறகு தனுஷ் - ஐஸ்வர்யா பிரிவே இணையத்தில் அதிகம் விசாரிக்கப்படுகிறது. தனுஷ், ஐஸ்வர்யா என்கிற நபர்களைக் கடந்து ரஜினிகாந்த் என்கிற மனிதர் இதை எப்படி எடுத்துக்கொண்டார் என்பதே பலரின் கேள்வியாக, ஏக்கமாக இருந்தது. அவர் இதை மனதளவில் தாங்கிக்கொள்ள வேண்டுமே என்பதே அவர்களின் ஆதங்கமாக இருந்தது. பொங்கலன்றுதான் ரஜினிகாந்த் தனது வீட்டிற்கு வந்த ரசிகர்களை உற்சாகமாகச் சந்தித்தார். அதற்குள் இப்படி ஆனது ஏன் என்பதே புதிர்!

ரஜினி - தனுஷ்
ரஜினி - தனுஷ்

சமீபத்தில் ஹாலிவுட் படமான 'தி கிரே மேன்' ஷூட்டிங்கிற்கு தனுஷ் சென்றபோது ஐஸ்வர்யாவும் கூடப் போயிருந்தார். தேசிய விருது பெறும் விழாவின்போதுதான் ரஜினி, தனுஷ் இருவரும் ஒரே மேடையில் விருதுபெற, உச்சி மோந்து பாராட்டிப் பதிவிட்டார் ஐஸ்வர்யா. அதன்பிறகு தனுஷின் குலதெய்வக் கோயிலுக்குக் குடும்பத்துடன் சென்று வழிபட்டார்கள். இப்படியிருக்க, இடையில் என்ன ஆனது என்பதுதான் பலருக்கும் தோன்றும் கேள்வி.

இதுபற்றி இருவர் தரப்புக்கும் நெருக்கமானவர்களிடம் பேசினோம். ரஜினி - லதா மனநிலை எப்படியிருந்தது? மகன்கள் யாத்ரா, லிங்கா இவர்கள் எங்கே வளர்வார்கள், யார் பாதுகாப்பில் இருப்பார்கள்? தனுஷும் ஐஸ்வர்யாவும் சேர்ந்து நடத்திவரும் வுண்டர் பார் தயாரிப்பு நிறுவனம் என்னவாகும்? சேர்ந்து ஆசை ஆசையாகக் கட்டத் தொடங்கிய போயஸ் கார்டன் தனி வீட்டின் நிலை என்ன? இந்தக் கேள்விகளுடன் பேசியபோது கிடைத்த செய்திகளின் தொகுப்பு இது:

இருவரின் விவாகரத்து பேச்சுவார்த்தை அளவிலேயே கடந்த பல மாதங்களாக இருந்தது. ஒவ்வொரு தடவையும் அந்தப் பேச்சு இறுதிக்கு வரும்போது ரஜினி அழைத்து சமாதானம் செய்வார். பிள்ளைகள் யாத்ராவும், லிங்காவும் அதை மேற்கொண்டு தள்ளிக்கொண்டு போகச் செய்வார்கள். குழந்தைகள் நலம் பற்றி யோசித்தவர்கள் யாத்ராவும், லிங்காவும் 14, 11 வயதை அடைந்த பிறகு மறுபடியும் இதைப்பற்றி யோசிக்க ஆரம்பித்துவிட்டார்கள். குழந்தைகளுக்கு இந்தப் பிரிவு பற்றி இருவராலும் சொல்லப்பட்டு விட்டதாம். அவர்கள் எப்போது வேண்டுமானாலும் இருவரையும் போய் சந்திக்கலாம் என்றும் அதற்கு எந்தத் தடையும் விதிக்கப்படவில்லை என்றும் சொல்கிறார்கள். குழந்தைகள் இருவரும் தொடர்ந்து ஐஸ்வர்யாவிடமே வளர்வார்கள்.

தனுஷ், ஐஸ்வர்யா
தனுஷ், ஐஸ்வர்யா
ஐஸ்வர்யா தனது தந்தையின் மருத்துவக் காரணங்களுக்காக போயஸ் கார்டன் வீட்டிலேயே தங்கிவிடுவார் என்கிறார்கள். தனுஷ் தனக்கென வைத்திருக்கும் இரண்டு ஃபிளாட்களில் ஏதேனும் ஒன்றில் தன் அம்மாவுடன் வசிப்பார் என்கிறார்கள். தனுஷின் பெற்றோர் அவரைத் தங்கள் அரவணைப்பில் வைத்துக்கொள்ள விரும்புகிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த விவாகரத்து முடிவு இறுதிக் கட்டத்திற்கு வந்தபோது ரஜினி மறுவார்த்தை இல்லாது ஒப்புக் கொண்டார் எனவும் இனியும் இதை நீடித்துக் கொண்டு போவதில் இஷ்டப்படவில்லை எனவும் சொல்கிறார்கள். லதா ரஜினிகாந்தும் இதே முடிவில்தான் இருந்திருக்கிறார். போன வருடமே அறிவிக்க இருந்தது, ரஜினியின் உடல்நிலையைக் கருதி கைவிடப்பட்டது. மூன்று மாதங்களுக்கு முன்பு தனுஷ், ஐஸ்வர்யா இருவருக்குள்ளும் மீண்டும் ஒருமுறை சமாதானம் பேசப்பட்டிருக்கிறது. அந்தத் தருணத்தில்தான் சிறந்த நடிகர் விருது வாங்கச் சென்றபோது தனுஷை ஐஸ்வர்யா பாராட்டிப் பதிவிட்டார்.

ஐஸ்வர்யா மேற்பார்வை பார்த்து வந்த தனுஷின் வுண்டர் பார் பட நிறுவனம் தனது தயாரிப்புகளை ஏற்கெனவே நிறுத்திவிட்டது. 'மாரி 2' படம் சரியாகப் போகவில்லை என்பதற்குப் பிறகு அதன் நிர்வாகப் பணிகள் நிறுத்தப்பட்டு விட்டன. போயஸ் கார்டனில் அவர்கள் இருவரும் சேர்ந்து கட்டும் வீட்டிற்கு இப்போதுதான் அடித்தளமிடப்பட்டது. அதை என்ன செய்வது என்று முடிவு செய்யப்படவில்லையாம். சிறிது காலம் கழித்து அதனை முழுவதுமாகக் கட்டி முடித்து தனுஷ் தன் மகன்களுக்குத் தருவாரா அல்லது தன் பேரன்களுக்காக அதை ரஜினி கட்டி முடித்து அன்பளிப்பாகத் தருவாறா என்பது இனிமேல்தான் தெரியவரும் என்கிறார்கள்.

ஐஸ்வர்யா
ஐஸ்வர்யா

ரஜினி, தனுஷின் நண்பர்கள் பலருக்கும் இதில் ஏற்பு இல்லையாம். அதிர்ச்சியில் உறைந்தவர்களுக்கு பதிலளிக்க முடியாமல் இருவரும் அலைபேசியை அணைத்துவிட்டார்கள். தனுஷின் குடும்பம் அவரையும், ரஜினியின் குடும்பம் ஐஸ்வர்யாவையும் அரவணைத்துக் கொண்டிருக்கிறது.

இப்போது குழந்தைகளுக்குப் பள்ளி விடுமுறை என்பதால், வீட்டிலிருந்து குழந்தைகளை அழைத்துக்கொண்டு கேளம்பாக்கம் பண்ணை வீட்டுக்குப் போகத் திட்டமிட்டிருக்கிறார் ரஜினி. ஐஸ்வர்யா அடுத்து என்ன படம் செய்யலாம் எனத் திட்டமிட்டு இருக்கிறார் என்கிறார்கள். விஜய் சேதுபதியிடம் கூட கால்ஷீட் கேட்டு இருக்கிறார். தனுஷ் இப்போது 'வாத்தி' ஷூட்டிங்கில்தான் இருக்கிறார்.

அவரவர்கள் தங்களை வேலையில் ஐக்கியப்படுத்திக் கொண்டு இந்தக் கடினமான சூழலைக் கடப்பார்கள் என்கின்றனர். காலம் எல்லாவற்றையும் மறக்கடிக்கும்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism