லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
Published:Updated:

“37 வருஷங்களா தவிக்கிறோம்; எங்களை ஏத்துக்கோங்க அம்மா..!”

அனு மோகன் - அனுராதா
பிரீமியம் ஸ்டோரி
News
அனு மோகன் - அனுராதா

அனு மோகன் - அனுராதா தம்பதியின் காதல்

‘நினைவுச்சின்னம்’ உட்பட சில படங்களை இயக்கியும், பல படங்களுக்குக் கதை, வசனம் எழுதியும், நூற்றுக்கணக்கான படங்களில் நடித்தும் பிரபலமானவர் நடிகர் அனு மோகன்.

அனு மோகன் - அனுராதா தம்பதியின் காதல் கதை, பலரும் அறிந்திடாத சுவாரஸ்யம். சினிமா பிரபலம், அன்பான குடும்பம் என்றாலும், 37ஆண்டு களாகியும் அனுராதாவின் அம்மாவுடைய ஆதரவு கிடைக்காத ஏக்கம் இவர்களை வாட்டுகிறது. மனைவியின் பெயரை தன் பெயருக்கு முன்பு சேர்த்து, மரியாதை செய்திருக்கும் அனு மோகன், மனைவியை முதலில் பேசுமாறு வழிவிட்டார்.

“கோயம்புத்தூர்ல எங்களுக்குப் பக்கத்துப் பக்கத்து வீடு. நான் ஸ்கூல் படிச்சிட்டிருந்தபோது, இவர் சென்னையில சினிமா டைரக்டராகும் முயற்சியில இருந்தார். என்னைப் பார்க்க அடிக்கடி கோயம்புத்தூருக்கு வருவார். வீட்டு ஜன்னல் வழியே சைகையிலேயே நாங்க காதல் வளர்த்தோம். ஆனா, அந்த எட்டு வருஷங்கள்ல ஒருநாள்கூட நாங்க நேர்ல பார்த்துப் பேசிக்கலை.

நான் வேலைக்குப் போக ஆரம்பிச்சதுமே, வீட்டுல எனக்குத் தீவிரமா வரன் பார்த்தாங்க. நான் இந்து பிராமின், இவர் கிறிஸ்தவர். அதனால, எங்க காதல் விஷயம் தெரிஞ்சா என் வீட்டுல பெரிய பிரச்னையாகும்னு, சென்னை யில புது வேலைக்குப் போறேன்னு வீட்டுல சொல்லிட்டு, நேரா இவரை சந்திச்சேன். அடுத்த மூணாவது நாளே எங்களுக்குக் கல்யாணம்...” என்கிற அனுராதா, அப்போது ஏற்பட்ட மிரட்சியை நினைவுகூர்ந்து அமைதி யாகிறார்.

“ரைடக்டர் ஆர்.சுந்தர்ராஜன் சார்கிட்ட அப்போ நான் கோ-டைரக்டரா இருந்தேன். சினிமா நண்பர்கள் முன்னிலையில, நடிகர் சிவகுமார் அண்ணன் தலைமையில கோயில்ல இந்து முறைப்படி எங்களுக்குக் கல்யாணம் நடந்துச்சு. அப்புறமா சர்ச்ல கிறிஸ்துவ மதப்படியும் கல்யாணம் பண்ணிக்கிட்டோம். இவங்க வந்த நேரம் உடனே எனக்கு டைரக்டராகும் வாய்ப்பு அமைஞ்சது. ‘மோகன்’ங்கிற என் பெயருடன் மனைவியின் பெயர்ல முதல்பாதியைச் சேர்த்துக்கிட்டேன். கல்யாணத்துக்கு அப்புறமா என் வீட்டுல எங்களை ஏத்துகிட்டாங்க. ஆனா, இவங்க வீட்டுலதான்...” என்று பீடிகையுடன் இடைவெளிவிட்டார் அனு மோகன்.

“37 வருஷங்களா தவிக்கிறோம்; எங்களை ஏத்துக்கோங்க அம்மா..!”

“என்னைக் காணோம்னு என் அம்மா போலீஸ்ல புகார் கொடுத்துட்டாங்க. கமல் ஹாசன் சார் குடும்பம் எங்களுக்குத் தூரத்துச் சொந்தம். அதனால, அவரின் அண்ணன் சாருஹாசன் சார் மூலமா எங்களுக்குத் தகவல் வரவே நேர்ல போனோம். போலீஸ் ஸ்டேஷன்ல, இவர்தான் வேணும்னு உறுதியா சொல்லிட் டேன். எங்க கலப்புத் திருமணத்தால அம்மா வுக்கு ஏற்பட்ட கோபம், காலப்போக்குல சரியாகிடும்னுதான் நினைச்சோம். ஆனா, இத்தனை வருஷமாகியும் அம்மாவுக்கு கோபம் குறையல. பிரசவம் உட்பட பல நேரங்கள்ல அவங்க அன்புக்காக ஏங்கித் தவிச்சேன். ஆனா, அதையெல்லாம் இவர் அம்மாவும், குடும் பத்தினரும்தான் ஈடுசெஞ்சாங்க.

குடும்ப விசேஷங்கள்ல என் அம்மாவைப் பார்ப்போம். எங்களைப் பார்த்தாலே முகத்தைத் திருப்பிக்கிட்டுப் போயிடுவாங்க. எங்க மேலிருக்கிற கோபத்தை, பேரப்பிள்ளைகள் மேலயும் காட்டுறதால, எங்க ரெண்டு பிள்ளை களும் அவங்களை இதுவரை நேர்ல பார்த்த தேயில்லை...” வார்த்தைகள் தடுமாற நெகிழ்ச்சியாகும் அனுராதாவை, தன் சினிமா வசனங்களைப் பேசி சிரிப்பூட்டுகிறார் அனு மோகன்.

`` `வருங்காலத்துல பெரிய டைரக்டரா வருவேன்னு எதிர்பார்க்காதே. மூணு வேளை யும் கஞ்சி குடிக்கிற நிலை ஏற்பட்டாலும், நீ எனக்குப் பக்கபலமா இருக்கணும்’னு கல்யாணத்துக்கு முன்னாடியே அனுராதா கிட்ட சொன்னேன். நடிகராகி ஓரளவுக்கு சம்பாதிச்சாலும், பல நேரங்கள்ல ஏற்றத் தாழ்வுகள் ஏற்பட்டபோதெல்லாம், முன்பு நான் சொன்னதுபோலவே எனக்கு ஊக்கம் கொடுத்து, குடும்பத்தையும் இவங்க நல்ல படியா வழிநடத்தினாங்க. இப்போ டியூஷன் ஆசிரியரா சுய அடையாளத்துடன் இயங்கு றாங்க அனுராதா.

வீட்டுல எல்லோரும் ஃபிரெண்ட்லியாதான் பழகுவோம். மகள் டெல்பின் சரண்யாவுக்கு கல்யாணமாயிடுச்சு. எங்க பையன் அருண், கெளதம் மேனன்கிட்ட உதவி இயக்குநரா இருந்தான். ‘சரபம்’ படத்தை இயக்கிட்டு, இப்போ நடிகர் ஜீவாவை வெச்சு படம் பண்றான். எல்லா வகையிலும் நிறைவா வாழ்ந்தாலும், இவங்க அம்மாவோட அன்பு கிடைக்காதது மட்டும்தான் பெரும் குறை. சீக்கிரமே அவங்க எங்களை ஏத்துப்பாங்கன்னு நம்புறோம்” என்னும் அனு மோகனின் கரங்கள் பிடித்து நம்பிக்கையூட்டுகிறார் அனுராதா.