Published:Updated:

இயக்குநர் பாலா பிறந்தநாள்: Suriya 41 டார்கெட் தேசிய விருது; மணிரத்னத்தின் நட்பு; சிவகுமாரின் பாசம்!

பாலா - சூர்யா

'பிதாமகன்' படத்திற்காக விக்ரமிற்குத் தேசிய விருது வாங்கி கொடுத்தார். 'நான் கடவுள்' படத்திற்காக ஆர்யாவிற்குத் தேசிய விருதை எதிர்பார்த்தார். இந்த முறை சூர்யாவுக்குத் தேசிய விருதை வாங்கி கொடுத்துவிட வேண்டும் என்ற முனைப்போடு இருக்கிறார் பாலா.

இயக்குநர் பாலா பிறந்தநாள்: Suriya 41 டார்கெட் தேசிய விருது; மணிரத்னத்தின் நட்பு; சிவகுமாரின் பாசம்!

'பிதாமகன்' படத்திற்காக விக்ரமிற்குத் தேசிய விருது வாங்கி கொடுத்தார். 'நான் கடவுள்' படத்திற்காக ஆர்யாவிற்குத் தேசிய விருதை எதிர்பார்த்தார். இந்த முறை சூர்யாவுக்குத் தேசிய விருதை வாங்கி கொடுத்துவிட வேண்டும் என்ற முனைப்போடு இருக்கிறார் பாலா.

Published:Updated:
பாலா - சூர்யா
தமிழ் சினிமாவின் வித்தியாசமான கதை சொல்லி பாலா. இதுவரை தரிசிக்காத கதாபாத்திரங்களை, மனிதர்களைத் தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்திய இயக்குநர். எதற்கும் சமரசம் செய்துகொள்ளாத, கலைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கும் கலைஞன். தற்போது சூர்யாவை வைத்து ஒரு படம் இயக்கி வருகிறார். அதற்கான எதிர்பார்ப்புகள் இப்போதே எக்கச்சக்கமாக எகிறியிருக்கின்றன. இன்று இயக்குநர் பாலாவின் பிறந்தநாள். யாராலும் பிரதியெடுக்க முடிந்திடாத அவரின் பர்சனல் பக்கங்கள் இதோ...
பாலா
பாலா

* எப்பவும் தனிமை விரும்பிதான் பாலா. ஆனால் நண்பர்களோடு சேர்ந்துவிட்டால் அவர் இருக்கிற இடமே சந்தோஷமாக மாறிவிடும். வம்பு இழுப்பது, அதை வேடிக்கை பார்ப்பது என அந்த இடமே ஜாலியில் களேபரமாகும். பாலாவின் இந்தப் பக்கத்தை நேரில் கண்டவர்கள் மிகவும் குறைவு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

Director Bala
Director Bala

* எப்போதும் ஸ்படிக மாலையைக் கழட்டாமல் அணிந்திருப்பார். 'நான் கடவுள்' படத்திற்காகக் காசிக்குச் சென்றுவிட்டு வந்த பிறகு ஏற்பட்ட மாறுதல் இது. அதோடு பற்களால் ஆன கபால மாலையையும் அணிந்திருப்பார். இவை இரண்டும் கர்ணனின் கவச குண்டலம் மாதிரி அவரிடம் எப்போதும் இருக்கும்.

* எந்த இடமாக இருந்தாலும், ஏன் அயல்நாடு போனால் கூட அணிவது சாதாரண ரப்பர் காலணிகள்தான். அதுதான் இயல்பானது எனக் கூறி புன்னகைப்பார்.

பாலா
பாலா

* பத்து படங்கள் இயக்கியிருக்கும் பாலாவுக்கு இதுவரை 4 சர்வதேச விருதுகள், 2 தேசிய விருதுகள், 5 மாநில விருதுகள், 11 பிலிம்பேர் விருதுகள் கிடைத்திருக்கின்றன.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

* பாலாவும் இயக்குநர் மணிரத்னமும் மிகவும் நெருங்கிய நண்பர்கள். அடிக்கடி சந்தித்துப் பேசிக் கொள்வார்கள். அப்பாயின்ட்மென்ட் இல்லாமல் சட்டென்று போய் சந்திக்கிற உரிமையும் பாலாவுக்கு உண்டு. அதேபோல பாலாவின் படங்களைத் தேசிய விருதுகளுக்கு அனுப்பி வைப்பதில் துணை நிற்பார் மணி.

பாலா
பாலா

* மைக்கை கொண்டு வந்து நீட்டினால் பதறிவிடுவார். மேடைப்பேச்சு எப்போதும் பிடிக்காது. 'நன்றி. வணக்கம். பிறகு சந்திக்கிறேன்' போன்ற வார்த்தைகளோடு விடைபெற்று விடுவார். ஆனால் பர்சனலாக விவாதம் என்று வந்துவிட்டால் வெல்ல முடியாது. அதே மாதிரி விழா நிகழ்ச்சிகள் என்றால் காத தூரம் ஓடிவிடுவார்.

* காலையில் இரண்டே இட்லி. மதியம் இரண்டு கை பிடிச்சாதம், இரவு இரண்டு தோசை அல்லது இரண்டு சப்பாத்தியோடு நடையைக் கட்டிவிடுவார். பாலாவின் காஸ்ட்லி மெனு இதுதான்.

பாலா
பாலா

* நடிகர் சிவகுமார் இவரை மகனே என்றுதான் அழைப்பார். அப்படித்தான் உண்மையிலும் பழகுவார். பாலாவை எப்போதும் அன்பால் கட்டிப்போட்டு, சொல்வதைக் கேட்க வைக்க சிவகுமாரால் மட்டுமே முடியும்.

* 'பிதாமகன்' படத்திற்காக விக்ரமிற்குத் தேசிய விருது வாங்கி கொடுத்தார். 'நான் கடவுள்' படத்திற்காக ஆர்யாவிற்குத் தேசிய விருதை எதிர்பார்த்தார். இந்த முறை சூர்யாவுக்குத் தேசிய விருதை வாங்கி கொடுத்துவிட வேண்டும் என்ற முனைப்போடு இருக்கிறார் பாலா.

பாலா - சூர்யா - சிவகுமார்
பாலா - சூர்யா - சிவகுமார்

* பாலா நாத்திகர்தான். ஆனாலும் மற்றவர்கள் கோயிலுக்குச் செல்வதையோ, சாமி கும்பிடுவதையோ குற்றம் சொல்ல மாட்டார் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட உரிமைகள் இருக்கின்றன என்பார். மகள் அழைத்தால், கோயிலுக்குக் கூட்டிக்கொண்டு செல்வார்.

பிறந்த நாள் வாழ்த்துகள் பாலா!

இயக்குநர் பாலாவின் படங்களில் உங்களின் ஃபேவரைட் எது என்பதை கமென்ட்டில் சொல்லுங்கள்.