Published:Updated:

சிவகாசியில் தீபாவளி விற்பனை படுஜோர்: புதுரகப் பட்டாசுகள் என்னென்ன தெரியுமா?

ஹெலிகாப்டர் பட்டாசு

தீபாவளி பண்டிகையை ஒட்டி சிவகாசியில் புதுரகப் பட்டாசுகள் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது. பட்டாசுகளின் விலை 40% முதல் 70% வரை அதிகரித்துள்ளது.

சிவகாசியில் தீபாவளி விற்பனை படுஜோர்: புதுரகப் பட்டாசுகள் என்னென்ன தெரியுமா?

தீபாவளி பண்டிகையை ஒட்டி சிவகாசியில் புதுரகப் பட்டாசுகள் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது. பட்டாசுகளின் விலை 40% முதல் 70% வரை அதிகரித்துள்ளது.

Published:Updated:
ஹெலிகாப்டர் பட்டாசு

தீபாவளிப் பண்டிகைக்கு இன்னும் ஒரு சில நாள்களே இருப்பதால், விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு விற்பனை படுஜோராக நடந்து வருகிறது.

பட்டாசு உற்பத்தியின் தாயகமாக திகழும் சிவகாசியில் உள்ளூர், வெளியூர் ஆட்கள் மட்டுமின்றி வெளி மாநிலத்தவர்களும் முகாமிட்டு பட்டாசுகளை வாங்கிச் செல்கின்றனர். பல லட்சக்கணக்கான தொழிலாளர்களின் கைவண்ணத்தில் உருவாகும் இந்த பாட்டாசுகள் தான் நாட்டின் 90% தேவையைப் பூர்த்தி செய்கின்றன.

மணிரெய்ன்
மணிரெய்ன்

சிவகாசியை சுற்றி 1,100-க்கும் மேற்பட்ட பட்டாசு தொழிற்சாலைகளில் பட்டாசு உற்பத்தி நடைபெறுகிறது. பேரியம் நைட்ரேட் தடை, சரவெடி உற்பத்திக்கு தடை எனப் பட்டாசு தொழிலுக்குப் பல நெருக்கடிகள் வந்தாலும், இரண்டு ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகளுக்குப் பிறகு தளர்வுகளுடன் கொண்டாடப்படும் முதல் தீபாவளி பண்டிகை என்பதால், சிவகாசியில் அனைத்துக் கடைகளிலும் பட்டாசு வாங்க ஆட்கள் முண்டியடித்துக் கொண்டிருக்கின்றனர்.

பசுமை பட்டாசு உற்பத்தியில் செலவீனங்கள் அதிகம் என்பதால், இந்த ஆண்டு பட்டாசுகளின் விலை 40% முதல் 70% வரை அதிகரித்துள்ளது. ஆனால், புதுவித பட்டாசு அறிமுகத்தில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

டிராகன் வீல்
டிராகன் வீல்

தீபாவளிப் பண்டிகையையொட்டி விற்பனைக்கு வந்துள்ள புதுரக பட்டாசுகள் குறித்து பட்டாசு உற்பத்தியாளர் சித்தார்த் பேசுகையில், "இந்த ஆண்டு, டிராகன் வீல், மங்கி ஸ்பின்னர், ஜமீன் சக்கர், பென்டாஸ்டிக் ஃபைவ், கோல்டு ஸ்பின்னர், மணி ரெய்ன், ஸ்பிரைட், வாட்டர் குயின், ஜாலி பாபி, ஹெலிகாப்டர் பட்டாசு, ஜாலி ட்ரெய்ன், ட்வெண்டி ட்வெண்டி மத்தாப்பு, ட்ரைகலர் மத்தாப்பு, அர்ஜூன் டேங்க், சோட்டா பீம் லட்டு, ஏலியன் பட்டாசு, ராவணன் பட்டாசு, பவர் ரேஞ்சர்ஸ், கொரோனா பட்டாசு, கிரிக்கெட் பந்து சக்கரம், தோர், ஹல்க் உள்பட பல புதுரக பட்டாசுகள் விற்பனைக்கு வந்துள்ளது.

1.டிராகன் வீல்: கையளவு பெரிய சக்கரம். வழக்கமாக தரைச்சக்கரம் ஒருமுறை பற்றவைத்தால் சுற்றி விடுவதுபோல் அல்லாமல் தொடர்ச்சியாக ஆறு ரவுண்டுக்கு மிரட்டலாக தீப்பொறியைக் கக்கி குழந்தைகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தும்.

2.மங்கி ஸ்பின்னர்: குரங்கு தாவித் தாவி குதிப்பது போல இடது வலதாக சுற்றும் இந்தப் பட்டாசு.

ட்ரெய்ன் பட்டாசு
ட்ரெய்ன் பட்டாசு

3. பென்டாஸ்டிக் ஃபைவ்: ஒரு பாக்கெட்டில் ஐந்து வெவ்வேறு கலர்களில் வெடிக்கும் பட்டாசு.

4.கோல்டு ஸ்பின்னர்: ஒரு முறை பற்றவைத்தபின் அந்த வெடி ஒன்பதாகப் பிரிந்து சக்கரம் போல் சுழலும்.

பட்டாசு
பட்டாசு

5. வாட்டர் குயின்: 10 அடி உயரத்துக்கு எழும்பி நீர்விழ்ச்சியை போல் ஒளியை உமிழும்.

6.ஜாலிபாபி: சரவெடி போன்றே 10 அடி உயரத்துக்கு தீப்பொறி மேலெழுந்து வெடித்து சிதறும்.

7.மணி ரெய்ன்: தீப்பற்ற வைத்தவுடன் உயரமாக மேலெழும்பி வெடித்து சில்ரன்ஸ் பேங்க் பணமழை பொழியும்.

8.ஸ்பிரைட்: பார்ப்பதற்கு குளிர்பான டின் போன்று இருக்கும். இதைப் பற்றவைத்தால் 10 அடி உயரத்துக்கு தீப்பொறி மேலெழும்பி ஒளி உமிழும்.

டின் வெடி
டின் வெடி

இதுபோல, மேலும் பலரகங்கள் குழந்தைகளும் விரும்பும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

பசுமை பட்டாசு உற்பத்தியை அரசு ஊக்குவிப்பதால், இந்த ஆண்டு பாதுகாப்பான தீபாவளியை கொண்டாடும் பொருட்டு குழந்தைகள், சிறுவர் சிறுமிகளை கவரும் வகையிலே பலவிதமான பட்டாசுகளும் தயாரிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, பென்சில் வெடிகளும்கூட துப்பாக்கி வடிவில் குழந்தைகளைக் கவரும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது நிச்சயம் விற்பனையை அதிகரிக்கும்" என கூறினார்.

அப்ப இந்த தீபாவளி ஒரே டமால், டீமில்தான்.