Published:Updated:

சின்னத்திரை பயோ: `ஈரமான ரோஜாவே' சுவாதியின் பர்சனல் பக்கங்கள்!

சுவாதி

Yaarivalu என்கிற கன்னட சீரியல் மூலம் சின்னத்திரைக்குள் அடி எடுத்து வைத்தவர் தமிழில் ஈரமான ரோஜாவே தொடரின் மூலம் தமிழக சின்னத்திரை ரசிகர்களுக்கு அறிமுகமானார்.

சின்னத்திரை பயோ: `ஈரமான ரோஜாவே' சுவாதியின் பர்சனல் பக்கங்கள்!

Yaarivalu என்கிற கன்னட சீரியல் மூலம் சின்னத்திரைக்குள் அடி எடுத்து வைத்தவர் தமிழில் ஈரமான ரோஜாவே தொடரின் மூலம் தமிழக சின்னத்திரை ரசிகர்களுக்கு அறிமுகமானார்.

Published:Updated:
சுவாதி

வாரந்தோறும் தமிழ் சின்னத்திரை உலகில் என்ட்ரியாகி இருக்கும் புது முகங்கள் குறித்த பயோ தான் இந்தத் தொடர். அந்த வரிசையில் இன்று விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் `ஈரமான ரோஜாவே' தொடரின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே அறிமுகமாகி இருக்கும் சுவாதி குறித்து தெரிந்து கொள்வோமா!

சுவாதி
சுவாதி

நேட்டிவ்:

கர்நாடகாவை பூர்வீகமாகக் கொண்டவர் சுவாதி. தற்போது, பெங்களூரில் வசித்து வருகிறார். கன்னட படத்தின் மூலம் சினிமா துறைக்குள் நுழைந்திருக்கிறார். இதுவரை கிட்டத்தட்ட நான்கு கன்னட படத்தில் நடித்திருக்கும் இவர் Yaarivalu என்கிற கன்னட சீரியல் மூலம் சின்னத்திரைக்குள் அடி எடுத்து வைத்தவர் தமிழில் ஈரமான ரோஜாவே தொடரின் மூலம் தமிழக சின்னத்திரை ரசிகர்களுக்கு அறிமுகமானார்.

சுவாதி
சுவாதி

சீரியல்:

விஜய் டிவியில் ஒளிபரப்பான 'ஈரமான ரோஜாவே' தொடர் மிகுந்த வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து அந்தத் தொடரின் இரண்டாவது பாகம் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட 150 எபிசோட்களை கடந்திருக்கும் இந்தத் தொடரில் `பிரியா' என்கிற கதாபாத்திரத்தின் மூலம் மக்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பதிவு செய்திருக்கிறார் சுவாதி.

சுவாதி
சுவாதி

சோஷியல் மீடியா:

இன்ஸ்டாகிராமில் பயங்கர ஆக்டிவ் ஆன இவரை கிட்டத்தட்ட மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பின் தொடர்ந்து வருகிறார்கள். `ஈரமான ரோஜாவே' முதல் பாகத்தில் `வெற்றி' என்கிற கதாபாத்திரத்தில் நடித்த திரவியம் இந்த இரண்டாவது பாகத்தில் சுவாதிக்கு ஜோடியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த ஜோடிக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உருவாகியிருக்கிறது.

சுவாதி
சுவாதி

பேவரைட்ஸ்:

இவர் பயங்கரமான டான்ஸ் பிரியை என்பது இவரது இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பார்த்தவர்களுக்குத் தெரிந்திருக்கும். ஆனால் அவருக்கு பெயிண்டிங் மீது தீராக்காதல் இருக்கிறதாம். ஷூட்டிங் இல்லாத நேரத்தில் மனதிற்கு பிடித்தவற்றை பெயிண்டிங் ஆக மாற்றி அதனை ரசிப்பது இவருடைய பொழுதுபோக்கு. தமிழில் வெளியான கும்கி படமும், தெலுங்கில் பாகுபலியும் இவருடைய ஃபேவரைட் திரைப்படங்கள். கன்னட படங்களில் நடித்திருக்கும் இவருக்கு எல்லா மொழிப் படங்களிலும் நடிக்க வேண்டும் என்பது ஆசை.