Published:Updated:

``கட்டுப்படுத்துனா நீயே போயிடலாம்னு சொல்லிருக்கேன்!" - `எரும சாணி' ஹரிஜா - அமர் லவ் ஸ்டோரி

அமர்- ஹரிஜா
அமர்- ஹரிஜா

படபட பேச்சும், க்யூட் எக்ஸ்ப்ரஷனுமாய் `எரும சாணி' சேனல் மூலம் புகழ்பெற்ற ஹரிஜா, தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக்கொண்டார். காதலர் தின ஸ்பெஷலுக்காக அவரிடம் பேசினோம்.

``எங்க லவ், சினிமாவுல வர்ற காதல் கதை எல்லாம் இல்லை. நட்பில் இருந்துதான் எங்களோட காதல் ஆரம்பிச்சது. கிட்டத்தட்ட 7 வருஷ ஃப்ரெண்ட்ஷிப். நான் காலேஜ்ல யூஜி படிச்சிட்டிருக்கும்போது, அமர் பீஜி படிச்சிட்டிருந்தார். ஒரே காலேஜ்ங்கிறதால நிறைய புராஜெக்ட்ல சேர்ந்து வொர்க் பண்ணியிருக்கோம். இப்படித்தான் அவர் எனக்கு பழக்கமானார். காலேஜ் முடிச்சப்புறம் ஒரு புராஜெக்ட்டுக்காக அவரை மீட் பண்ணேன். அப்பதான் ஒருத்தரை ஒருத்தர் இன்னும் நல்லா புரிஞ்சிக்க முடிஞ்சது. என்னை நல்லா புரிஞ்ச ஒருத்தர்தான் எனக்கு பார்ட்னரா வரணும்னு எதிர்பார்த்தேன். அதுக்கு ஏத்த மாதிரிதான் அமர் இருந்தார். ரொம்ப இயல்பாவே எங்களுக்குள்ள செட் ஆகிடுச்சு" என்று ஹரிஜா பிரேக் விட, அவரைத் தொடர்ந்து அமர் பேசினார்.

அமர்- ஹரிஜா
அமர்- ஹரிஜா

``ஆமாங்க. ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு காரணத்துக்காக கல்யாணம் பண்ணுவாங்க. அது மாதிரி, ஆன்மிக வளர்ச்சிக்காகத்தான் கல்யாணம் பண்ணிக்கிட்டோம். இதைச் சொன்னப்போ, ஆரம்பத்துல நிறைய பேர் புரியாம சிரிச்சாங்க."

`` 'அதென்ன ஆன்மிக வளர்ச்சி?'னு அடுத்து ஒரு கேள்வி வரும். அதோட பதிலை நானே சொல்றேன்" என ஆரம்பித்தார் ஹரிஜா.

``ஆன்மிக வளர்ச்சின்னா நீங்க எல்லாரும் நினைக்கிற மாதிரி கடவுள் சார்ந்த விஷயம் இல்லை. நம்மளை நாமே புரிஞ்சிக்கிறது, ஆர்வம் தரக்கூடிய விஷயங்களைத் தேடி தெரிஞ்சிக்கிறது மாதிரிதான். ஆன்மிகம்னு சொன்னாலே, `ஏதோ நடுக்காட்டுல போய் மெடிடேட் பண்ற விஷயம் போல'ன்னு பார்க்குறாங்க. அப்படியெல்லாம் கிடையாது. வாழ்க்கையில என்ன நடக்குதோ அதைப் புரிஞ்சு அக்செப்ட் பண்ணிக்கிறதுதான். வழக்கமான லவ்வர்ஸ் மாதிரி, `ஐ லவ் யூ'லாம் சொல்லிக்கல. அந்தச் சமயத்துல எங்க வீட்டுலயும் எனக்கு மாப்பிள்ளை பார்த்துட்டிருந்தாங்க. இதெல்லாம் ஒரே சமயத்துல செட்டாகி, கல்யாணம் ஆகிடுச்சு. இதை நாங்க சொன்னாக்கூட யாரும் நம்ப மாட்டாங்க. நீங்க எழுதினாகூட நம்புவாங்களான்னு தெரியலை" என்று சிரித்தார்.

அமர்- ஹரிஜா
அமர்- ஹரிஜா
``காதலில் நான் ரெண்டாவது வகைங்ணா!" - வித் லவ் விஜய் #VikatanOriginals

``வாலன்டைன்ஸ் டே'க்கு என்ன ப்ளான்?' என்றால், ``ரெண்டு பேரும் சேர்ந்து ஸ்க்ரிப்ட்டுதான் எழுதுவோம். வாலன்டைன்ஸ் டே கொண்டாடுறது சந்தோஷமான விஷயம்தான். அதுக்காக கிஃப்ட்லாம் கொடுத்து சர்ப்ரைஸ் பண்ணணும்னு எந்த கமிட்மென்ட்டும் வெச்சிக்க மாட்டோம். நண்பர்களா இருந்தப்போ எப்படி நார்மலா இருந்தோமோ அதே மாதிரிதான் இப்பவும் இருக்கோம். இதுதான் எங்களுக்குள்ள இருக்கிற பிணைப்புக்குக் காரணம்."

``அதுக்காக கிஃப்ட்டே கொடுக்காத ஜோடி நாங்க இல்லை. எப்போ தோணுதோ அப்போ, ரெண்டு பேரும் கிஃப்ட் கொடுத்துப்போம். என்னோட பிறந்தநாளைக்கு அமர் பாண்டிச்சேரி கூட்டிட்டுப் போனார். அந்த ட்ரிப்பை என்னால மறக்கவே முடியாது. கிஃப்ட் கொடுத்திருந்தாகூட அந்த சந்தோஷம் கிடைச்சிருக்காது" என்று சொன்ன ஹரிஜாவைத் தொடர்ந்த அமர்,

``ஹரிஜா சொன்ன மாதிரி எனக்கும் மறக்க முடியாத மொமென்ட் இருக்கு. என்னுடைய பிறந்தநாள் அப்போ, என் லைஃப்ல முக்கியமான மொமென்ட்டுகளை எல்லாம் வீடியோவா பண்ணிக் கொடுத்தாங்க. அதுதான் என்னோட பொக்கிஷம். கிஃப்ட்டுங்கிறது ஒரு நீண்ட உரையாடலாகூட இருக்கலாம். இதையெல்லாம் தாண்டி, வழக்கமான வசனமாகூட இது இருக்கலாம். ஆனாலும் சொல்றேன், ஹரிஜாவே என்னுடைய பெரிய கிஃப்ட்டுதான்" என்றார் அமர். அவரைத் தொடர்ந்து சிரித்துக்கொண்டே ஆரம்பித்த ஹரிஜா,

அமர்- ஹரிஜா
அமர்- ஹரிஜா

``காலேஜ் டைம்ல நண்பர்களா இருந்தப்போ, ரெண்டு பேருக்கும் நிறைய புரொபோசல்ஸ் வந்திருக்கு. அந்தச் சமயத்துல அமரை என்னோட பாய் ஃப்ரெண்டா நடிக்கச் சொல்லியிருக்கேன். அப்போ, இவரைத்தான் கல்யாணம் பண்ணிக்கப்போறேன்னு தெரியாது. ஃபேன்டஸி டைப் புரொபோசல் எனக்கு வந்தது இல்லை. நார்மலான ஒருத்தரா இருந்தா போதும்னு எதிர்பார்த்தேன். ரெண்டு பேருக்கும் `கடந்த காலம்' இருக்கு. அதுக்கான பிரேக்கை எடுத்துக்கிட்டு புரிதலோடதான் சேர்ந்தோம்."

``அப்போ, உங்க ரெண்டு பேருக்கும் இடையில சண்டையே வராதா?"

அமர்- ஹரிஜா
அமர்- ஹரிஜா

``சீரியஸான விஷயங்களுக்கு சண்டை போட்டதில்லை. ஆரம்பத்துல நாங்க இப்படி இருக்கிறதைப் பார்த்துட்டு, `என்ன ரெண்டு பேரும் ஃப்ரெண்ட்ஸ் மாதிரியே இருக்கீங்க'ன்னு எல்லாம் பேசியிருக்காங்க. அதுக்காக சும்மா விளையாட்டா சண்டை போட்டுக்குவோம். சீரியஸான டாப்பிக் ஆரம்பிச்சாலும், அது முடியும்போது சமாதானம் ஆகிடுவோம். அதுதான் செக்பாயின்ட்."

``உங்க காதல் கதையை எந்த படத்தோட ஒப்பிடுவீங்க?"

அமர்- ஹரிஜா
அமர்- ஹரிஜா

``படத்தோட எல்லாம் ஒப்பிட்டதில்லை. நல்ல ஸ்க்ரிப்ட் இருந்தா சொல்லுங்க, கதை எழுதச் சொல்லலாம். இல்ல... நாங்களே எழுதினாதான் உண்டு. முழுப் படம்னு இல்லாம, சில காட்சிகளைப் பார்க்கும்போது கனெக்ட் ஆகியிருக்கு. `மாடர்ன் லவ் ஸ்டோரி' வெப் சீரிஸ்ல வர்ற சில காட்சிகளும் வசனங்களும் எங்களுக்குன்னே எழுதின மாதிரி இருக்கும்."

``உங்க லவ் ஸ்டோரி தெரிஞ்சதும் வீட்ல என்ன சொன்னாங்க?"

அமர்- ஹரிஜா
அமர்- ஹரிஜா

``நாங்க ரெண்டு பேரும் ரெடியாகுறதுக்கு முன்னாடியே, எங்க வீட்டுல எங்களுக்கு கல்யாணம் பண்ணிவைக்க ரெடியாகிட்டாங்க. எங்க அம்மாவோட நான் ரொம்ப க்ளோஸ். பெஸ்ட் ஃப்ரெண்டுனுகூட சொல்லலாம். எல்லாத்தையும் அம்மாக்கிட்ட சொல்லிடுவேன். அமரையும் ரொம்ப நாளா அம்மாவுக்குத் தெரியும். தெரிஞ்ச ஒரு ஆள்தான் எனக்கு பார்ட்னரா வரணும்னு நினைக்கிற என்னோட கேரக்டர் பத்தியும் அம்மாவுக்குத் தெரியும். இதே மாதிரிதான் அமர் வீட்டுலேயும், `ஹரிஜாவையே கல்யாணம் பண்ணிக்க'ன்னு சொல்லிட்டாங்க. எங்களோட மியூச்சுவல் நண்பர்களும் ரொம்ப சந்தோஷப்பட்டாங்க."

``ஹரிஜா பத்தி தெரியாத ஒரு விஷயம்?"

ஹரிஜா
ஹரிஜா

``ஹரிஜா ரொம்ப நல்லாவே சமைப்பாங்க. அவங்க பண்றதுல எனக்குப் பிடிச்சது பிரியாணிதான். `நீதான் அந்த வேலையைப் பார்க்கணும், நான் மட்டும்தான் இந்த வேலைகளைப் பார்ப்பேன்'னுலாம் எதுவும் இல்லை. எல்லா வேலைகளும் ரெண்டு பேரும் ஷேர் பண்ணிக்குவோம்."

``ரெண்டு பேரும் மாத்திக்கணும்னு நினைக்கிற விஷயம்?"

அமர்- ஹரிஜா
அமர்- ஹரிஜா

``எந்த விஷயத்தையும் மாத்திக்காம, நாங்க நாங்களாவே இருக்கணும். சில விஷயம் அந்த நேரத்துல மாத்திக்கணும்னு தோணும். ஆனா, எங்களோட இயல்பே அதான்கிற புரிதல் இருக்கிறதால, எந்தப் பிரச்னையும் இல்ல. பர்சனலா இருந்தாலும் வேலையா இருந்தாலும், ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் சப்போர்ட் பண்றதுதான் எங்களோட கல்யாண மோட்டோ" என்ற ஹரிஜாவைத் தொடர்ந்த அமர்,

``கரெக்ட். கல்யாணம் ஆகிடுச்சுனு ஹரிஜாவை கட்டுப்படுத்துறதுல எனக்கு உரிமை இல்ல. அவங்களோட வாழ்க்கையை அவங்க ஆசைப்படுற மாதிரி வாழட்டும். ஒருவேளை நான் கன்ட்ரோல் பண்ற மாதிரி தெரிஞ்சா, என்னை விட்டுட்டு போயிடலாம்னு அவங்ககிட்டே சொல்லியிருக்கேன்." என்றார்.

அடுத்த கட்டுரைக்கு