லைஃப்ஸ்டைல்
என்டர்டெயின்மென்ட்
தன்னம்பிக்கை
Published:Updated:

இப்போ வீட்டுத்தோட்டத்தில்... விரைவில் விவசாய நிலத்திலும்..!

நடிகை சீதா
பிரீமியம் ஸ்டோரி
News
நடிகை சீதா

நடிகை சீதாவின் விவசாய அனுபவம்

நடிகை சீதா, தற்போது பிரபல மாடித்தோட்ட விவசாயி. இவரிடம் ஆலோசனை பெற்று, பலரும் வீட்டுத்தோட்டம் அமைக்கின்றனர். ஊரடங்கு காலத்தில், சென்னை ஈ.சி.ஆர் பகுதியிலுள்ள தனது மற்றொரு வீட்டிலும் தோட்டப் பணிகளை விரிவுபடுத்தியிருக்கிறார் சீதா. ஒரு காலை வேளையில், தோட்டப் பராமரிப்பில் இருந்தவரைச் சந்தித்தோம்.

“2006-ல் இந்தப் பகுதி முழுக்க வெறும் மைதானமா இருந்துச்சு. இங்கு நாங்கதான் முதல் நபரா வீடு கட்டினோம். இப்போ சிட்டியைப் போலவே, இங்கேயும் நிறைய வீடுகள் பெருகிடுச்சு. வார இறுதியிலயும் விடுமுறை தினங்கள்லயும் மட்டும் இந்த வீட்டுக்குக் குடும்பமா வருவோம். காம் பவுண்டுக்கு உள்ளேயும் வெளியேயும் காலி இடம் இருந்ததால, அலங்காரச் செடிகள், பூச்செடிகளை மட்டுமே அதிகம் வளர்த்தோம். தவிர, கவனிப்பு குறைவா இருந்தாலும்கூட சமாளிச்சு வளரக்கூடிய தென்னை, மா, எலுமிச்சை, முருங்கை மரங்களை மட்டுமே வளர்க்க ஆரம்பிச்சோம். காய்கறிச் செடி களுக்குப் பராமரிப்பு கூடுதலா தேவைப்படும். ஆர்வம் இருந்தாலும், தினமும் பார்த்துக்க முடியாதுனு வேறு எந்தச் செடிகளையும் அப்போ இந்த வீட்டுல வளர்க்கல.

இப்போ வீட்டுத்தோட்டத்தில்... விரைவில் விவசாய நிலத்திலும்..!

சாலிகிராமம் வீட்டுல மாடித்தோட்ட விளைச்சல் நல்லா இருந்ததால, விதைகளைக் கொண்டு வந்து, காய்கறி, கீரை செடிகளையும் அவ்வப்போது இந்த வீட்டுலயும் வளர்த்தேன். போன வருஷம் கொரோனா நெருக்கடி வந்தப்போ, காய்கறிகள் வாங்கக்கூட நாங்க வீட்டைவிட்டு வெளிய போகல. மாடித் தோட்டத்துல கிடைச்ச காய்கறிகளை மட்டுமே பல மாசங்களுக்குப் பயன்படுத்தி னோம். எனக்கு மூட்டுவலி இருக் கிறதால, தினமும் கொஞ்ச நேர மாவது நடக்கணும். சாலிகிராமத்துல மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கிறதால, லாக்டெளன் தளர்வுக்குப் பிறகு, வாக்கிங் போறதுல சில சிரமங்கள் இருந்துச்சு. அதனால, அமைதியான சூழல்ல இருக்கலாம்னு கடந்த மார்ச் மாசமே இந்த வீட்டுக்குக் குடும்பத்தோடு வந்துட்டேன்” என்பவர், இந்த வீட்டிலும் தோட்டப் பணிகளை விரிவுபடுத்தியிருக்கிறார்.

இப்போ வீட்டுத்தோட்டத்தில்... விரைவில் விவசாய நிலத்திலும்..!

“இந்த வீட்டுல பல மாசங்கள் இருக்க வாய்ப்பிருக்கும்னு யூகிச்சு, கத்திரி, வெண்டை, பச்சைமிளகாய், தக்காளி, கீரைகள், பல்வேறு மூலிகை களை வளர்த்தேன். காம்பவுண்டுக்கு வெளியே, மகிழம், பப்பாளி, வாழை, நெல்லி, சீத்தா, ஆரவள்ளிக்கிழங்கு உள்ளிட்ட பல்வேறு மரங்கள் வளருது. காம்பவுண்டுக்கு உள்ளே மாதுளை, மா உட்பட சில மரங்களும், நிறைய பூச்செடிகளும் மூலிகைகளும் இருக்கு.

எலுமிச்சை மரத்துல நிறைய காய்கள் கிடைக்குது. கோவிட் நேரத்துல, எலுமிச்சையில கிடைக் கும் ‘வைட்டமின் சி’ சத்து நல்ல பலன் தரும்னு சொல்றாங்க. அதனாலயே, தினமும் எலுமிச்சை ஜூஸ் தவறாம குடிப்போம். தோட்டத்துல வளரும் கற்பூரவள்ளி, துளசி, வெற்றிலை, திப்பிலி உள்ளிட்ட சில மூலிகைகளைப் பயன்படுத்தி கஷாயம் செஞ்சு குடிப் போம். மா மரத்துல இந்த வருஷம் விளைச்சல் நல்லா இருந்துச்சு.

இப்போ வீட்டுத்தோட்டத்தில்... விரைவில் விவசாய நிலத்திலும்..!

முருங்கை, தென்னை, பல வகையான கீரைகள், பிரண்டை, கத்திரியெல்லாம் தொடர்ந்து பலன் தருது. அவ்வப்போது சாலிகிராமம் வீட்டுக்குப் போய் மாடித் தோட்டத் தைக் கவனிப்பேன். அங்கிருந்து வரும்போது தேவையான காய்கறி களைப் பறிச்சுக் கொண்டு வருவேன். மத்தபடி, பணியாளர் ஒருத்தர் அந்தத் தோட்டத்தைக் கவனிச்சுக் கிறார்.

இந்தப் பகுதியில தினமும் சாயந்திரம் வீட்டு வாசல்லயே வாக்கிங் போவேன். வீட்டுக்குப் பின்னாடியே கடல் இருக்கிறதால, காற்றோட்டமும் நல்லா இருக்குது. இந்த வருஷம் முழுக்கவே இதே வீட்டுல இருக்கத் திட்டமிட்டிருக் கோம். எனவே, கூடுதலான காய்கறி களை வளர்க்க ஆயத்தமாகியிருக் கேன்” என்கிறார் உற்சாகத்துடன்.

இப்போ வீட்டுத்தோட்டத்தில்... விரைவில் விவசாய நிலத்திலும்..!

“சில காரணங்களால கொஞ்சம் சோர்வில் இருந்தப்போதான், மாடித்தோட்ட பராமரிப்புல இறங்கி னேன். தொடர்ந்து ஆர்வம் அதிகரிக்கவே, இதுவே என்னோட வழக்கமான பணிகள்ல ஒண்ணா மாறிடுச்சு. இயற்கை விவசாயம் செய்யும் ஆர்வத்துல நிலத்தைத் தேர்வு செய்யுற வேலையிலும் கவனம் செலுத்துறேன். நம்மால முடிஞ்சவரை குறைந்தபட்சம் சில காய்கறிச் செடிகளையாச்சும் வீட்டுல வளர்க்கலாம். ஆரோக்கிய மான காய்கறிகளுடன், மன நிறைவையும் பெறலாம்”

- பயனுள்ள ஆலோசனையை விதைக்கும் சீதாவின் முகத்தில் உற்சாகப் புன்னகை!