Published:Updated:

"மெடிக்கல் ஷாப், பெட்ரோல் பங்க்ல வேலை பார்த்தேன். அப்பறம் சினிமாவுக்கு ஏன் வந்தேன்னா..."- ஜெயபிரகாஷ்

ஜெயபிரகாஷ்

"எங்க அக்கா சென்னையில் இருந்தாங்க. அதனால, நான் சென்னை வந்தேன். அப்ப எனக்கு வயசு 19தான். இங்கே என் அண்ணனோட பெட்ரோல் பங்க்ல வேலை பார்த்தேன். ஒரு கட்டத்துல சொந்தமா பெட்ரோல் பங்க் வச்சிருந்தேன்." - ஜெயபிரகாஷ்

"மெடிக்கல் ஷாப், பெட்ரோல் பங்க்ல வேலை பார்த்தேன். அப்பறம் சினிமாவுக்கு ஏன் வந்தேன்னா..."- ஜெயபிரகாஷ்

"எங்க அக்கா சென்னையில் இருந்தாங்க. அதனால, நான் சென்னை வந்தேன். அப்ப எனக்கு வயசு 19தான். இங்கே என் அண்ணனோட பெட்ரோல் பங்க்ல வேலை பார்த்தேன். ஒரு கட்டத்துல சொந்தமா பெட்ரோல் பங்க் வச்சிருந்தேன்." - ஜெயபிரகாஷ்

Published:Updated:
ஜெயபிரகாஷ்
பார்த்தவுடனேயே பாந்தமாக ஒட்டிக் கொள்பவர் ஜெயபிரகாஷ். `பண்ணையாரும் பத்மினி'யில் ஸ்கோர் செய்ய ஆரம்பித்து, இன்று தெலுங்கு பட உலகம் வரை கெத்து காட்டும் ஜே.பி.யிடம் பேசினேன்.

ஒவ்வொரு படங்களிலும் கலக்குறீங்க. நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்கிறீங்க...

"நன்றிங்க! ஒரு நல்ல படம், அடுத்து பத்து படங்களை கொடுக்கும்னு சொல்வாங்க. அது என் விஷயத்துல உண்மைன்னுதான் சொல்லணும். முதல் படம் 'மாயக்கண்ணாடி', அதன்பிறகு 'பசங்க', 'நாடோடிகள்'ன்னு என் ஆரம்பகால படங்கள் ஒவ்வொன்னுமே எனக்கு பெயர் வாங்கி கொடுத்துச்சு. அதன் பிறகு வந்த படங்களிலும் நல்ல கதாபாத்திரங்கள் அமைஞ்சது. நாங்க தயாரிச்ச 'பொற்காலம்'ல சேரன் சார் என்னைக் கவனிச்சிருக்கார். அதனாலதான் அவர் 'மாயக்கண்ணாடி' பண்றப்ப என்னை நடிக்கக் கேட்டார். நான் தயங்கினேன். 'நான் நடிப்பேன்'ன்னு என்னை விட அவருக்கு என் மீது நம்பிக்கை வந்து நடிகராக்கினார். 'நான் மகான் அல்ல' தெலுங்கில் டப் செய்து வெளியிட்டனர். அங்கே அது சூப்பர் டூப்பர் ஹிட். அதான் என்னை தெலுங்கிற்கு அழைச்சிட்டு போச்சு.

ஜெயபிரகாஷ்
ஜெயபிரகாஷ்

தமிழ்ல என் ஆரம்பகால படங்கள்ல பெரிய ரோல்கள் பண்ணியிருக்க மாட்டேன். ஆனா, என் கேரக்டர் இல்லாமல் அந்தக் கதை நகர்ந்திருக்காது. நடிக்க வந்த பிறகு, 'நல்லா நடிக்குறீங்க'ன்னு ஒரு பெயர் எடுத்த பிறகு, நமக்கே ஒரு பிடிப்பு வந்துடும். ஸோ, மொக்கையா நிக்கக்கூடாது. எதாவது பர்ஃபார்ம் பண்ணனும்னு தோணும். ஏன்னா, ஒரு நல்ல பெயர் எடுத்தபின், ஆடியன்ஸ் நம்ம மீது ஒரு எதிர்பார்ப்பில் வருவாங்க. அங்கே நாம மொக்கையா நடிச்சிருந்தால், 'ஏன் சார் இப்படிப் பண்ணுனீங்க?'ன்னு கேட்பாங்க. ரொம்ப மோசமான படங்கள் மட்டுமே இதுவரை தவிர்த்திருக்கேன். மத்தபடி நல்ல இயக்குநர்கள், நல்ல ரோல்கள் அதுவா தேடி வந்திடுது. இன்னொரு விஷயம், ஒரு கதாபாத்திரம் பிரமாதமா பண்ணியிருக்கீங்கன்னு பெயர் வந்தால், அது அந்தப் படத்தின் இயக்குநருக்குதான் போய்சேரும். ஏன்னா, எழுதின எழுத்தும், அந்தக் காட்சியும், சக நடிகர்களும்தான் என் கேரக்டரை சிறப்பாக்கியிருக்காங்கன்னு கருதுறேன்."

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சினிமாவுக்கு வர்றதுக்கு முன்னாடி, மெடிக்கல் ஷாப், பெட்ரோல் பங்குகள்ல வேலை பாத்திருக்கீங்களாமே..?

"ஆமா... சீர்காழியில்தான் பிறந்து வளர்தேன். பியூசி படிச்சு முடிச்சேன். என்னோட பேட்ச்தான் பியூசியோட கடைசி பேட்ச்ன்னு நினைக்கறேன். அப்புறம்தான் ப்ளஸ் டூ வந்தது. எங்க ஊர் சின்ன ஊர்தான். அதனால எல்லாருக்கும் எல்லாரையும் தெரியும். என் நண்பர்கள் பலரும் நான் எக்ஸாம்ல பாஸ் ஆகமாட்டேன்னு நினைச்சாங்க. ஆனா, நான் பாஸ் பண்ணினதுல அவங்களுக்கு செம ஷாக். வீட்ல டிகிரி படிக்கச் சொன்னாங்க. ஆனா, எனக்கு மெடிக்கல் ஷாப் வேலை மேல ஒரு ஆர்வம் இருந்துச்சு. ஏன்னா, அங்கே வேலை செய்தா நாமளும் தொழிலை கத்துக்கிட்டு கடை போட்டுடலாம் நினைச்சு, மெடிக்கல் ஷாப்ல வேலைக்குச் சேர்ந்தேன்.

ஜெயபிரகாஷ்
ஜெயபிரகாஷ்

நான் சென்னை வரும் வரை அங்கேதான் வேலை பார்த்தேன். இந்த சின்ன ஊர்ல இருந்தால், பெரியளவுல வளர்ச்சி இருக்காதுன்னு நினைச்சேன். எங்க அக்கா சென்னையில இருந்தாங்க. அதனால, நான் சென்னை வந்தேன். அப்ப எனக்கு வயசு 19தான். இங்கே என் அண்ணனோட பெட்ரோல் பங்க்ல வேலை பார்த்தேன். ஒரு கட்டத்துல சொந்தமா பெட்ரோல் பங்க் வச்சிருந்தேன். அப்புறம் நண்பர்கள் சொன்னதால, படத்தயாரிப்பாளரா மாறினேன். என்னோட 25 வயசுல எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு. மனைவி ஆங்கிலோ இண்டியன். ரெண்டு பையன்கள்... ரெண்டு பேருமே 'ஈசன்'ல நடிச்சிருப்பாங்க. அதன்பிறகு சினிமா பக்கம் வரல. இப்ப, ஒருத்தர் ஆட்டோமொபைல் துறையில அசத்துறார். இன்னொரு பையன், சினிமாவுல முயற்சி பண்ணிட்டு இருக்கார்."

ஃபிட்னஸ்ல ரொம்ப கவனமா இருப்பீங்க போலிருக்கே..?

ஜெயபிரகாஷ்
ஜெயபிரகாஷ்

"கவனமா இருந்தேன். ஆனா, இப்ப அப்படியில்ல. என்னோட சின்ன வயசில இருந்தே ஃபிட்னஸ்ல ஆர்வமா இருப்பேன். ஏன்னா, எனக்குக் கொஞ்சம் தொப்பை வச்சாக்கூட எங்க அம்மா என்னைக் கூப்பிட்டு, 'என்னடா உனக்கு தொப்பை வச்சிருக்கு இந்த வயசில... உனக்குக் கூச்சமா இல்ல'ன்னு சொல்லிடுவாங்க. இப்பக்ச் சின்னச் சின்ன விஷயங்கள்ல என்னை அக்கறையா கவனிச்சதால, நான் உடற்பயிற்சிகள் பண்ணிட்டிருப்பேன். ஆனா, நடிக்க வந்த பிறகு கொஞ்சம் கண்ட்ரோல் பண்ணமுடியல. கொஞ்சம் லைஃபே பிஸியா ஓடிட்டே இருக்கு."