Published:Updated:

பிங்க் பனராஸ் சேலையில் ஜொலிக்கும் காஜல் அகர்வால்; வைரல் நிகழ்வு இதுதான்!

காஜல் அகர்வால்

தனக்கு நடந்த வளைகாப்பு நிகழ்வின் படங்களை காஜல் அகர்வால் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

பிங்க் பனராஸ் சேலையில் ஜொலிக்கும் காஜல் அகர்வால்; வைரல் நிகழ்வு இதுதான்!

தனக்கு நடந்த வளைகாப்பு நிகழ்வின் படங்களை காஜல் அகர்வால் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Published:Updated:
காஜல் அகர்வால்

காஜல் அகர்வாலின் வளைகாப்பு படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. காஜல் - கௌதம் இணையரின் திருமணம் கொரோனா காலத்திற்கிடையில் 2020 அக்டோபரில் நடைபெற்றது. இவர்களுக்கு குழந்தை பிறக்க இருக்கும் அறிவிப்பை கௌதம் 2022 வருடத் தொடக்கத்தில் காஜலின் படத்தைப் பகிர்ந்து தன்னுடைய சமூக ஊடக பக்கத்தில் அறிவித்தார். காஜல் குழந்தைப்பேறு காலத்தில் உடலில் நடக்கும் மாற்றங்களைப் பற்றிய உணர்ச்சிபூர்வமான பதிவுவொன்றை சமீபத்தில் வெளியிட்டு இருந்தார்.

தற்போது தனக்கு நடந்த வளைகாப்பு நிகழ்வின் படங்களை காஜல் அகர்வால் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் காஜல் பிங்க் நிற பனராஸ் சேலையில் ஜொலிக்க, கௌதம் மெரூன் ஜாக்கெட் ஒன்றில் காட்சியளிக்கிறார். நண்பர்கள் உறவினர்கள் சூழ, எளிமையாக கடந்த ஞாயிறு அன்று நடந்த இந்த நிகழ்வில் கௌதமுடன் இருக்கும் படத்தைப் பகிர்ந்து அதில் 'Godbharai' (வளைகாப்பு) என்று பதிவிட்டுள்ளார், காஜல். ரசிகர்கள் வாழ்த்துகளையும், 'ஆல்டைம் பேவரைட் காஜல்' எனத் தங்கள் அன்பையும் வெளிப்படுத்தி வருகிறார்கள். காஜல் அகர்வால் துல்கர் சல்மான் மற்றும் அதிதி ராவுடன் இணைந்து நடித்த 'ஹே சினாமிகா' திரைப்படம் மார்ச் 3 இல் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.