Published:Updated:

"சூர்யா, ஜோதிகா, கார்த்தியோட நடிச்சாச்சு; அடுத்து சிவகுமார் சாரோட நடிக்கணும்!"- லைலாவின் கம்பேக்

லைலா

"'மேடம் ஒரு அம்மா கேரக்டர் இருக்கு', 'ஒரு அக்கா கேரக்டர் இருக்கு', ’அண்ணி கேரக்டர் இருக்கு'ன்னு கதை சொல்ல ஆரம்பிப்பாங்க. அப்படி ரோல்கள் பண்றதிலும் விருப்பம் இல்லாமலிருந்தேன். இடையே டி.வி. தொடர்களிலும் நடிக்கக் கேட்டு நிறைய வாய்ப்புகள் வந்துச்சு. ஆனா..."

"சூர்யா, ஜோதிகா, கார்த்தியோட நடிச்சாச்சு; அடுத்து சிவகுமார் சாரோட நடிக்கணும்!"- லைலாவின் கம்பேக்

"'மேடம் ஒரு அம்மா கேரக்டர் இருக்கு', 'ஒரு அக்கா கேரக்டர் இருக்கு', ’அண்ணி கேரக்டர் இருக்கு'ன்னு கதை சொல்ல ஆரம்பிப்பாங்க. அப்படி ரோல்கள் பண்றதிலும் விருப்பம் இல்லாமலிருந்தேன். இடையே டி.வி. தொடர்களிலும் நடிக்கக் கேட்டு நிறைய வாய்ப்புகள் வந்துச்சு. ஆனா..."

Published:Updated:
லைலா
கார்த்தியின் 'சர்தார்' படத்தின் மூலம் மீண்டும் ரீ-என்ட்ரி ஆகியிருக்கிறார் லைலா. கிட்டத்தட்ட 16 வருட இடைவெளிக்குப் பின் தமிழ் சினிமாவிற்கு வந்ததில் குஷியான லைலாவிடம் பேசினேன்.

"விஜய்காந்த் சாரின் 'கள்ளழகர்' படத்தின் மூலம்தான் தமிழில் அறிமுகமானேன். அதன்பிறகு அஜித் சாரின் 'தீனா' மிகப்பெரிய திருப்புமுனையாச்சு. தமிழ்ல எனக்குன்னு ஒரு தனி இடம் கிடைச்சது. சினிமா, பிலிம்ல இருந்து டிஜிட்டல் என்பதே பெரிய மாற்றம்தான். அதைவிட, இயக்குநர்களோட ஸ்கிரிப்ட் முறைகளும், கதாபாத்திரங்களும், வொர்க்கிங் ஸ்டைல்களுமே பெரிய அளவுல மாறியிருக்கு. 'சர்தார்' நல்லா ஓடிக்கிட்டிருக்கறது சந்தோஷமா இருக்கு" - தனது டிரேடு மார்க் சிரிப்பில் கலகலக்கிறார் லைலா.

16 வருஷ இடைவெளி ஏன்?

லைலா
லைலா

"இது நிஜமாகவே பெரிய இடைவெளிதான். பிசியான டைம்ல கல்யாணம் பண்ணி, மும்பையில் செட்டில் ஆனேன். அப்புறம் கணவர், குடும்பம், குழந்தைகளை கவனிக்க நேரம் தேவைப்பட்டது. என் பையன்கள் இப்ப வளர்ந்துட்டாங்க. ஸோ, நடிக்கலாம்னு தோணுச்சு. ஆனா, தேடி வந்த கதைகள், கேரக்டர்கள் எதுவுமே எனக்கு செட் ஆகல. சரியான கதைகள் அமையல. சிலர், 'மேடம் ஒரு அம்மா கேரக்டர் இருக்கு', 'ஒரு அக்கா கேரக்டர் இருக்கு', ’அண்ணி கேரக்டர் இருக்கு'ன்னு கதை சொல்ல ஆரம்பிப்பாங்க. அப்படி ரோல்கள் பண்றதிலும் விருப்பம் இல்லாமலிருந்தேன். இடையே டி.வி. தொடர்களிலும் நடிக்கக் கேட்டு நிறைய வாய்ப்புகள் வந்துச்சு. சீரியல் பண்றதிலும் விருப்பம் இல்லை. இதனாலேயே கொஞ்சம் இடைவெளி ஏற்பட்டுச்சு. முதல்ல ஒரு வெப்சீரிஸ்ல கமிட் ஆனேன். அந்த சீரிஸ்ல நடிச்சு முடிச்சிட்டேன். அது வர்ற டிசம்பர்ல வெளியாகுது. அந்த வெப்சீரிஸுக்கு அடுத்து கமிட் ஆன படம்தான் 'சர்தார்'."

என்ன சொல்கிறார் கார்த்தி?

லைலா
லைலா

''நடிகர் சங்கத் தேர்தல் சமயத்துல கார்த்தி மும்பைக்கு ஒரு வாக்குச்சீட்டு (Ballot Paper) அனுப்பி வச்சிருந்தாங்க. வீட்டுல அதை எங்க அப்பாதான் வாங்கி வச்சிருந்தாங்க. வாக்குச்சீட்டைப் பார்த்துட்டு ஆச்சரியமாகி 'என்னமா, இது முழுக்க தமிழ் லெட்டர்ஸா இருக்கு. எனக்கு ஒண்ணுமே புரியல'ன்னு எங்கேயோ வச்சிட்டாங்க. அந்த வாக்குச்சீட்டு விஷயமே எனக்குத் தெரியல. அந்த டைம்ல கார்த்தி போன் பண்ணினார். 'நான் சூர்யா பிரதர் பேசுறேன்'ன்னார். 'உங்களை எனக்குத் தெரியும்'ன்னு அவர்கிட்ட சொன்னதும் ஹேப்பியானார். 'நடிகர் சங்க வாக்குச் சீட்டை கூரியர்ல உங்களுக்கு அனுப்பி வச்சிருக்கோம். ஓட்டு போட்டு, திருப்பி அனுப்பி வைங்க'ன்னு சொன்னார். அதன்பிறகு எங்க அப்பாகிட்ட விசாரிச்சு, அந்த பேப்பரைத் தேடிக்கண்டுபிடிச்சு, ஓட்டு போட்டு அனுப்பினேன். அதன்பின்தான் கார்த்தியோட நட்பு ஆச்சு. அவர் மூலமாகத்தான் 'சர்தார்'ல வந்தேன். இப்ப பார்த்தா சூர்யா, ஜோதிகா, கார்த்தியோட நடிச்சாச்சு... அடுத்து சிவகுமார் சாரோடதான் நடிக்கணும்!"

லைலாவின் முழுப்பேட்டியை கீழேயுள்ள இணைப்பில் காணலாம்.