Published:Updated:

ஷேர்பட்டா பரம்பரை!: “நம்பிக்கையை பொய் என்று சொன்னால் எதிர்ப்புகள் வரும்!”

தர்மதுரை
பிரீமியம் ஸ்டோரி
தர்மதுரை

சினிமாவில் டைரக்டர் ஆகணுங்குற ஆசைதான் இதற்கெல்லாம் ஆரம்பப்புள்ளியாக இருந்துச்சு.

ஷேர்பட்டா பரம்பரை!: “நம்பிக்கையை பொய் என்று சொன்னால் எதிர்ப்புகள் வரும்!”

சினிமாவில் டைரக்டர் ஆகணுங்குற ஆசைதான் இதற்கெல்லாம் ஆரம்பப்புள்ளியாக இருந்துச்சு.

Published:Updated:
தர்மதுரை
பிரீமியம் ஸ்டோரி
தர்மதுரை

‘ஆனந்த விகடன் ‘சொல்வனம்’ பகுதியில் என் கவிதை வெளிவந்திடாதான்னு பலநாள்கள் ஏங்கியிருக்கேன். இன்னைக்கு என் பேட்டி வருகிற அளவிற்கு ஏதோ சாதிச்சிருக்கேன்னு நினைக்கும்போது ரொம்பவே சந்தோஷமா இருக்கு!’’ எனப் புன்னகைக்கிறார் தர்மதுரை. தர்மதுரை என்றால் பலருக்கும் தெரிந்திருக்க நிச்சயம் வாய்ப்பில்லை என்றே சொல்லலாம். ஏனெனில், இவர் Mr.Gk-வாகத்தான் நமக்குப் பரிச்சயம். அறிவியலை மிகவும் சுலபமாகக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு Mr.GK மிகப்பெரிய தளம்.

ஷேர்பட்டா பரம்பரை!: “நம்பிக்கையை பொய் என்று சொன்னால் எதிர்ப்புகள் வரும்!”

‘‘சினிமாவில் டைரக்டர் ஆகணுங்குற ஆசைதான் இதற்கெல்லாம் ஆரம்பப்புள்ளியாக இருந்துச்சு. புரொடியூசரிடம் கதை சொல்வதற்கு முன்னதாக அதற்குத் தயாராகும் வகையில் பயிற்சி எடுத்துக்கொள்கிற தளமாக ஆரம்பிச்சதுதான் இந்த மிஸ்டர் ஜிகே!

என் சொந்த ஊர் கடலூர். சின்ன வயசுல நான் பார்க்கிற விஷயங்கள் தொடர்பாக எழுகிற சந்தேகங்களை என் அப்பாகிட்டதான் கேட்பேன். நான் கேட்கிற சந்தேகங்களுக்கு நேரடியா என்கிட்ட விளக்கம் சொல்லிக் காட்டுவார். லிஃப்ட் எப்படி இயங்கும்னு என் அப்பாகிட்ட ஒருநாள் கேட்டேன். நேரடியா என்னை லிஃப்ட்டில் கூட்டிட்டுப் போய் எனக்குப் புரியுற மாதிரி சொல்லிக் கொடுத்தார். இப்போ நான் மத்தவங்களுக்கு விளக்கமா புரியுற மாதிரி ஒரு விஷயத்தைக் கற்றுக் கொடுக்கிறேன்னா அதுக்கு என் அப்பாதான் காரணம்!

என் நண்பர்களுக்கு தினமும் ஜிகே தொடர்பான தகவல்களைச் சொல்லி குட் மார்னிங் மெசேஜ் அனுப்புவேன். ஒருமுறை என்னுடைய எண்ணைத் தவறவிட்டுட்ட நண்பர் நீங்க யாருன்னு என்கிட்ட கேட்டதுக்கு நான் ‘மிஸ்டர் ஜிகே’ன்னு ரிப்ளை பண்ணினேன். அந்த நிகழ்வு நடந்து கிட்டத்தட்ட பத்து வருஷத்துக்கு மேல இருக்கும். ஆனாலும், அந்தப் பெயர் என் மனசுக்கு ரொம்ப நெருக்கமா இருந்ததனால அதையே நான் ஆரம்பிச்ச சேனலுக்கும் வெச்சிட்டேன்.

ஷேர்பட்டா பரம்பரை!: “நம்பிக்கையை பொய் என்று சொன்னால் எதிர்ப்புகள் வரும்!”

ஆரம்பத்தில் நானே சின்னதா ஏதாவது ஒரு ஸ்கிரிப்ட் ரெடி பண்ணி அதைப் பற்றிப் பேசி அந்த ஆடியோவை மட்டும் சேனலில் அப்லோடு பண்ணிட்டு இருந்தேன். நல்ல ரெஸ்பான்ஸ் கிடைச்சது. ஒருகட்டத்துக்கு மேலே நாமளே ஏன் ஸ்கிரீன்ல வந்து ஸ்கிரிப்டை அப்படியே படிக்காம மக்களுக்குப் புரியுற மாதிரி எடுத்துச் சொல்லக் கூடாதுன்னு யோசனை வந்துச்சு. பொதுவா ஆசிரியர்கள் பாடம் நடத்தும்போது மாணவர்கள் கவனம் சிதறக் கூடாதுன்னு ஒரு அடையாளத்தைக் கடைப்பிடிப்பாங்க. எனக்கான அடையாளமா தொப்பியைப் பயன்படுத்திக்கிட்டேன்.

கடந்த 2017-ல் என் சேனலை ஆரம்பிச்சேன். இப்போ வரைக்கும் நிறைய புத்தகங்கள் படிச்சு புதுப்புது விஷயங்களை மக்களுக்கு எளிமையா புரியுற மாதிரி எடுத்துச் சொல்லிட்டிருக்கேன். ‘இத்தனை வீடியோ போடணும்... டிரெண்டிங்ல வரணும்’னு எல்லாம் என்னைக்குமே நினைச்சதில்லை.

ஷேர்பட்டா பரம்பரை!: “நம்பிக்கையை பொய் என்று சொன்னால் எதிர்ப்புகள் வரும்!”
ஷேர்பட்டா பரம்பரை!: “நம்பிக்கையை பொய் என்று சொன்னால் எதிர்ப்புகள் வரும்!”

ஒவ்வொரு விஷயம் பேசும்போதும் அதற்கேற்ற மாதிரி மக்கள்கிட்ட வரவேற்பு கிடைச்சது. வரலாறு பற்றிப் பேசும்போது நல்ல ரீச் கிடைச்சது. அறிவியல் குறித்து எளிமையா விளக்கிப் புரிய வச்சது நிறைய பேருக்குப் பிடிச்சிருந்தது. அப்படித்தான் இது அறிவியல் சேனலா மாறுச்சு. மூடநம்பிக்கைகள் தொடர்பான விஷயங்கள் அறிவியல் ரீதியாக பொய்னு நிரூபிச்சிக் காட்டினேன். பேய், பிசாசு, பில்லிசூனியம் எல்லாம் பொய்னு ஆதாரப் பூர்வமா சொன்னேன். மக்களுடைய நம்பிக்கை பொய்னு சொல்றப்போ அதை அவங்களால ஈஸியா எடுத்துக்க முடியலை. அதனால நிறைய எதிர்வினைகள் வந்துச்சு. மக்களுடைய நம்பிக்கையை அறிவியலோடு தொடர்புபடுத்தும்போதுதான் பிரச்னையே வருது. ஏன்னா, அவங்களுடைய நம்பிக்கை பொய் என்பதை அறிவியல் ரீதியா சுலபமா நிரூபிக்க முடியும்.

நான் ஐ.டி கம்பெனியில் வேலை பார்த்துட்டிருக்கேன். வேலை முடிச்சுட்டு ஸ்கிரிப்ட்டிற்காகக் கொஞ்சம் டைம் எடுத்துப்பேன். ஸ்கிரிப்ட் தொடர்பாக நிறைய புத்தகங்கள் படிப்பேன்.

அறிவியல் துறை சார்ந்து இயங்குற நபர்கள் என் வீடியோக்கள் பார்க்குறாங்க. யாராச்சும் நான் பண்ணின வீடியோக்களில் ஏதாவது தவறு இருக்கிறதா சுட்டிக் காட்டினாங்கன்னா அதை உடனே சரி பண்ணிடுவேன்.

ஷேர்பட்டா பரம்பரை!: “நம்பிக்கையை பொய் என்று சொன்னால் எதிர்ப்புகள் வரும்!”
ஷேர்பட்டா பரம்பரை!: “நம்பிக்கையை பொய் என்று சொன்னால் எதிர்ப்புகள் வரும்!”

தெளிவாக ஸ்கிரிப்ட் ரெடி பண்ணின பிறகுதான் வீடியோ ஷூட் பண்ண ஆரம்பிப்பேன். கடந்த நாலு வருஷமா நானே ஷூட் பண்ணி, நானேதான் எடிட் பண்ணிட்டிருந்தேன். இப்போ கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஃப்ரீலேன்ஸ் எடிட்டர் ஒருத்தரை நியமிச்சிருக்கேன். வாரத்துக்கு இரண்டு அல்லது மூன்று வீடியோக்கள் மட்டும்தான் அப்லோடு பண்ணுவேன்.

அரசுப் பள்ளிகளில் என்னுடைய வீடியோக்களைக் காட்டி பசங்களுக்குப் பாடம் எடுக்குறாங்கன்னு கேள்விப்பட்டப்போ ரொம்பவே சந்தோஷமா இருந்துச்சு. இப்போ, சினிமாத் துறை சார்ந்த நண்பர்கள் பலருடைய அறிமுகம் கிடைச்சிருக்கு. இப்போ இரண்டு படங்களுக்கு ஸ்க்ரீன் பிளே கன்சல்டென்ட்டாக ஸ்கிரிப்டில் ஒர்க் பண்ணிட்டிருக்கேன். டைரக்டர் ஆகணுங்குற என் கனவும் சீக்கிரமே நிறைவேறிடும்னு நம்புறேன்!”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism