Published:Updated:

`முந்தானை முடிச்சு' ரீபூட், சீக்ரெட் பகிர்ந்த டாப்ஸி, கொண்டாடிய ஹூமா! - சோஷியல் மீடியா ரவுண்ட் அப்

Actress Priya Prakash Varrier #சோஷியல் மீடியா ரவுண்டப்

லாக்டெளனில் பரபரப்பாக இருக்கும் ஒரே இடம், சோஷியல் மீடியாதான். பிரபலங்கள் அங்கே ஷேர் செய்யும் சுவாரஸ்யங்கள், இங்கே உங்கள் பார்வைக்கு. #SocialMediaRoundup

`முந்தானை முடிச்சு' ரீபூட், சீக்ரெட் பகிர்ந்த டாப்ஸி, கொண்டாடிய ஹூமா! - சோஷியல் மீடியா ரவுண்ட் அப்

லாக்டெளனில் பரபரப்பாக இருக்கும் ஒரே இடம், சோஷியல் மீடியாதான். பிரபலங்கள் அங்கே ஷேர் செய்யும் சுவாரஸ்யங்கள், இங்கே உங்கள் பார்வைக்கு. #SocialMediaRoundup

Published:Updated:
Actress Priya Prakash Varrier #சோஷியல் மீடியா ரவுண்டப்

பாக்யராஜ் இயக்கத்தில் 1983-ல் வெளிவந்த திரைப்படம் ‘முந்தானை முடிச்சு’. ஊர்வசி, பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்த இந்தத் திரைப்படம், அப்போது தியேட்டர்களில் 25 வாரங்கள் வெற்றிகரமாக ஓடி ப்ளாக்பஸ்டர் ஹிட்டானது. அதன்பிறகு அடுத்தடுத்த வருடங்களில் தெலுங்கு, இந்தி, கன்னடம் எனப் பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.

இத்திரைப்படம் வெளியாகி 37 ஆண்டுகள் கடந்த நிலையில், தற்போது தமிழில் இந்தப் படம் ரீமேக் செய்யப்படவிருக்கிறது. பாக்யராஜ் நடித்த கதாபாத்திரத்தில் இயக்குநர் சசிகுமார் நடிக்கவிருக்கிறார். கதை, திரைக்கதை, வசனத்தை பாக்யராஜே எழுதுகிறார். இதற்கான அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இன்ஸ்டா பக்கத்தில் தனது வழக்காமான போஸ்டுகளை விடுத்து, வித்தியாசமான முயற்சியில் தற்போது களமிறங்கியுள்ளார் நடிகை ரெஜினா கசண்ட்ரா. ’ட்ராக் குயின்’ எனப்படும் பெண்களைப் போல் வேடமிடும் கலைஞர்கள் குறித்தான பதிவுதான் அது.

‘ட்ராக் குயின்’ போல வேடமிட்டு, அவர்களுடன் உரையாடிய வீடியோவையும் இன்ஸ்டாவில் அவர் பகிர்ந்துள்ளார். இந்தக் கலைஞர்கள் குறித்து அறிந்துகொள்ளவும், இவர்களின் உலகம் பற்றி அறியாத தகவல்களைப் புரிந்துகொள்ளவுமே இந்தப் பதிவு எனக் குறிப்பிட்டுள்ளார் ரெஜினா.

பிரபலங்கள் சோஷியல் மீடியாவில் ட்ரோல் வட்டத்துக்குள் சிக்குவதும், ட்ரெண்டிங் லிஸ்டில் வருவதும் புதிதல்ல. மலையாளத்தில் 2018-ல் வெளிவந்த ‘ஒரு அடார் லவ்’ படம் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை பிரியா வாரியார்.

பிரியா பிரகாஷ் வாரியார்
பிரியா பிரகாஷ் வாரியார்

சோஷியல் மீடியாவில் பல்வேறு டிரோல்கள் இவரைப் பற்றி வருவதால் இன்ஸ்டாகிராமிலிருந்து வெளியேறினார். அதற்குப் பிறகு மொத்தமாகவே சோஷியல் மீடியாவிலிருந்து விலகிவிட்டதாக இவர் தரப்பிலிருந்து விளக்கமளிக்கப்பட்டது.

View this post on Instagram

Too many kaithi’s in one frame🤗

A post shared by Lokesh Kanagaraj (@lokesh.kanagaraj) on

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் கடந்த ஆண்டு வெளியான வெற்றித் திரைப்படம் ‘கேம் ஓவர்’. டாப்ஸியின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. படத்தில் அவர் கையில் போட்டிருக்கும் டாட்டூவைக் குறித்தான அனுபவத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார் டாப்ஸி.

``முதல் நாள் ‘கேம் ஓவர்’ ஷூட்டின் போது எடுக்கப்பட்ட படம் இது. எனது கதாபாத்திரத்திற்கும் சரி, படம் பார்ப்பவர்களுக்கும் சரி... இந்த டாட்டூவை ஸ்வப்னாவிடமிருந்து நீக்க வேண்டும் என்ற பதற்றம் இருந்துகொண்டே இருந்திருக்கும். ஆனால், பர்சனலாக எனக்கு டாட்டூ மிகவும் பிடிக்கும் என்பதால் இந்தத் தற்காலிக டாட்டூவைப் போடும்போது மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டேன். ஆனால், அப்போது சென்னையின் காலநிலைக்கு இதைப் பராமரிப்பது சிரமமாக இருந்தது. படத்தில் ஸ்வப்னா நகைகள் அணிவதை விரும்பாதவள். இந்த டாட்டூ மட்டுமே அவளுக்கு அணிகலனாக இருக்கும் என்பதால் இதை மிகவும் கவனத்துடன் பராமரித்து வந்தேன்'' என சுவாரஸ்யமான விஷயங்களைப் பகிர்ந்துள்ளார் டாப்ஸி.

View this post on Instagram

The piano n I.. jus the two of us.. #NeeyumNaanum

A post shared by Anirudh (@anirudhofficial) on

லாக்டெளன் முடிந்தது என்று செய்தி வந்தால் அதை மகிழ்ச்சியாகக் கொண்டாடுவேன் எனத் தெரிவித்துள்ளார் ஹூமா குரேஷி. பா.இரஞ்சித் இயக்கிய ‘காலா’ படத்தின் மூலம் கோலிவுட்டுக்கு அறிமுகமானவர் ஹூமா குரேஷி.

சமையல் பதிவுகள், நாஸ்டால்ஜியா புகைப்படங்கள் என இன்ஸ்டா பக்கத்தில் பிஸியாக இருக்கிறார் ஹூமா. இந்நிலையில், `இனி லாக்டௌன் இல்லை. நிலைமை சரியாகிவிட்டது என்று அறிவிப்பு வந்தால் அதை மகிழ்ச்சியுடன் நடனமாடிக் கொண்டாடுவேன்' என்று தனது ரசிகர்களுக்கு உற்சாகமளித்துள்ளார் ஹூமா.