Published:Updated:

``காளீஸ்வரியைவிட என் பழைய பெயர் நிவேதிதாதான் புடிச்சிருக்கு'' - `நக்கலைட்ஸ்' நிவேதிதா

``காளீஸ்வரியைவிட என் பழைய பெயர் நிவேதிதாதான் புடிச்சிருக்கு'' - `நக்கலைட்ஸ்' நிவேதிதா

இப்போ வரைக்கும் என்னைப் பத்தி, என் கரியர் பத்தின ஒரு பயம் இருந்துட்டே இருக்கு. அந்த பயத்தை உடைச்சு அவங்ககிட்ட என்னை நிரூபிக்க முடியுங்குற நம்பிக்கையில் ஓடிட்டு இருக்கேன். விகடன்ல `நக்கலைட்ஸ்' டீமுக்கு விருது கொடுத்தாங்க. அதைப் பார்த்ததுக்கு அப்புறம்தான் பொண்ணு ஏதோ பண்றா... பண்ணட்டும்னு அப்பா சொன்னார்.

Published:Updated:

``காளீஸ்வரியைவிட என் பழைய பெயர் நிவேதிதாதான் புடிச்சிருக்கு'' - `நக்கலைட்ஸ்' நிவேதிதா

இப்போ வரைக்கும் என்னைப் பத்தி, என் கரியர் பத்தின ஒரு பயம் இருந்துட்டே இருக்கு. அந்த பயத்தை உடைச்சு அவங்ககிட்ட என்னை நிரூபிக்க முடியுங்குற நம்பிக்கையில் ஓடிட்டு இருக்கேன். விகடன்ல `நக்கலைட்ஸ்' டீமுக்கு விருது கொடுத்தாங்க. அதைப் பார்த்ததுக்கு அப்புறம்தான் பொண்ணு ஏதோ பண்றா... பண்ணட்டும்னு அப்பா சொன்னார்.

``காளீஸ்வரியைவிட என் பழைய பெயர் நிவேதிதாதான் புடிச்சிருக்கு'' - `நக்கலைட்ஸ்' நிவேதிதா

நக்கலைட்ஸ் நிவேதிதா... `நக்கலைட்ஸ்' என்கிற அடையாளத்தை அவ்வளவு எளிதாக எட்டிப் பிடிக்கவில்லை. தன் திறமையை மட்டுமே நம்பி நடிப்புத் துறைக்குள்ளே அடியெடுத்து வைத்திருக்கும் இளம் வயதுப் பெண். விவசாயக் குடும்பத்தைச் சார்ந்த இவர், கடந்து வந்த பாதை குறித்து நம்மிடையே பகிர்ந்தார்.

என்னுடைய சொந்த ஊர் கோயம்புத்தூர். அப்பா விவசாயி. எம்.ஐ.பி (Master of International Business) முடிச்சிருக்கேன். எனக்குச் சின்ன வயசுல இருந்தே நடிப்பு மேல ஆர்வம் இருந்துச்சு. என் ஃப்ரெண்ட்டோட ஷார்ட் ஃபிலிமில் நடிக்கிறதுக்காக ஆக்டிங் பயிற்சியில் சேர்ந்தேன். அங்கே நக்கலைட்ஸ் பிரசன்னா சாரும், ராஜேஷ்வரும் சிறப்பு விருந்தினரா வந்திருந்தாங்க. அப்படிதான் அவங்க எனக்கு அறிமுகமானாங்க. அப்போ `முகமூடி'ன்னு ஒரு குறும்படம் எடுக்க டிரை பண்ணி, நிறைய பொண்ணுங்ககிட்ட பேசிட்டு இருந்தாங்க. யாருமே நடிக்க சம்மதிக்கலை. ஏன்னா... அந்தக் குறும்படம் துப்புரவு வேலை பண்றவங்களுடைய வாழ்க்கையைப் பற்றி ஓப்பனா பேசும்ங்கிறதுனால பலரும் தயங்கினாங்க. என்கிட்ட அவங்க கேட்கவும் நான் தயங்காம யெஸ் சொன்னேன். நக்கலைட்ஸ் கொடுத்த முதல் வாய்ப்பு `முகமூடி'. அந்தக் குறும்படத்துக்கு அப்புறம் கிட்டத்தட்ட ஒன்றரை வருஷமா நக்கலைட்ஸில் நடிச்சிட்டு இருக்கேன்'' என்றவரிடம் பர்சனல் குறித்துக் கேட்டோம்.``என் அப்பா என்னுடைய முதல் வீடியோ பார்த்துட்டு என்கிட்ட பேசவே இல்லை. அவங்களை பொறுத்தவரைக்கும் மீடியா துறைன்னா பொண்ணுங்களுக்குப் பாதுகாப்பு கிடையாது. ஆரம்பத்தில் நானும் அப்படித்தான் நினைச்சேன். நக்கலைட்ஸில் சேர்ந்ததுக்குப் பிறகுதான் நேர்மையானவங்ககூட இந்தத் துறையில் இருப்பாங்கன்னு தெரிஞ்சுகிட்டேன். எங்க வீட்ல உள்ளவங்க அந்தக் காலத்து ஆள்கள். அதனால என்னை நடிக்க வேணாம்னு சொன்னாங்க. அவங்க பார்த்து வளர்ந்த உலகம் வேற. ஆனா, இப்ப நிறைய மாறியிருக்கு. நாம பார்க்கிற ஆளுக வேற! தன் வீட்டுப் பொண்ணு பாதுகாப்பா இருக்குமான்னு என்னைப் பெத்தவங்க யோசிக்கிறாங்க.

`நக்கலைட்ஸ்' நிவேதிதா
`நக்கலைட்ஸ்' நிவேதிதா

``என் அப்பா என்னுடைய முதல் வீடியோ பார்த்துட்டு என்கிட்ட பேசவே இல்லை. அவங்களை பொறுத்தவரைக்கும் மீடியா துறைன்னா பொண்ணுங்களுக்குப் பாதுகாப்பு கிடையாது. ஆரம்பத்தில் நானும் அப்படித்தான் நினைச்சேன். நக்கலைட்ஸில் சேர்ந்ததுக்குப் பிறகுதான் நேர்மையானவங்ககூட இந்தத் துறையில் இருப்பாங்கன்னு தெரிஞ்சுகிட்டேன். எங்க வீட்ல உள்ளவங்க அந்தக் காலத்து ஆள்கள். அதனால என்னை நடிக்க வேணாம்னு சொன்னாங்க. அவங்க பார்த்து வளர்ந்த உலகம் வேற. ஆனா, இப்ப நிறைய மாறியிருக்கு. நாம பார்க்கிற ஆளுக வேற! தன் வீட்டுப் பொண்ணு பாதுகாப்பா இருக்குமான்னு என்னைப் பெத்தவங்க யோசிக்கிறாங்க. நான் சரியான பாதையிலதான் பயணிக்கிறேங்கிறதை என் வீட்ல உள்ளவங்களுக்கு புரிய வைக்கத்தான் அதிகம் சிரமப்பட வேண்டியதிருந்தது. விகடன்ல `நக்கலைட்ஸ்' டீமுக்கு விருது கொடுத்தாங்க. அதைப் பார்த்ததுக்கு அப்புறம்தான் பொண்ணு ஏதோ பண்றா... பண்ணட்டும்னு அப்பா சொன்னார். இப்போ வரைக்கும் என்னைப் பத்தி, என் கரியர் பத்தின ஒரு பயம் இருந்துட்டே இருக்கு. அந்த பயத்தை உடைச்சு அவங்ககிட்ட என்னை நிரூபிக்க முடியுங்குற நம்பிக்கையில் ஓடிட்டு இருக்கேன்'' என்றவரிடம் நடிப்பைத் தவிர்த்து வேற என்ன பண்றீங்கன்னு கேட்கச் சிரிக்கிறார்,

``டிரெஸ், ஜூவல்லரிஸெல்லாம் எனக்கு தெரிஞ்ச நண்பர்களுக்கும், சில கடைகளுக்கும் சேல் பண்றேன். அதுல கிடைக்கிற பணத்தை வைச்சுதான் என் பொருளாதார தேவையை நிறைவேற்றிக்கிறேன். நடிப்புக்குள்ளே வரலைன்னா பெரிய பிசினஸ் உமென் ஆகியிருப்பேன். உங்களுடைய திறமை மேல நம்பிக்கை வைச்சீங்கன்னா கண்டிப்பா அதுக்கான பலனை நீங்க பெறுவீங்கங்குறதுக்கு நானொரு உதாரணம். இப்போ உள்ள டைரக்டர்ஸூம் சரி, ஸ்கிரிப்ட் ரைட்டர்ஸூம் சரி நடிக்கிற பொண்ணு அழகா இருக்காங்களா.. அவங்களுக்குன்னு பேக்கிரவுண்டு இருக்குதான்னுலாம் பார்க்கிறதில்லை. திறமை இருக்கான்னு மட்டும்தான் பார்க்கிறாங்க. அழகு எப்போனாலும் வரும்.. போகுங்க! திறமை இருந்தா எந்த மூலையில் இருந்தாலும் நம்மளால் சாதிக்க முடியும் என்றவர் தன் பெயர்க் காரணத்தைச் சொன்னார்.

என் அப்பா, அம்மாவுக்குக் கடவுள் நம்பிக்கை ரொம்பவே உண்டு. அம்மாவுக்குக் குழந்தை பிறந்தால் சாமி பெயர் வைக்கிறேன்னு வேண்டியிருந்துருக்காங்க. நான் பிறந்ததும் எனக்கு நிவேதிதான்னு பெயர் வைச்சிட்டாங்க. அதுக்கு பிறகு எனக்கு ரொம்ப உடம்பு சரியில்லாம போச்சாம். பெயர் வெச்சது குத்தம்னு காளீஸ்வரின்னு பெயர் மாத்திட்டாங்க. ஆனா, எனக்கு நிவேதிதாங்குற பெயர்தான் பிடிக்கும். அந்தப் பெயரைத்தான் இப்போ பயன்படுத்துறேன்.

``காளீஸ்வரியைவிட என் பழைய பெயர் நிவேதிதாதான் புடிச்சிருக்கு'' - `நக்கலைட்ஸ்' நிவேதிதா

வெள்ளித்திரையில் நடிக்க வாய்ப்புகள் வந்துச்சு. சில காரணங்களால் அந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக்க முடியலை. என் நடிப்புத்திறமையை வெளிக்காட்டுற மாதிரியான கதாபாத்திரம் அமைஞ்சா நிச்சயம் நடிப்பேன்!" என்றவர் எதிர்கால கனவு குறித்துப் பகிரும் போது, "நான் ஆக்டிங் ஃபீல்டுக்குள்ளே போய் சாதித்ததுக்கு அப்புறமா இந்தச் சமூகத்தில் புறக்கணிக்கப்படுற, பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்படுகிற திருநங்கைகளுடைய வாழ்க்கைக்கு ஒரு வெளிச்சத்தை ஏற்படுத்திக் கொடுக்கணும்னு ஆசைப்படுறேன்" என்றார்.