Published:Updated:

“அதைக் கேட்டா கடுப்பாயிடுவேன்!”

நட்சத்திரா
பிரீமியம் ஸ்டோரி
நட்சத்திரா

பள்ளி முடித்துக் கல்லூரி செல்கிற கேப்பில், மொபைல் ‘கேக் ஷாப்’ நடத்தியவர். கல்லூரியில் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்து முடித்ததும் டிவி தொகுப்பாளினி.

“அதைக் கேட்டா கடுப்பாயிடுவேன்!”

பள்ளி முடித்துக் கல்லூரி செல்கிற கேப்பில், மொபைல் ‘கேக் ஷாப்’ நடத்தியவர். கல்லூரியில் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்து முடித்ததும் டிவி தொகுப்பாளினி.

Published:Updated:
நட்சத்திரா
பிரீமியம் ஸ்டோரி
நட்சத்திரா

இன்னொருபுறம் குறு ம்படங்களில் நடித்தார். தற்போது சீரியல் நடிகை. ஏகப்பட்ட சுற்றுகளை முடித்துள்ள நட்சத்திராவிடம் ஒரு கலகல கடலை...

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
“அதைக் கேட்டா கடுப்பாயிடுவேன்!”

“சின்ன வயசுல என் வாய்ஸ் அவ்வளவு சரியா இருக்காதாம். ‘பசங்க குரல் மாதிரி இருக்கே, பேசாம பாட்டு கிளாஸ் அனுப்புங்க; அப்போதான் குரல் திருந்தும்’னு அக்கம் பக்கத்துல உள்ளவங்க கொளுத்திப்போட, அதனாலேயே என்னைப் பாட்டு கிளாஸுக்கு அனுப்பியிருக்காங்க. ‘முழு ஈடுபாட்டோடு மியூசிக் கத்துக்கிட்டேனா’ங்கிறது இருக்கட்டும். ஆனா, ‘சன் சிங்கர்’ ஷோவுக்கு ஆங்கரா கமிட் ஆன அந்த நாள்ல இந்த ஃபிளாஷ்பேக் பற்றிதான் வீட்டுல பேச்சு.”

“தொகுப்பாளினியான புதுசுல ஒரு ஆசை இருந்தது. அந்த ஆசை நிறைவேறவே இல்லை. அதுக்குள்ளே சீரியல் நடிகையாகிட்டேன். ஆனாலும், ‘என்னைக்காவது ஒருநாள் அஜித்தைப் பேட்டி எடுக்கமாட்டோமா’ங்கிற அந்த ஆசை இப்பவும் இருக்கு. தேர்தல் நடந்தா அஜித் வந்து ஓட்டு போடுவாரே, அந்தப் பள்ளிக்கூடத்துக்கு எதிரேதான் எங்க வீடு. எலெக்‌ஷன் நடக்கிறப்போ எல்லாம் சிம்பிளா வந்து வரிசையில நின்னு அவர் ஓட்டு போடற அழகை ரசிக்கிறதுதான், என்னோட முதல் வேலை. அதுக்கப்புறம்தான் நான் ஓட்டு போடப்போவேன்.”

“அதைக் கேட்டா கடுப்பாயிடுவேன்!”

“சீரியல், சினிமா எது பண்ணினாலும் கொஞ்ச நாளைக்குத்தான் அங்கே ரவுண்டு வரமுடியும்ங்கிறது எனக்கு நல்லாத் தெரியும். அதனால, ஃபியூச்சர் பிளான் ஒண்ணு வெச்சிருக்கேன். வேறென்ன, ஹோட்டலோ, ரெஸ்ட்டாரன்டோ வெச்சுப் பொழச்சுப்பேன். ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பு, அனுபவம் ரெண்டுமே இருக்கு. தவிர, எங்க வீட்டுல எல்லோருமே நல்லா சமைக்கிறவங்க; சாப்பிடறவங்க. நல்லாவே எனக்கு சப்போர்ட் பண்ணுவாங்க.”

“ஆங்கரிங்ல மொக்கைக் கேள்வியைக் கேட்டு ‘பல்பு’ வாங்கின ஞாபகம் இல்லை. ஆனா, அலுப்புத் தட்டுற ஒரு பதில் இருக்கு. ‘ஆக்சுவலி, எனக்கு இதுல எல்லாம் இன்ட்ரஸ்ட் இருந்ததில்லை. வாய்ப்பு வந்ததால, நடிக்க வந்தேன்’ங்கிற பதில்தான் அது. இந்தப் பதிலால் கடுப்பாகாத தொகுப் பாளர்களே இருக்கமாட்டாங்கன்னு நினைக்கிறேன். எனக்குமே கேட்கிறப்போ எரிச்சலா வரும். வெளிக்காட்டிக்காம ஜாலியா இன்டர் வியூவைக் கொண்டு போகணும்ல... அதனால, ‘அப்படியாங்க’ன்னு கேட்டு, ஹிஹிஹின்னு சிரிச்சுவேற தொலைப்பேன்.”

“அதைக் கேட்டா கடுப்பாயிடுவேன்!”

“ஆங்கரிங்ல பெருசா என்ன செய்யலாம்னு நினைச்சுக்கிட்டிருந்த போதே, சீரியல் ஹீரோயின் ஆகிட்டேன். ‘சீரியல்ல ஒரு இடத்தைப் பிடிக்கணும்’ங்கிற ஆசை இப்போ வந்திருக்கு. அது நிறைவேறணும். அதுக்குள்ள சினிமாவிலும் ஹீரோயின் ஆகிட்டா நல்லா இருக்கும்ல!”

“முதல் நாள் சீரியல் ஷூட்டிங் போன அனுபவத்தை மறக்க ரொம்ப நாளாகும். சீனியர்களோட ‘ராக்கிங்’குக்கு பயந்து முகத்துல ஒரு கலவரத்தோடே காலேஜ் போற முதலாம் ஆண்டு மாணவி மாதிரியே இருந்தேன். ‘டிவி-யில பேச ஆரம்பிச்சா நிறுத்த மாட்டேங்கிறீங்க. இங்கே பேசவே மாட்டேங்கிறீங்க’ன்னு எல்லோருமே கேட்டாங்க. இப்போ யூனிட்கூட மிங்கிள் ஆகிட்டேன்.”