'நாம் இருவர் நமக்கு இருவர்' தொடரில் நடித்துக் கொண்டிருந்த ரச்சிதா சில காரணங்களால் அந்தத் தொடரில் இருந்து விலகினார். இதையடுத்து தற்போது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் 'இது சொல்ல மறந்த கதை' தொடரில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

'நாம் இருவர் நமக்கு இருவர்' தொடரின் இறுதி நாள் படப்பிடிப்பு தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த தொடரில் கிளைமாக்ஸ் ஷூட்டின்போது ஒட்டுமொத்த டீமும் கேக் வெட்டி அந்தத் தொடரின் வெற்றியைக் கொண்டாடி இருக்கிறார்கள். இந்தக் கொண்டாட்டத்தில் ரச்சிதாவும் நிச்சயம் கலந்து கொள்ளவேண்டும் என நினைத்து அவரையும் அழைத்திருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் அந்தத் தொடரில் நடித்துக் கொண்டிருந்த ராஜூ பிக்பாஸிற்கு சென்ற பிறகு தொடரில் நடிக்காமல் இருந்தாலும் அவரும் இந்தக் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறார்.

ஒட்டுமொத்த டீமும் கேக் வெட்டி மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்ட காணொலியை ரச்சிதா அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். மேலும், அந்தப் பதிவில், ' முடிவு ஒரு புதிய தொடக்கம் என்கிறார்கள்..... எனவே இது முழு அணிக்கும் ஒரு அழகான தொடக்கமாக இருக்கட்டும்!' எனவும் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்தத் தொடரில் இருந்து அவர் வெளியேறியிருந்தாலும் அது சார்ந்த விஷயங்கள் எதனையும் பெரிதுபடுத்தாமல் அந்த டீமுடன் செலிபிரேஷனில் எந்தவித ஈகோவும் இல்லாமல் இயல்பாய் ரச்சிதா கலந்து கொண்டதை அவருடைய ரசிகர்கள் பலரும் குறிப்பிட்டு பாராட்டி வருகிறார்கள்.