Published:Updated:

நஸ்ரியா அட்ராசிட்டி, பாரதிராஜா மெசேஜ், பிரியா பவானியின் தத்துவங்கள்! - சோஷியல் மீடியா ரவுண்ட் அப்

#SocialMediaRoundup
#SocialMediaRoundup

லாக்டெளனில் பரபரப்பாக இருக்கும் ஒரே இடம், சோஷியல் மீடியாதான். பிரபலங்கள் அங்கே ஷேர் செய்யும் சுவாரஸ்யங்கள், இங்கே உங்கள் பார்வைக்கு. #SocialMediaRoundup

அவ்வப்போது ஹீரோயின்கள் தங்களது சிறுவயது புகைப்படங்களை சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டு லைக்ஸ் அள்ளுவது வழக்கம். அப்படி, தற்போது தான் குழந்தையாக இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் தவழவிட்டிருக்கிறார் நடிகை நஸ்ரியா. அவரின் குழந்தைத்தனத்தையும் குறும்புத்தனத்தையும் ரசிக்காதவர்களே இல்லை. இந்தப் புகைப்படத்தோடு, 'Always' என்ற கேப்ஷனையும் பதிவிட்டுள்ளார். கடந்த வாரம் தனக்கு முகப்பரு வந்ததையும் புகைப்படமாக எடுத்து அட்ராசிட்டி செய்திருந்தார் நஸ்ரியா.

View this post on Instagram

😀Always.....

A post shared by Nazriya Nazim Fahadh (@nazriyafahadh) on

"எல்லோரும் தான் வளர்க்கும் நாய்தான் சிறந்தது என்று நினைப்பார்கள். அதில் தவறில்லை" என்று கேப்ஷனோடு தன்னுடைய நாய் ருத்ராவை கட்டிப்பிடித்திருக்கும் புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளார், அருண் விஜய். தவிர, தினமும் 30 கி.மீ சைக்கிளிங் செய்ய வேண்டும் என்பதை டார்கெட்டாக வைத்து இயங்கிவருகிறாராம் அருண். இவர், 30 கி.மீ என்றால் ஆர்யா தினமும் 50 கி.மீ சைக்கிளிங் செய்து பழைய நிலைக்கு திரும்பியிருக்கிறார்களாம்.

`` `மாஸ்டர்'ல `லைஃப் இஸ் வெரி ஷார்ட் நண்பா'ன்னு நான் ஏன் எழுதினேன்னா..?'' - அருண்ராஜா காமராஜ்

மாஸ்க், தொப்பி அணிந்துகொண்டு மக்கள் தன்னை அடையாளம் கண்டுபிடிக்காத அளவுக்கு முகத்தை மறைத்துக்கொண்டு, மக்களோடு மக்களாக வெளியே சுற்றுவதைப் பல நடிகர்கள் வழக்கமாக வைத்துள்ளனர். ஆனால், இப்போது எல்லோரும் முகத்தில் முகக்கவசம் அணியவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது. இந்த லாக்டெளனை கொஞ்சம் தளர்த்தி இருப்பதால், தன் தம்பி சிந்தாந்த் கபூருடன் முகக்கவசம் அணிந்து சூப்பர் மார்கெட்டில் தனக்குத் தேவையான பொருள்களை பர்ச்சேஸ் செய்த புகைப்படத்தை பதிவிட்டிருக்கிறார், நடிகை ஷ்ரத்தா கபூர்.

View this post on Instagram

Groceries adventure with my bhaiya @siddhanthkapoor 💜

A post shared by Shraddha (@shraddhakapoor) on

படம் வெளியாவதற்கு முன் செலிரிபிரிட்டி ப்ரீமியர் ஷோ திரையிடுவது போல, 'பொன்மகள் வந்தாள்' படத்தை திரைப் பிரபலங்களுக்கு காண்பித்திருக்கிறது படக்குழு. அப்படத்தைப் பார்த்த பாரதிராஜா, சமுத்திரக்கனி, பாண்டிராஜ் உள்ளிட்ட பல திரைப் பிரபலங்கள், ஜோதிகாவின் நடிப்பை சிலாகித்து சமூக வலைதளங்களில் எழுதிவருகின்றனர்.

பிரியா பவானி ஷங்கர் வெளிநாடுகளில் எடுத்த புகைப்படத்தைப் பதிவிட்டு ஹார்ட்டின்களை அள்ளுவது வழக்கம். அதில், பல புகைப்படங்கள் சோ க்யூட் ரகம்தான். அப்படி ஒரு மலைப் பிரதேசத்தின் உச்சியில் உட்கார்ந்திருக்கும் புகைப்படத்தை, 'நீங்கள் அதற்கு தயாராக இருந்தால், சில நேரங்களில் அக்கரையில் இருந்து பார்க்கும் காட்சி அற்புதமானது' என்ற கேப்ஷனோடு பதிவிட்டிருக்கிறார்.

நாடு முழுக்க புலம்பெயர் தொழிலாளர்களைப் பற்றிய செய்தி மனத்தை உலுக்குகிறது. அவர்களைப் பற்றி வீடியோவை பதிவிட்டு, "இயற்கையின் கோபம். கடவுள்தான் உலகைக் காப்பாற்ற வேண்டும். இனி இதையெல்லாம் பார்க்க முடியாது. புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவி செய்து அவர்களை காப்பாற்றுவோம். இந்தக் கடுமையான காலமும் நம்மைவிட்டு கடந்து போகும். விரைவில் நல்ல காலம் பிறக்கும் என்று நம்புவோம்" என்று வருத்தத்துடன் கூறியிருக்கிறார், நடிகை ராய் லட்சுமி.

தெலுங்கில் அதிக கவனம் செலுத்திவரும் நடிகை ராஷி கண்ணா, தற்போது தமிழ் பக்கம் திரும்பியிருக்கிறார். ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 'அருவா', பா.விஜய் இயக்கத்தில் அர்ஜுன், ஜீவா நடிக்கும் 'மேதாவி', சுந்தர்.சி இயக்கத்தில் 'அரண்மனை 3' ஆகிய படங்கள் கைவசம் வைத்துள்ளதால், இந்த லாக் டெளனை பயன்படுத்தி தமிழ் கற்றுக்கொள்ளலாம் என முடிவுசெய்து ஆன்லைன் க்ளாஸ் செல்கிறாராம்.

தள்ளிப்போகும் `பொன்னியின் செல்வன்'... இடையில் இன்னொரு காதல் படம்... மணிரத்னம் பிளான் என்ன?
அடுத்த கட்டுரைக்கு