கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ' இதயத்தை திருடாதே' தொடரின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் நவீன். அந்தத் தொடர் இரண்டு பாகமாக ஒளிபரப்பப்பட்டது. தற்போது கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் 'கண்ட நாள் முதல்' என்கிற தொடரில் நடித்துக் கொண்டிருக்கிறார். 'மக்கள் நாயகன்' என ரசிகர்களால் அழைக்கப்படும் நவீன் சினிமா பின்புலத்தை சார்ந்தவர்.

செய்தி வாசிப்பாளராக அனைவருக்கும் அறிமுகமானவர் கண்மணி. அவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. எளிமையான கிராமப்புற பின்னணியைக் கொண்ட கண்மணி அவருடைய ஊரில் உள்ள பெண்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே போராடி மீடியா துறைக்குள் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருப்பதாகச் சொல்லியிருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இருவருடைய வீட்டிலும் பேசி முடிவானது தான் இவர்களது திருமணம். 'அரேஞ்சுடு கம் லவ்' மேரேஜ் என கெத்தாக சொல்லிக் கொள்கிறார்கள், இருவரும்! நேற்று இவர்களுடைய திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் வெள்ளித்திரை, சின்னத்திரை பிரபலங்கள் பலர் கலந்துகொண்டு இவர்களை வாழ்த்தியிருக்கிறார்கள். அதிலும், குறிப்பாக இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் நேரில் சென்று இந்த நட்சத்திர ஜோடியை வாழ்த்தியிருக்கிறார்.
அதனைத் தொடர்ந்து இன்று அவர்களுடைய திருமணம் சென்னையில் நடைபெற்றிருக்கிறது. அவர்களுக்கு அவர்களுடைய ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் வாழ்த்துகள் கூறி வருகின்றனர். வாழ்த்துகள் நவீன் - கண்மணி!