Published:Updated:

`ஒரு போஸ்ட்; ரூ.1.86 கோடி!’ - இன்ஸ்டா பதிவுகளால் கல்லா கட்டும் கோலி, பிரியங்கா சோப்ரா

விராட் கோலி, பிரியங்கா சோப்ரா இருவரும் வைத்துள்ள ஃபாலோயர்களின் எண்ணிக்கையை வைத்து, அவரவர்கள் வெளியிடும் இன்ஸ்டாகிராம் போஸ்ட்டுகளின் மதிப்பு அதிகரித்துள்ளது.

விராட்கோலி பிரியங்கா சோப்ரா
விராட்கோலி பிரியங்கா சோப்ரா

2019-ம் ஆண்டுக்கான இன்ஸ்டாகிராம் மதிப்பு மிக்க நபர்களின் பட்டியல் அண்மையில் வெளியாகியிருக்கிறது. இந்தப் பட்டியலை Hopperhq நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. ஒவ்வோர் ஆண்டும் வெளியாகும் இந்தப் பட்டியலில், நடப்பு ஆண்டில் இந்திய கிரிக்கெட் விளையாட்டு வீரர் விராட் கோலியும், பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவும் இடம்பிடித்திருக்கிறார்கள்.

பிரியங்கா சோப்ரா
பிரியங்கா சோப்ரா

இந்திய கேப்டன் விராட் கோலி தனது அபார திறமையாலும், ஃபிட்னஸ் விஷயங்களாலும் கோடிக்கணக்கான ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்திருக்கிறார். தற்போதைய நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 38.2 மில்லியன் ஃபாலோயர்களை வைத்திருக்கிறார். அதே போல பிரியங்கா சோப்ராவும் உலக அளவில் 43.4 மில்லியன் ஃபாலோயர்களை வைத்திருக்கிறார். இவர்கள் இருவரும் வைத்துள்ள ஃபாலோயர்களின் எண்ணிக்கையை வைத்து, அவரவர்கள் வெளியிடும் இன்ஸ்டாகிராம் போஸ்ட்டுகளின் மதிப்பு அதிகரித்துள்ளது.

இந்தப் பட்டியலில் முதல் இடம் அமெரிக்காவின் மீடியா பிரபலம் கெய்லி ஜென்னருக்குக் கிடைத்திருக்கிறது. இவருடைய இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்களின் எண்ணிக்கை 141 மில்லியன். ஒரு விளம்பரப் பதிவுக்கு இவர் பெறும் பணம் ரூ.8.7 கோடி.

பிரியங்கா சோப்ரா, பதிவிடும் ஒவ்வொரு விளம்பர போஸ்டுக்கும் $271,000 டாலர் (ரூ. 1.86 கோடி) பெறுகிறார். இதனால் இந்தப் பட்டியலில் இவருக்கு 19-வது இடம் கிடைத்திருக்கிறது. விராட் கோலி அவர் பதிவிடும் ஒவ்வொரு விளம்பர போஸ்டுக்கும் $196,000 டாலர் (ரூ. 1.35கோடி) பெறுகிறார். இதனால் இந்தப் பட்டியலில் இவருக்குக் கிடைத்திருக்கும் இடம் 23. பிரியங்கா சோப்ரா பல ஸ்கின்கேர் பிராண்டு மற்றும் பியூட்டி பிராண்டுகளுடனும், விராட் கோலி பிரபலமான விளையாட்டு பிராண்டுகளுடனும் பார்ட்னர்ஷிப் வைத்து விளம்பர பதிவுகளை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.