கட்டுரைகள்
ஆன்மிகம்
சினிமா
பேட்டிகள்
Published:Updated:

“ஆன்லைன்ல தமிழ் படிக்கிறேன்” - ராஷி கண்ணா ஜாலி பேட்டி!

ராஷி கண்ணா
பிரீமியம் ஸ்டோரி
News
ராஷி கண்ணா

நான் எதுவும் பிளான் பண்ணலை. பாலிவுட்ல 'மெட்ராஸ் கஃபே' படத்துக்கு பிறகு, தெலுங்குல இருந்து ஆஃபர் வந்துச்சு.

பாலிவுட்டில் அறிமுகமாகி டோலிவுட்டில் பல வெற்றி படங்களில் நடித்துவிட்டு, தற்போது கோலிவுட் பக்கம் தடம் பதிக்க வந்திருக்கிறார், ராஷி கண்ணா. போட்டோஷூட் முடிந்து பேட்டி ஆரம்பிக்க சில நிமிடங்கள் இருந்தன. அப்போது ஒரு எக்ஸாம் ஹாலுக்கு உள்ளே நுழைவதற்கு முன் படிப்பது போல பரபரப்பாக நோட்டைப் புரட்டி பார்த்துக்கொண்டிருந்தார். ஏதோ படத்துடைய ஸ்கிரிப்ட் என்று நினைத்து இது என்னவென்று கேட்டபோது, "லாக்டெளன்ல இருந்து தமிழ் கிளாஸ் போயிட்டு இருக்கேன். இது என் கிளாஸ் நோட். உங்ககிட்ட தமிழ்ல பேசணும்ல... அதனால, நோட்ஸ் பார்த்து ரிவிஷன் பண்ணிட்டு இருக்கேன்" என்று ஆச்சர்யப்படுத்தினார். பேட்டி தொடங்கியது.

"லாக்டெளன் காலங்கள் எப்படிப் போச்சு?"

"ஆரம்பத்துல ரொம்ப கடுப்பா இருந்துச்சு. ரெண்டாவது மாசத்துல இருந்து ஆன்லைன் கிளாஸ் சேர்ந்து தமிழ் படிக்க ஆரம்பிச்சுட்டேன். சென்னையில லீலானு ஒரு மேடம்தான் எனக்கு தமிழ் கிளாஸ் எடுக்குறாங்க. ஒரு மொழியை கத்துக்கிறது அவ்வளவு ஈஸி கிடையாது. ஆனா, இந்த லாக்டெளன்ல வேற எந்த வேலையும் இல்லைங்கிறதனால முழுமையா இதுல மட்டும் கவனம் செலுத்தி தமிழ் கத்துக்கிட்டேன். இன்னும் கொஞ்சம் கத்துக்கணும். தவிர, எனக்கு மியூசிக் மேல பெரிய ஆர்வமுண்டு. ஆன்லைன் கிளாஸ் மூலமா கிட்டார் கத்துக்கிட்டு அதையும் ப்ராக்டீஸ் பண்ணிட்டு இருக்கேன். ஆகமொத்தம், லாக்டெளனை நல்லா பயன்படுத்திக்கிட்டேன்"

“ஆன்லைன்ல தமிழ் படிக்கிறேன்” - ராஷி கண்ணா ஜாலி பேட்டி!

"டெல்லியில இருந்து வந்து தெலுங்கு நல்லா பேசுறீங்க. இப்போ தமிழும். எப்படி இதெல்லாம்?"

"ஒரு மொழியை கத்துக்கிறது ரொம்ப ரொம்ப சவாலான விஷயம். ஆனா, அதே அளவுக்கு அதுல சுவாரஸ்யம் இருக்கு. நாம நடிக்கிற கேரக்டருக்கு நியாயம் சேர்க்க மொழி ரொம்ப அவசியம். அது புரிஞ்சா மட்டும்தான் உணர்வு ரீதியா அந்த கேரக்டரா மாறமுடியும். மக்கள் மனசுக்குள்ளயும் போகமுடியும். அப்படித்தான் நான் தெலுங்கும் கத்துக்கிட்டேன். தமிழ் கத்துக்கிட்டிருக்கேன். தமிழ் தெரியாமல் நான் நடிச்சதுக்கும் இப்போ நடிக்கிறதுக்கும் எனக்கே வித்தியாசம் தெரியுது. ஜீவா கூட 'மேதாவி'னு ஒரு படம் நடிக்கிறேன். அந்த ஷூட்டிங்ல அவர்கூட தமிழ்ல மட்டும்தான் பேசிட்டு இருக்கேன். அவர் சர்ப்ரைஸாகி ரொம்ப பாராட்டினார். 'இன்னொரு எக்ஸ்க்ளூஸிவ் நியூஸ் சொல்லவா? 'சங்கத்தமிழன்' படத்துக்கு பிறகு, மறுபடியும் விஜய்சேதுபதி கூட 'துக்ளக் தர்பார்' படத்துல நடிக்கிறேன். நான் அவருடைய பெரிய ஃபேன். அவர் நடிச்ச 'விக்ரம் வேதா' எனக்கு ரொம்பப் பிடிக்கும். குறிப்பா, 'சூப்பர் டீலக்ஸ்'ல வேற லெவல்ல நடிச்சிருப்பார். விஜய் சேதுபதியால ஹீரோவாவும் நடிக்கமுடியும்; வில்லனாவும் மிரட்டமுடியும். அதுதான் அவருடைய மிகப்பெரிய ப்ளஸ். நான் விஜய் சாருடைய பயங்கரமான ரசிகையும் கூட. எனக்கு ரொம்ப பிடிச்ச ரெண்டு நடிகர்கள் நடிச்சிருக்கிற 'மாஸ்டர்' படத்துக்காக ரொம்ப ஆவலா காத்திக்கி்டிருக்கேன்."

"நீங்க சினிமாத்துறைக்கு வந்து ஏழு வருடங்கள் ஆகிடுச்சு. கரியர் திருப்திகரமா இருக்கா?"

"திருப்தியாதான் இருக்கும். நான் எதையும் ப்ராக்டிக்கலா எடுத்துக்குற பொண்ணு. நான் நடிக்கிற படம் வெற்றியோ தோல்வியோ அதை ஒரே மாதிரிதான் எடுத்துக்கிறேன். திரையில என்னைப் பார்க்க மக்கள் விரும்பணும். தெலுங்குல நிறைய படங்கள் பண்ணிட்டேன். இனி தமிழ்ல அதிகம் கவனம் செலுத்தலாம்னு இருக்கேன். தமிழ்ல இன்னும் என் திறமை முழுமையா வெளிப்படலைனு நினைக்கிறேன். ஒரு படம் முழுக்க பொம்மை மாதிரி அழகா வர்றதைவிட, பர்ஃபார்ம் பண்றதுக்கு ஸ்கோப் இருக்கிற சின்னக் கேரக்டரா இருந்தாலும் அதுல நடிக்கணும்னு ஆசைப்படுறேன். அப்படி இன்னும் தமிழ்ல அமையலை. லாக்டெளன்ல நிறைய தமிழ் படங்கள்தான் பார்த்தேன்.அதுல மணிரத்னம் சாருடைய படங்கள் அதிகம். அவர்கூட ஒரு படமாவது வொர்க் பண்ணிடணும். வெற்றிமாறன் சார் படங்கள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவர் படத்துல எந்த மாதிரி கேரக்டர்கள் கொடுத்தாலும் நான் ஓகே சொல்லிடுவேன். அதே சமயம், யங் டைரக்டர்கள்ல அட்லிக்கூட வொர்க் பண்ணணும். ஷாரூக் கான் சாரை டைரக்ட் பண்ணப்போறாராமே? சூப்பர்ல"

"எந்த ஜானர் படங்கள் பிடிக்கும்?"

"ரொமான்டிக் காமெடி, பொலிடிக்கல் டிராமா ரொம்பப் பிடிக்கும். சூப்பரான பொலிடிக்கல் டிராமா கதையில ரொம்ப ஸ்ட்ராங்கான கேரக்டர்ல நடிக்கணும்னு ஆசை"

“ஆன்லைன்ல தமிழ் படிக்கிறேன்” - ராஷி கண்ணா ஜாலி பேட்டி!

" 'ஹீரோயின் சென்ட்ரிக்' அப்படிங்கிற வார்த்தையை எப்படி பார்க்குறீங்க?"

"படங்களை படங்களா பார்க்கலாம்னு நினைக்@கிறேன். மத்த படங்களை 'ஹீரோ சென்ட்ரிக் படங்கள்'னு யாரும் சொல்றதில்லை. அப்புறம் ஏன் 'ஹீரோயின் சென்ட்ரிக் படங்கள்'னு டேக் பண்றாங்கன்னு தெரியலை. எல்லாமே படங்கள்தான். அதனால, அந்த வார்த்தையை பயன்படுத்த தேவையில்லைனு நினைக்கிறேன்"

"எந்த மாதிரியான கேரக்டர்கள்ல நடிக்கணும்னு நினைக்கிறீங்க?"

"கதை கேட்கும்போது என்னை அந்தக் கேரக்டருக்குள்ள வெச்சுப் பார்ப்பேன். அது எனக்கு பிடிச்சா ஓகே சொல்லுவேன். இல்லைனா, கதை நல்லாருந்தால்கூட 'நான் அந்தக் கேரக்டருக்கு செட்டாகமாட்டேன்னு நினைக்கிறேன்'னு சொல்லி நோ சொல்லிடுவேன். என்னை எல்லா படத்திலயும் சிட்டியில இருக்கிற மாடர்ன் பொண்ணாதான் நடிக்க கூப்பிடுறாங்க. ஆனா, எனக்கு கிராமத்து பொண்ணா நடிக்கணும்னு அவ்ளோ ஆசை. இதுவரை எனக்கு அப்படியான கேரக்டர்கள் வரவேயில்லை"

“ஆன்லைன்ல தமிழ் படிக்கிறேன்” - ராஷி கண்ணா ஜாலி பேட்டி!

"பாலிவுட்லதான் உங்களுடைய முதல் படம். அதுக்கு பிறகு, ஏன் அங்கே நடிக்கலை?"

"நான் எதுவும் பிளான் பண்ணலை. பாலிவுட்ல 'மெட்ராஸ் கஃபே' படத்துக்கு பிறகு, தெலுங்குல இருந்து ஆஃபர் வந்துச்சு. 'தென்னிந்திய சினிமானாலே டான்ஸும் மியூசிக்கும் மட்டும்தான். அதனால, பண்ணவேண்டாம்'னு நினைச்சேன். அப்புறம், காஸ்டிங் டைரக்டர் அந்தக் கேரக்டர் ரொம்ப நல்லாருக்குனு சொன்னார். சரினு கதைக்கேட்ட பிறகு, எனக்கும் ரொம்பப் பிடிச்சிருந்தது. எந்த இண்டஸ்ட்ரிங்கிறது முக்கியமில்லை. என்ன கேரக்டர் நடிக்கிறோம்ங்கிறதுதான் முக்கியம்னு புரிஞ்சுக்கிட்டேன். அதனால, நல்ல கேரக்டர்கள் எந்த மொழியில இருந்து வந்தாலும் நடிப்பேன். எனக்கு பர்சனலா தென்னிந்திய மக்களோட ஆதரவு ரொம்பப் பிடிச்சிருக்கு. அது இன்னும் நிறைய கிடைக்கணும்னு உழைச்சுக்கிட்டிருக்கேன்"

"இங்க இருக்கிற ஹீரோயின் யாராவது இந்தில படம் நடிச்சா, அவங்க பாலிவுட்டுக்கு போய்ட்டாங்கன்னு பெருசா பார்க்கப்படுது. நீங்க அங்க இருந்து வந்ததனால பாலிவுட் பெருசா தெரியலையா?"

"பாலிவுட் படத்துல நடிக்கிறது ஒரு இலக்கு கிடையாது. இது ஒரு பயணம் அவ்ளோதான். நிறைய பேர் பாலிவுட்ல படங்கள் நடிச்சாலும் அவங்க அங்க திருப்தியா இல்லை. இங்கேயே ரொம்ப நல்ல கேரக்டர்கள் எல்லாம் எழுதுறாங்க. ஒரே சமயத்துல ரெண்டு படகுல பயணிக்கணும்னு நினைக்கக்கூடாது. என்னால எவ்ளோ முடியுமோ அவ்ளோ நாள் தென்னிந்திய சினிமாவுல வேலை செய்யணும்னு நினைக்கிறேன். அப்படி என்னை இம்ப்ரஸ் பண்ற மாதிரி கேரக்டர்கள் பாலிவுட்ல இருந்து வந்தால் நடிப்பேனே தவிர, பாலிவுட் சினிமாவை இலக்கா நான் நினைக்கலை. எப்படி கோலிவுட், டோலிவுட்டோ அதே மாதிரிதான் பாலிவுட்டும் ஒரு மொழி சினிமா"

“ஆன்லைன்ல தமிழ் படிக்கிறேன்” - ராஷி கண்ணா ஜாலி பேட்டி!

"ஃபிட்னஸ்?"

"எனக்கு டயட் பிடிக்கவே பிடிக்காது. நல்லா சாப்பிடணும். நல்லா வொர்க் அவுட் பண்ணணும். நிறைய தண்ணீர் குடிப்பேன். கொழுப்பை குறைக்கணும்னா, முதல்ல கொழுப்பை சேர்த்துக்கணும். அதனால, காலையில கண்டிப்பா ஒரு டீ ஸ்பூன் நெய் சேர்த்துக்குவேன். மதியம் சிக்கன், மீன்னு நிறைய ப்ரோட்டீன் எடுத்துக்குவேன். இப்போ இருக்கிற பெண்கள் தைராய்டு, PCODனு நிறைய பிரச்னைகள் சந்திக்கிறோம். அதனால, டயட் இருந்தால் வேலைக்காகாது. இப்போ கொரோனால இருந்து தப்பிக்கணும்னா எதிர்ப்பு சக்தி அதிகமா இருக்கணும். அதுக்கு நல்லா சாப்பிடணும்"

"சீனியர் ஹீரோயின்கள்கிட்ட டிப்ஸ் கேட்டதுண்டா?"

"'பெங்கால் டைகர்'னு ஒரு தெலுங்கு படத்துல தமன்னா கூட வொர்க் பண்ணினேன். அப்போ அவங்க எனக்கு நிறைய மேக்கப் டிப்ஸ் கொடுத்தாங்க. ஸ்கின் கலர் டோனை எப்படி பார்த்துக்கணும், தலைமுடியை எப்படி பராமரிக்கணும்னெல்லாம் நிறைய சொல்லிக்கொடுத்தாங்க. நடிப்பை பொருத்தவரையில, மோகன்லால் சார், விஜய் சேதுபதி சார் இவங்கக்கிட்ட இருந்து நிறைய கத்துக்கிட்டேன்"

"உங்களை கடுப்பேத்துற கேள்வி எது?"

"ஹீரோயின்கள்கிட்ட எப்போ கல்யாணம் பண்ணிக்கப்போறீங்க, எப்போ குழந்தை பெத்துக்கப்போறீங்கனு கேட்கிறது கடுப்பா இருக்கும். திருமணம், குழந்தை முக்கியம்தான். ஆனா, பெண்களுக்கு அதைத் தாண்டி நிறைய விஷயங்கள் இருக்கு. எங்க வேலையைப் பத்தி பேசத்தானே வந்திருக்கோம். அப்போ அதைப் பத்திதானே கேட்கணும்"

"உங்களைப் பத்தி வெளியான செய்தியைப் பார்த்து டென்ஷனானதுண்டா?"

"எனக்கு இண்டஸ்ட்ரியில க்ளோஸ் ஃப்ரண்ட்ஸ் கிடையாது. ஷூட்டிங் முடிஞ்சா நேரா ஹோட்டலுக்கு போயிடுவேன். அதனால, என்னைப் பத்தி காஸிப் வராது. ஒருமுறை நான் உடல் எடையைக் குறைக்கணும்னு லைபோசக்‌ஷன் ஆப்ரேஷன் பண்ணிருக்கேன்னு எழுதிருந்தாங்க. நான் தினமும் ஜிம்முக்கு போய் கஷ்டப்பட்டு வொர்க் அவுட் பண்ணி ஃபிட்டானா, அசால்டா இப்படி எழுதிடுறாங்க. அதைப் படிக்கும்போது ரொம்ப அபத்தமா இருந்தது"