Published:Updated:

`ராஷ்மிகா மந்தனாவின் கவனத்தைப் பெற்ற சிறுமி'; `சாமி சாமி’ பாடலுக்கு நடனமாடிய வீடியோ வைரல்!

ராஷ்மிகா மந்தனா ( twitter )

அந்த வீடியோவில், `சாமி சாமி’ என்ற பாடலுக்குக் குழுவாக குழந்தைகள் நடனமாடிக்கொண்டிருக்க, ஒரு சிறுமி தன்னுடைய அட்டகாசமான ஆட்டத்தால் அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளார்.

அல்லு அர்ஜுன், ரஷ்மிகா மந்தனா நடிப்பில், சுகுமார் இயக்கத்தில் வெளிவந்த படம் `புஷ்பா'. திரையரங்குகளில் பட்டையைக் கிளப்பிய இந்த படத்தின் வசனங்களும், பாடல்களும் மிகப் பிரபலம்.

Pushpa
Pushpa

அதிலும் குறிப்பாக `சாமி சாமி’ என்ற பாடல் ராஷ்மிகாவின் அபாரமான நடனத்தால் பெரும்பாலான மக்களின் கவனத்தை ஈர்த்தது. அதனால் ரஷ்மிகாவை போலவே பலரும் நடனமாடி தங்களின் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டனர்.

2021-ல் வெளியான இந்த திரைப்படத்தின் பாடல், தற்போது மீண்டும் ட்ரெண்டாகி வருகிறது. அதற்குக் காரணம் ஒரு சிறுமி. அந்த வீடியோவில், `சாமி சாமி’ என்ற பாடலுக்குக் குழுவாக குழந்தைகள் நடனமாடிக்கொண்டிருக்க, ஒரு சிறுமி தன்னுடைய அட்டகாசமான ஆட்டத்தால் அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளார். குறிப்பாக, திரைப்படத்தில் வரும் ராஷ்மிகாவின் நடன காட்சிகளைப் போலவே அந்த சிறுமி ஆடியுள்ளார்.

இணையவாசிகளின் கவனத்தைப் பெற்ற இந்த வீடியோ ட்ரெண்டாகி வந்த நிலையில், அந்த பதிவை ரீ ட்வீட் செய்து, ``மேட் மை டே.. இந்த க்யூட்டியை நேரில் சந்திக்க வேண்டும்'' என ரஷ்மிகா மந்தனா, தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் விருப்பம் தெரிவித்து பதிவிட்டுள்ளார்.