Published:Updated:

பரிந்துரை... இந்த வாரம்... திரை நடிப்புப் பயிற்சி

தம்பிச்சோழன்
பிரீமியம் ஸ்டோரி
தம்பிச்சோழன்

‘ஆனந்த விகடன்’ வாசகர்களுக்காக வாரந்தோறும் ஒவ்வொரு விஷயத்தைப் பரிந்துரைக்கிறார்கள் பிரபலங்கள். இந்த வாரம் திரை நடிப்புப் பயிற்சியாளர் தம்பிச்சோழன்.

பரிந்துரை... இந்த வாரம்... திரை நடிப்புப் பயிற்சி

‘ஆனந்த விகடன்’ வாசகர்களுக்காக வாரந்தோறும் ஒவ்வொரு விஷயத்தைப் பரிந்துரைக்கிறார்கள் பிரபலங்கள். இந்த வாரம் திரை நடிப்புப் பயிற்சியாளர் தம்பிச்சோழன்.

Published:Updated:
தம்பிச்சோழன்
பிரீமியம் ஸ்டோரி
தம்பிச்சோழன்

ரு எழுத்தாளனுக்கு சொற்கள் போலதான், நடிகர்களுக்கு மனம்- உடல்- குரல் ( Mind - Body- Voice). இந்த மூன்றும்தான் நடிப்புக்குப் பிரதானம். சினிமா , இயக்குநரின் ஊடகம். இயக்குநரின் தேவையைத் தனது திறமையால் பூர்த்தி செய்யும் வேலை நடிகருடையது. குறிப்பிட்ட கதையில் தனது கதாபாத்திரம் மட்டுமின்றி கதையின் போக்கையும் உள்வாங்குதல் நடிகருக்கு அவசியம். அந்தக் கதாபாத்திரமாக தன்னை நினைத்துக்கொண்டு, உணர்ச்சிகளை கதாபாத்திரத்தின் வழியே வெளிப்படுத்த வேண்டும்.

பரிந்துரை... இந்த வாரம்...  திரை நடிப்புப் பயிற்சி

மேற்கத்திய நாடுகளில் நடிகர்களுக்கென்று தனித்தனிப் பயிற்சியாளர்கள் இருப்பார்கள். நடிகர்களைப் போலவே நடிகர்களின் பயிற்சியாளர்களுக்கும் கதை சொல்லப்படும். அவர் நடிகர்களைத் தயார்படுத்துவார். ஒவ்வொரு காட்சியும் ஒத்திகை பார்க்கப்படும். ஆனால் நமது தமிழ் சினிமாவில் பெரும்பாலும் ஒத்திகைகள் நடப்பது இல்லை. அந்தப் பயிற்சியை நடிகர்கள்தான் மேற்கொள்ள வேண்டும். தன்னை வெளிப்படுத்தாது கதாபாத்திரமாக வெளிப்பட, கற்றுக் கொள்ளுதல் பயனளிக்கும்.

நடிப்பின் மற்றொரு அங்கம்தான் வாய்ஸ் ஆக்டிங் (Voice Acting). ஆனால் வெறுமனே அதை ‘டப்பிங்’ எனப் புரிந்துகொள்ளுதல் தவறு. பிரபல ஹாலிவுட் படங்கள் தமிழில் டப்பிங் செய்யப்படும்போது தேர்ந்த நடிகர்களைக் கொண்டு டப்பிங் செய்வதன் காரணம் அதுதான். அது வெறுமனே குரல் கொடுப்பதல்ல... வாய்ஸ் ஆக்டிங். நடிகர் தன் குரல், உடல், மனம் மூன்றிலும் உணர்வுகளைக் கடத்த வேண்டும்.

நவீன நாடகத்தில் பக்கம் பக்கமாக வசனங்களை மாதக்கணக்கில் ஒத்திகை பார்த்துப் பேசி நடிக்கும் நடிகர் திரைநடிப்பில் கேமராவின் ஒரு க்ளோஸ்-அப்பை எதிர்கொள்வதற்கு திணறுவதுண்டு. பொதுவாக மேடை நாடகத்தில் நடிகர்தான் பிரதானக் கருவி. திரைப்படத்தில் கேமரா, இசை என்பது போல நடிகரும் ஒரு கருவி. மேடையில் நடிகர்கள் மொத்த நாடகத்தையும் ஒரு ஃப்ரேமில் நடித்துக் காட்டுகிறார்கள். திரைப்படத்தில் ஒவ்வொரு ஃப்ரேமிலும் நடிக்க வேண்டும். கூடவே நடிக்காமல் சும்மா இருக்கவும் தெரிய வேண்டும்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தமிழ் சினிமாவில் நடிகர்களைக் கையாளுவதில் இயக்குநர் வெற்றி மாறன், இயக்குநர் பாலாஜி சக்திவேல் ஆகியோர் என்னை மிகவும் கவர்ந்தவர்கள். மலையாளத்தில் என்னைக் கவர்ந்தவர், ‘மகேஷிண்டே பிரதிகாரம்’, `தொண்டி முதலும் திருக்‌ஷாட்சியும்’ படங்களின் இயக்குநர் திலீஸ் போத்தன். அவர் நடிப்பு பயின்ற நடிகரும்கூட. ‘கும்பளங்கி நைட்ஸ்’ படப்பிடிப்புத் தளத்தில், திலீஸ் போத்தனின் உதவி இயக்குநர் ரஞ்சித்திடம் பேசினேன்.

தம்பிச்சோழன்
தம்பிச்சோழன்

திலீஸ் போத்தன் ‘தொண்டி முதலும் திருக்‌ஷாட்சியும்’ படத்தில் நடிகர் ஃபகத் ஃபாஸிலிடம் நடிப்பு வாங்கிய முறையைக் கேட்டேன். உதவி இயக்குநர் ரஞ்சித் சொன்ன தகவல்கள் எனக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தந்தன. திலீஸ் போத்தனைப் போன்றுதான் இந்தி இயக்குநர்கள் விஷால் பரத்வாஜ், அனுராக் காஷ்யப், இம்தியாஸ் அலி ஆகியாரும் நடிகர்களிட மிருந்து நடிப்பை வாங்குவதற் கான அல்லது நடிகர்கள் அவர்கள் ஏற்றுக்கொண்ட பாத்திரத்தை வெளிப்படுத்து வதற்கான நேரத்தையும் சூழலையும் உருவாக்கித் தருபவர்களாக இருக்கி றார்கள்.

பரிந்துரை... இந்த வாரம்...  திரை நடிப்புப் பயிற்சி

என்னிடம் பயிற்சிக்கு வருபவர்களும் நண்பர்களும் கேட்கும் பிரதானமான கேள்வி ‘ திரைப்படத்தில் நடிக்க விரும்புபவர்கள் மேடை நாடகத்தில் ஏன் பயிற்சி பெற வேண்டும்?’ என்பது. தேவையில்லைதான். நடிகர்கள் அடிப்படைப் பயிற்சிகளை எடுத்துக்கொள்வது அவசியம். அதன்பின்பு நேரடியாக கேமராவை எதிர்கொள்வதற்கான பயிற்சிகளில் அதிகமாக ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். இணை இயக்குநர்கள், உதவி இயக்குநர்களை சந்தித்து உரையாடித் தொடர்புகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். படப்பிடிப்புத் தளங்களுக்குச் சென்று மற்றவர்கள் நடிப்பதை அவதானிக்க வேண்டும். மூத்த நடிகர்களின் ஆலோசனைகளைக் கேட்டுத் தங்களைத் தகுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். வாய்ப்பு இருக்கும் பட்சத்தில் நடிகர்கள் தங்களுக்கென்று தனி நடிப்புப் பயிற்சியாளரை அமர்த்திக் கொள்ளலாம். ஒரு திரைப்படம் எல்லா வகையிலும் வெற்றி பெற நடிகரும் தன் பங்கை சிறப்பாக வெளிப்படுத்த வேண்டும்.