தமிழ் சீரியல்களில் இரட்டை வேடம் வைப்பது மிகவும் அரிதான ஒன்று. ராதிகாவின் `வாணி ராணி', ரம்யா கிருஷ்ணனின் `தங்கம்', இப்படி இரட்டையர்கள் கான்செப்ட் வைத்து உருவாகி வெற்றிகரமாக ஒளிப்பரப்பாகிய சீரியல்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். இந்த வரிசையில் தற்போது மிர்ச்சி செந்தில் இரட்டை வேடத்தில் நடிக்கும் `நாம் இருவர் நமக்கிருவர்' தொடர் வெற்றிக்கரமாக ஒளிப்பரப்பாகி வருகிறது. இதற்குப் போட்டியாக ஜீ தமிழில் `இரட்டை ரோஜா’ என்னும் நெடுந்தொடர் விரைவில் ஒளிப்பரப்பாக உள்ளது. இரட்டை சகோதரிகளின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகிவரும் இந்த சீரியலில் நாயகனாக அறிமுகமாகிறார் `ராஜா ராணி’ சீரியல் புகழ் அக்ஷய் கமல்.

`ராஜா ராணி' சீரியலில் துருதுரு இளைஞராக வலம்வந்த அக்ஷய் கமல் தற்போது இரட்டை ரோஜா சீரியலில் சீரியஸான இளைஞராக நடித்துவருகிறார். இதில் ஹைலைட் என்னவென்றால், இவர் மியூசிக்கலி மூலமாக நடிப்புத் துறைக்கு வந்தவர். இவருக்கு பெரிய பேன் ஃபோலோயர்ஸே உள்ளனர். சீரியல் என்ட்ரி, மியூசிக்கலி ஆப், சினிமா ஆசை என பல்வேறு சுவாரஸ்யமான விஷயங்களை அக்ஷய் கமல் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே சென்னைதான். சின்ன வயசிலிருந்தே சினிமா மேல ஒரு ஈர்ப்பு. பள்ளிப்படிப்பு முடிஞ்சதும் சினிமா சார்ந்த படிப்புகள் படிக்கலாம்னு முடிவு பண்ணேன். ஆனால் வீட்ல ஒத்துக்கல. நாங்க மிடில் கிளாஸ் ஃபேமிலி. அதனால சினிமாலாம் ஒத்து வராதுன்னு வீட்ல சொல்லிட்டாங்க. என் அம்மா ஆசைப்படி பொறியியல் படிப்பில் சேர்ந்தேன். படிச்சு முடிச்சதும் ஒரு வருஷம் பொறியாளரா வேலை பார்த்தேன். அப்பவும் எனக்கு நடிப்பு மேல இருந்த காதல் குறையல. அதனால இன்ஸ்டாகிராமில் சினிமா நடிகர்கள் மாதிரி டயலாக் பேசி அதனோடு மியூசிக் சேர்த்து எடிட் பண்ணி வீடியோவாக பகிர்வேன். அந்த எடிட்டிங் பண்ணவே சுமார் 5 மணி நேரமாகும். ஆனால், அந்த சமயத்தில் அந்த வீடியோக்களுக்கு அந்தளவுக்கு ரெஸ்பான்ஸ் இல்லை. என் நண்பர்கள் தொடர்ந்து என்கரேஜ் பண்ணாங்க. நீ நல்லா நடிக்கிற தொடர்ந்து பண்ணு. வாய்ப்புகள் கண்டிப்பா வரும்னு சொன்னாங்க. அப்போதான் என் நண்பர் ஒருத்தர் நீ ஏன் கஷ்டப்பட்டு வீடியோ எடுத்து எடிட் பண்ணி போடுற. மியூசிக்கலி-ன்னு ஒரு ஆப் இருக்கு அதில் அப்படியே வீடியோ பண்ணலாம்னு சொன்னார். அதன்பிறகு முழு வீச்சில் மியூசிக்கலி பண்ண ஆரம்பிச்சேன். எனக்கென்று ரசிகர்கள் உருவானாங்க. ஃபேன் பேஜ்லாம் வேற உருவாக்கினாங்க. என்னால நம்பவே முடியல. அப்படியே என் முகங்கள் சீரியல் இயக்குநர்களின் கண்களில்பட்டது. அப்படி கெடச்சதுதான் `ராஜா ராணி' வாய்ப்பு.

`ராஜா ராணி' சீரியலில் என்கூட நடிச்ச எல்லாருமே நடிப்புத் துறையில் சீனியர்ஸ். எனக்கு ரொம்பப் புதுசு. அதனால் கொஞ்சம் பயந்தேன். ஆனால், அங்கு யாருமே என்னை அப்படி நடத்தல. குறிப்பா குரோஷி ரொம்ப ஜாலியா பழகுவார். அங்கு நிறைய கத்துக்கிட்டேன். அந்த சீரியல் வந்த மாதிரி நாம் ரொம்ப வாலு பையன்லாம் கிடையாது. ரியல் லைஃபில் ரொம்ப அமைதியான ஆளு நான்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
`ராஜா ராணி' சீரியல் வாய்ப்புக்குப் பிறகு என் பொறியியல் வேலையை முழுசா விட்டுட்டேன். வீட்ல என் சீரியல் பார்த்து சந்தோஷப்பட்டாலும், இந்தப் புகழ், பேர் நடிப்புத் துறையில் நிரந்தரமானதில்லை-ன்னு கொஞ்சம் பயப்பட்றாங்க. எனக்கு அந்த பயம் இருக்கு. ஆனால், இதற்கு பயந்து வேறு வேலையில் கவனம் செலுத்தினால் திரைத் துறையில் சாதிக்க முடியாது. எனக்குப் பெரிய ஸ்டார் ஆகணும், ரஜினி, கமல் மாதிரி ஆகணும்னுலாம் ஆசை கிடையாது. நாசர் மாதிரி அற்புதமான குணச்சித்திர நடிகரா என்னை முன்னிறுத்தணும் அதுதான் என் ஆசை, கனவு. அதை நோக்கிதான் பயணிச்சிட்டு இருக்கேன். இப்போதெல்லாம் பொது இடங்களில் மக்கள் வந்து அன்பா பேசுறாங்க. நல்லா நடிக்கிறீங்கன்னு புகழுறாங்க. இதெல்லாம் என் மனசுல துள்ளல ஏற்படுத்தினாலும், இதெல்லாம் நிரந்தரம் இல்லைன்னு ஒரு பயமும் இருக்கு.

இப்போதெல்லாம் பொது இடங்களில் மக்கள் வந்து அன்பா பேசுறாங்க. நல்லா நடிக்கிறீங்கன்னு புகழுறாங்க. இதெல்லாம் என் மனசுல துள்ளல ஏற்படுத்தினாலும், இதெல்லாம் நிரந்தரம் இல்லைன்னு ஒரு பயமும் இருக்கு.
ஏதோ ஒரு விதத்துல எனக்கு நடிப்புத் துறையில் வாய்ப்பு தேடிக் கொடுத்தது மியூசிக்கலிதான். ஆனால் மியூசிக்கலி, டிக்டாக் போன்ற செயலிகள பலர் தவறா பயன்படுத்துறது கஷ்டமா இருக்கு.

முகத்தைச் சுளிக்கும் டிரெஸ்ஸிங், ஜோடியாக வீடியோக்கள் வெளியிடுவது, லைக்ஸுக்காக ஆபத்தான முயற்சிகள் எடுப்பது என நிறைய பேர் தவறா பயன்படுத்துறாங்க. நடிப்பு மீது ஆர்வமா இருந்தா உண்மையான திறமையை வெளிப்படுத்துங்க. வாய்ப்புகள் தேடிவரும். ஆனால், தவறாகப் பயன்படுத்தாதீங்க. அதனால என்னைப் போல பேஷனேட்டான இளைஞர்கள் அனைவருக்குமே அவப்பெயர் ஏற்படுது’’ என்கிறார் பக்குவமாக.