Published:Updated:

ரொமான்டிக் சிரஞ்சீவி, கடுப்பான வரலட்சுமி, Bella ciao மஞ்சு வாரியர்! - சோஷியல் மீடியா ரவுண்டப்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
Actress Rashmika Mandanna - சோஷியல் மீடியா ரவுண்ட் அப்
Actress Rashmika Mandanna - சோஷியல் மீடியா ரவுண்ட் அப்

லாக்டெளனில் பரபரப்பாக இருக்கும் ஒரே இடம், சோஷியல் மீடியாதான். பிரபலங்கள் அங்கே ஷேர் செய்யும் சுவாரஸ்யங்கள், இங்கே உங்கள் பார்வைக்கு. #SocialMediaRoundup

ஸ்பானிஷ் க்ரைம் ட்ராமா தொடராக 2017-ம் ஆண்டு வெளிவந்து ஹிட் அடித்த தொடர் 'Money Heist'. ஸ்பெயினில் இருக்கும் ராயல் மின்ட் என்கிற இடத்தை ஆக்கிரமித்து நோட்டுகளை அச்சடித்துக் கொள்ளையடிக்கத் திட்டமிடும் கும்பலுக்கும் போலீஸுக்கும் நடக்கும் டாம் அண்ட் ஜெர்ரிதான் இந்த சீரிஸின் ஒன்லைன். உலகம் முழுவதும் இந்த சீரிஸுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதுவரை நான்கு சீஸன்கள் வரை நெட்ஃபிளிக்ஸில் வெளியாகியிருக்கிறது.

View this post on Instagram

@lacasadepapel @alvaromorte

A post shared by Manju Warrier (@manju.warrier) on

இந்தத் தொடருக்கு மட்டுமல்லாது, இதன் ’Bella Ciao’ பாடலுக்கும் ரசிகர்கள் எக்கச்சக்கம். இந்த லாக்டௌன் நேரத்தில் அந்தப் பாடலின் டியூனை வீனையில் வாசித்து அசத்தியுள்ளார் நடிகை மஞ்சு வாரியார். இதைத் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார் மஞ்சு வாரியார். இவரது ‘மணி ஹெய்ஸ்ட்’ சீரிஸ் பாடலின் வீணை வெர்ஷனுக்கு தற்போது பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை தங்கள் கமென்டை பதிவிட்டுள்ளனர்.

லாக்டெளனில் பிரபலங்கள் பலரும் ஷோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகின்றனர். அதில் நடிகர் சிரஞ்சீவியும் ஒருவர். ஒவ்வொரு வருடமும் நடக்கும் நடிகர் நடிகைகளின் 80’ஸ் மீட்டப் டான்ஸ் வீடியோக்கள், `தி ரியல் மேன் சேலஞ்ச்’ எனப் பல சுவாரஸ்யமான விஷயங்களை இந்த லாக்டெளனில் தனது சோஷியல் மீடியாக்களில் பகிர்ந்து வந்தார் சிரஞ்சீவி.

தற்போது அவர் பகிர்ந்துள்ள புகைப்படம் அவரது ரசிகர்களிடையே வைரலாக உள்ளது. ‘Joyful Holiday in America 1990’ எனக் கேப்ஷனிட்டு 1990-ல் தன் மனைவியுடன் அமெரிக்கா சென்றபோது சமையலில் தன் மனைவிக்கு உதவுவது போன்று உள்ளது. ‘Jail’full Holiday in Corona’ எனத் தற்போது 2020 லாக்டெளனிலும் அதே போன்று கிச்சனில் தன் மனைவிக்கு உதவிக்கொண்டிருப்பதாகவும், `காலங்கள் மாறலாம்; காட்சிகள் மாறாது’ என்ற கேப்ஷனோடு தனது அன்பை வெளிப்படுத்தியுள்ளார் சிரஞ்சீவி.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நடிகை வரலட்சுமி சரத்குமாரின் திருமணம் குறித்தான செய்திதான் சோஷியல் மீடியாவின் இப்போதைய ஹாட் டாப்பிக். விஷாலுடன் காதல் என்ற செய்தி நீண்ட நாள்களாக இருந்த வந்த நிலையில், இருவருக்கும் பிரேக்கப் எனவும் செய்திகள் வந்தன. இந்த நிலையில், விஷாலுக்கு கடந்த ஆண்டு வேறொருவருடன் நிச்சயதார்த்தம் நடக்க, வரலட்சுமுக்கும் திருமண ஏற்பாடுகள் நடக்கவிருப்பதாகச் செய்திகள் வரத்தொடங்கின.

இந்திய கிரிக்கெட் அணியில் முக்கிய பொறுப்பில் இருப்பவரும் வரலட்சுமியின் குடும்ப நண்பருமான சந்தீப்தான் மாப்பிள்ளை என்பது தகவல். இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தனக்கு திருமணம் இல்லை எனவும், அப்படி நடந்தால் அது குறித்து வெளிப்படையாக நானே அறிவிப்பேன், தற்போது படங்கள் நடிப்பதை நான் நிறுத்தவில்லை எனவும் தெளிவுப்படுத்தியுள்ளார் வரலட்சுமி.

`திருடா திருடி’, `பவர் பாண்டி’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை சாயாசிங். இவருக்குத் தமிழின் முதல் படமான `திருடா திருடி’யில் அவரது விஜி கதாபாத்திரமும் `மன்மத ராசா’ பாடலும் இப்போது வரையிலுமே ஹிட் டாப்பிக். அந்தப் பாடலும் இவரது நடனமும் அப்போது பரவலாகப் பேசப்பட்டது. தற்போது தமிழ், கன்னடா படங்களிலும் சீரியல்களிலும் கவனம் செலுத்தி வருபவர் சமீபத்தில், தனது பிறந்தநாளைக் கொண்டாடினார்.

பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் தரும் விதமாக, `மன்மத ராசா’ பாடலுக்கு சிவசங்கர் மாஸ்டருடன் ரீகிரியேட் செய்துள்ள வீடியோவைத் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார் சாயா.

View this post on Instagram

#PlayfulSymphony #SplashesAreMyPassion

A post shared by Kajal Aggarwal (@kajalaggarwalofficial) on

`காற்று வெளியிடை’, `சைக்கோ’ படங்களின் நாயகி அதிதி. நடனத்திலும் ஆர்வம் கொண்டவரான அதிதி, சமீபத்தில் நடனத்தில் தனது குருவான லீலா சம்சனின் பிறந்தநாளுக்காக வீடியோ ஒன்றைத் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

`யாருக்கு நாயகிகள் தேவையில்லையோ அவனே ரியல் ஹீரோ!' #HBDNawazuddinSiddiqui

அதில் அவர், `எனது குருவின் பிறந்தநாளுக்காக இசையுடன் கூடிய நடனத்தையே முதலில் பதிவு செய்தேன். பின்னர் அருகில் வரும் தண்ணீரின் சப்தம் எனது குரு நடனம் அமைத்த ‘அர்த்தநாரீஸ்வரா அஷ்டகம்’மை நினைவுப்படுத்தியது. எனவே, இசையை நிறுத்திவிட்டு தண்ணீரின் சப்தம் எழுப்பும் இசையிலேயே நடனத்தை அமைத்தேன்’ எனப் பதிவிட்டுள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு