Published:Updated:

சமந்தாவைப் பற்றி அப்படி ஒரு கமென்ட்... எப்படி கணித்தார் அந்த பல்லாவரம் டீச்சர்?! #SocialMediaRoundup

#SocialMediaRoundup
#SocialMediaRoundup

லாக்டெளனில் பரபரப்பாக இருக்கும் ஒரே இடம், சோஷியல் மீடியாதான். பிரபலங்கள் அங்கே ஷேர் செய்யும் சுவாரஸ்யங்கள், இங்கே உங்கள் பார்வைக்கு. #SocialMediaRoundup

லாக்டெளன் ஆரம்பித்ததில் இருந்து தனது குழந்தைகளுடன் விளையாடுவதை தினமும் வீடியோவாகப் பதிவிட்டு வந்தார் சூரி. ஆனால், சமீப காலமாக அவரின் வீடியோ வரவில்லை. தற்போது முகம் நிறைய தாடி மேனாக மாறியிருக்கும் அவர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 'Keepu Calmu carry on Thalaivaaa... #bestdaystocome #riseandshine" என ஆங்கிலத்தில் கேப்ஷனை பதிவிட்டிருக்கிறார்.

அல்லு அர்ஜுனின் 'அலா வைகுந்தபுரமுலோ' படத்தின் பாடல்களுக்கு டிக் டாக் செய்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர். தற்போது மகேஷ்பாபு நடித்த 'சரிலேரு நீக்கேவரு' படத்தில் இடம்பெற்ற 'மைண்ட் பிளாக்' பாடலுக்கு டிக் டாக் செய்துள்ளார். ஏற்கெனவே, இயக்குநர் பூரி ஜெகந்தாத், தன் படத்தில் ஒரு கேமியோ ரோல் வார்னருக்கு உண்டு என்று கூறியிருக்கிறார். ஆனால், வார்னரின் ஆர்வத்தைப் பார்த்தால் விரைவில் டோலிவுட்டில் ஹீரோவாகவே களமிறங்கிவிடுவார் போல.

சாயிஷா ஆர்யாவின் இன்ஸ்டாகிராம் அப்டேட் வந்தாலே, நிச்சயம் அவரின் டான்ஸிங் வீடியோ என்று கணித்துவிடலாம். ஆனால், இம்முறை ஆர்யாவுடன் பாலி சென்றபோது, நீச்சல் குளத்தில் படுத்திருக்கும் புகைப்படத்தைப் பதிவிட்டு, 'I Miss the water' என உச் கொட்டியுள்ளார் சாயிஷா.

பாலிவுட் இயக்குநரும் தயாரிப்பாளருமான கரண் ஜோகர், "வெற்றி மாறனின் 'அசுரன்' பார்த்தேன். பிரமாதமாக எடுத்திருந்தார். தனுஷின் நடிப்பு அற்புதம். அட்லி இயக்கிய 'பிகில்' எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது. அவரின் எல்லாப் படங்களையும் பார்த்திருக்கேன். அவர், 'மசாலா சினிமாவின் மெஜீஷியன்' என்று கூறியிருக்கிறார். அதற்கு, அட்லி பணிவுடன் நன்றி சொல்ல, பதிலுக்கு ஹார்டின்களை அள்ளி வீசியிருக்கிறார், கரண் ஜோகர்.

தீபிகா படுகோன், தங்களது குடும்ப வாட்ஸ்அப் குரூப் சாட்டிங்கை ஸ்கிரீன் ஷாட் எடுத்து பதிவிட்டிருக்கிறார். அதில், அனைவரும் ரன்வீர் சிங்கைப் பாராட்டி இருக்கின்றனர். "எங்கள் குடும்பத்தில் யாருக்காவது அருமையான நாளாக அமைந்தால் இப்படித்தான் பேசிக்கொள்வோம். எல்லோரும் என் கணவரின் சமீபத்திய பேட்டியைப் பாராட்டிவருகின்றனர். அதேபோல, நாங்கள் மற்றவர்களைப் பாராட்டும் நேரங்களும் உள்ளன" என அப்டேட் தட்டியிருக்கிறார், தீபிகா.

சில நாள்களுக்கு முன் போலீஸாரால் கொல்லப்பட்ட மூன்று ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கு ஆதரவாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார், நடிகை ஏமி ஜாக்சன். "இதயம் கணக்கிறது. மூன்று ஆப்பிரிக்க-அமெரிக்கர்கள் அஹ்மத் ஆர்பெரி, பிரோனா டெய்லர் மற்றும் ஜார்ஜ் ஃபிலாய்ட் ஆகியோரின் கொடூரமான கொலைகள் பற்றிய செய்திகளைப் பார்த்தேன். இது மனிதகுலத்திற்கு எதிரான பாவம். கறுப்பின மக்களுக்கு எதிராக நடக்கும் போலீஸின் மிருகத்தனத்தால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். நாம் அனைவரும் கறுப்பின மக்களுக்கு ஆதரவாக ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். ‘லைக்’ பட்டனை அழுத்துவது, இதை ரீ போஸ்ட் செய்வதைவிட உரையாடலை மேற்கொள்வோம். @blcklivesmatter, @blackvisioncollective போன்ற தளங்கள் இருக்கின்றன. நாம் அனைவரும் ஒன்றுபட்டு அவர்களுக்கு ஆதரவளிக்க வேண்டும்" என்று ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்திருக்கிறார், ஏமி

அடிக்கடி போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பகிரும் சமந்தா, எப்போதாவது அதில் ஒரு சர்ப்ரைஸ் வைத்திருப்பார். அப்படி அவர் சமீபத்திய சர்ப்ரைஸாக பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு புராகரஸ் ரிப்போர்ட்டை பதிவிட்டிருக்கிறார். (நடிப்புல மட்டுமில்ல) "படிப்புலயும் சம்மு கில்லிதான். ஸ்கூலுக்கே சம்மு பெரிய சொத்து" என அந்த ரிப்போர்ட்டில் எழுதியிருக்கிறார், அந்த பல்லாவரம் டீச்சர். ஸ்கூலுக்கு மட்டுமா சொத்து, இந்த சமூகத்துக்கே அவங்க சொத்துதான் மேம்!

அடுத்த கட்டுரைக்கு