Published:Updated:

புதுமை விரும்பி தீபிகா படுகோன், கிளாஸிக் காதலி அனுஷ்கா ஷர்மா

 அனுஷ்கா ஷர்மா
பிரீமியம் ஸ்டோரி
அனுஷ்கா ஷர்மா

செலிபிரிட்டி மேக்கப் வுமன் சந்தியா சேகர்

புதுமை விரும்பி தீபிகா படுகோன், கிளாஸிக் காதலி அனுஷ்கா ஷர்மா

செலிபிரிட்டி மேக்கப் வுமன் சந்தியா சேகர்

Published:Updated:
 அனுஷ்கா ஷர்மா
பிரீமியம் ஸ்டோரி
அனுஷ்கா ஷர்மா

செலிபிரிட்டி சாய்ஸ்

பாலிவுட் முழுவதும் `நெப்போட்டிசம்' (வாரிசுகளுக்கு முன்னுரிமை) நீக்கமற நிறைந்திருக்கிறது எனக் கடந்த சில மாதங்களாகப் பேசப்பட்டு வருகிறது.

தென்னிந்தியர்களுக்கு பாலிவுட் கோட்டையின் கதவுகள் திறக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டும் பரவலாக முன்வைக்கப்படுகிறது. இதற்கு நடுவே, திறமைக்கு நிற, இன, பால் பேதங்கள் கிடையாது என்பதை நிரூபித்திருக்கிறார் சந்தியா சேகர். கர்நாடக மாநிலம், உடுப்பியைச் சேர்ந்த சந்தியா, முன்னணி பாலிவுட் நடிகைகளின் பிசியான மேக்கப் வுமன் மற்றும் ஹேர் டிரஸ்ஸர்.

தீபிகா படுகோன்
தீபிகா படுகோன்

தீபிகா படுகோன், கத்ரினா கைஃப், அனுஷ்கா ஷர்மா, ஜான்வி கபூர், அதிதிராவ், ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ், யாமி கவுதம், ஸ்ரீதேவி, கல்கி, டாப்சி. ரிச்சா சதா, ஹூமா குரேஷி, அலியா பட் என நீள்கிறது இவரது செலிபிரிட்டி க்ளையன்ட்ஸ் லிஸ்ட். முன்னணி ஆங்கில இதழ்களின் அட்டைகளை அலங்கரிக்கும் பாலிவுட் நடிகைகள் மற்றும் மாடல்களைத் தன் மேக்கப் மற்றும் ஹேர் ஸ்டைலால் வசீகரிக்க வைப்பவர் சந்தியா.

அதிதிராவ்
அதிதிராவ்

மாநிறம், மென்மையான குரல், கர்வமற்ற பேச்சு என முதல் பார்வையிலேயே கவனம் ஈர்க்கும் சந்தியா, உடுப்பியிலிருந்து உச்சம்தொட்ட கதையை நம்மோடு பகிர்ந்துகொண்டார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

‘`உடுப்பியில் ஒரு கிராமத்துல பிறந்து வளர்ந்தவள் நான். படிப்புதான் முக்கியம்னு வலியுறுத்தும் குடும்பம். படிப்பைத் தாண்டி எனக்கு இன்னொரு விஷயத்திலும் ஆர்வம் இருந்தது. சின்ன வயசுலயிருந்தே வண்ணங்கள் பிடிக்கும். அடுத்தவங்களுக்கு மேக்கப் செய்துவிடப் பிடிக்கும். ஆனா, அதை ஒரு புரொஃபஷனா எடுத்துப் பண்ண முடியும் என்ற ஐடியாகூட அந்த வயசுல இருந்ததில்லை. காமர்ஸ்ல டிகிரி முடிச்சிட்டு, எம்.பி.ஏ படிச்சேன். யெஸ் பேங்க், ஜேபி மார்கன்னு கார்ப்பரேட் செட்டப்பில் வேலை பார்த்திருக்கேன்.

அனுஷ்கா ஷர்மா
அனுஷ்கா ஷர்மா

25 வயசுல திடீர்னு ஒரு ஞானோதயம். இந்த கார்ப்பரேட் உலகமும் எந்திரத்தனமான வேலையும் எனக்கானதில்லைனு தோணுச்சு. வேலையை விட்டேன். மேக்கப்தான் எனக்கு நிஜமான சந்தோஷத்தைக் கொடுக்கும்னு தெரிஞ்சது. அதை முழுநேர வேலையாகவும் பண்ண முடியும் என்ற தெளிவு அந்த வயசுல வந்திருந்தது. பெங்களூரு, மும்பைனு பல இடங்களில் மேக்கப் கோர்ஸ் படிச்சேன். அந்தத் துறை தொடர்பான விஷயங்களில் நிமிஷத்துக்கு நிமிஷம் என்னை அப்டேட் பண்ணிக்கிட்டே இருந்தேன்.

ராதிகா ஆப்தே
ராதிகா ஆப்தே

பிசினஸ் ஆரம்பிக்கலாம்னு பெங்களூரு போனபோது அங்கே மார்க்கெட் நிலவரம் நான் எதிர்பார்த்த மாதிரி இல்லை. அங்கிருந்து மும்பைக்குப் போனேன். வாய்ப்புகளுக்காக எல்லாக் கதவுகளையும் தட்டினேன். நிறைய பேரைச் சந்திச்சேன். முதல் ஒரு வருஷம் பெரிய போராட்டமாதான் இருந்தது. அதன் பிறகு, மெள்ள மெள்ள வாய்ப்புகள் வர ஆரம்பிச்சது''

- குட்டி ஸ்டோரி சொல்லும் சந்தியா, தடைகளைத் தாண்டியே வெற்றியை எட்டியிருக்கிறார்.

புதுமை விரும்பி தீபிகா படுகோன், கிளாஸிக் காதலி அனுஷ்கா ஷர்மா

‘`பிரபல பத்திரிகைகளுக்கான அட்டைப்பட போட்டோஷூட்டுக்குதான் முதல்ல வொர்க் பண்ண ஆரம்பிச்சேன். அந்த வகையில நிறைய பிரபலங்களுக்கு என்னைப் பத்தி தெரியவந்தது. திறமைதான் எனக்கான விசிட்டிங் கார்டா இருந்திருக்கு. நான் மேக்கப் பண்ணின முதல் செலிபிரிட்டி பாலிவுட் நடிகை நேஹா துபியா. மேக்கப், ஹேர் டிரஸ்ஸிங்னு ரெண்டையும் நானே செய்வேன். ஒரே நாளில் மூணு, நாலு மேக்கப், ஹேர் ஸ்டைல் மாத்த வேண்டியிருக்கும். வேலை ரொம்ப கடுமையா இருந்தாலும் சீக்கிரமாகவும் கிரியேட்டிவ்வாகவும் வேலைபார்க்க கத்துக்கிட்டேன்.

 கத்ரினா கைஃப்
கத்ரினா கைஃப்

மேக்கப் ஆர்ட்டிஸ்ட்டா ஆறேழு வருஷங்கள் வேலைபார்த்த பிறகு, செலிபிரிட்டீஸ்கூட வொர்க் பண்றதுல ஒருவகையான அலுப்பு வந்தது. செலி பிரிட்டீஸ் எப்போதும் பிசியாகவே இருப்பாங்க. எல்லாரும் கிரியேட்டிவ் வான ஐடியாக்களுக்கு காதுகொடுக்க மாட்டாங்க. நான் நினைச்ச மாதிரியான லுக்கை கொண்டுவருவதில் சிக்கல் இருந்ததா ஃபீல் பண்ணியிருக்கேன். இவையெல்லாம் ஆரம்ப கால மனத் தடைகள், சவால்கள். மத்தபடி செலிபிரிட்டியை ரீச் பண்றதுலயோ, எனக்கு அவங்களை ஓகே சொல்ல வைக்கிறதுலயோ எந்தப் பிரச்னையும் இருந்ததில்லை. எந்த செலிபிரிட்டிகூட வொர்க் பண்ணணும்னு நான் முடிவு செய்தேன். செலிபிரிட்டியோ, சாதாரண மணப்பெண்ணோ... யாராக இருந்தாலும் அவங்களுடைய கம்ஃபர்ட் ஸோனுக்குள்ள வொர்க் பண்ற என் ஸ்டைல்தான் அவங்களுக்கு என்மேல நம்பிக்கையை ஏற்படுத்தின விஷயம்’’ என்பவர், செலிபிரிட்டிகளின் விருப்பங்களையும் தேர்வுகளையும் விரல்நுனியில் வைத்திருக்கிறார்.

‘`தீபிகா படுகோன் புது ஐடியாக்களுக்கு எப்போதும் ரெடியா இருப்பாங்க. ஒரு கிரியேட்டரா எனக்கும் அவங்ககூட வொர்க் பண்றது செம ஜாலி எக்ஸ்பீரியன்ஸா இருக்கும். அனுஷ்கா ஷர்மா சில நேரம் எக்ஸ்பெரிமென்ட் பண்ணத் தயாரா இருப்பாங்க. சில நேரம் கிளாசிக்கா வேணும்னு ஃபீல் பண்ணுவாங்க. அது அவங்க மனநிலையைப் பொறுத்தது. கத்ரினா தனக்கு என்ன வேணும் என்பதில் ஸ்ட்ரிக்ட்டா இருப்பாங்க...’’

அலியா பட்
அலியா பட்

- நடிகைகளின் பல்ஸ் தெரிந்திருக்கும் சந்தியாவுக்குப் திரைப்படங்களுக்கு வேலை பார்ப்பதில் விருப்பமில்லையாம்.

சந்தியா சேகர்
சந்தியா சேகர்

‘`வெரைட்டி காட்டவோ, சவாலான விஷயங்களை முயற்சி செய்யவோ அங்கே இடமிருக்காது. தினம் தினம் என்னை அப்டேட் பண்ணிக்கிட்டே இருக்கணும். கிரியேட்டிவ்வா சிந்திக்கணும். இதையெல்லாம் தாண்டி, உடலளவுலயும் ரொம்பவே சோர்வை உண்டாக்கும் வேலை இது. மணிக்கணக்கில் நின்னுக்கிட்டே வேலை பார்க்கணும். முதுகு உடைஞ்சிடும். அதைத் தாங்கும் அளவுக்கு உடம்புல தெம்பு வேணும். 11 வருஷங்களா இந்தத் துறையில இருக்கேன். முதல் 10 வருஷங்களுக்குப் பெரிய அங்கீகாரம் இல்லை. நான் என்ன பண்ண நினைக்கிறேன், நான் எதுல ஸ்பெஷலிஸ்ட்டுனு தெரிஞ்சு என்னை அணுகறவங்க ரொம்ப கம்மி. செலிபிரிட்டிஸோடு வொர்க் பண்றதுக்கு முன்னாடிவரை ஒருநாளைக்கு 16 மணி நேரமெல்லாம் வேலை பார்த்திருக்கேன். அடுத்தடுத்த நாள்களும் அப்படித்தான் இருந்திருக்கு. இங்கே அடுத்தவங்க நேரத்தை மதிக்கிறவங்க ரொம்ப கம்மி. அதை எல்லாரும் கத்துக்கிட்டா நல்லது’’

- குறித்த நேரத்தில் உரையாடலை முடித்ததன் மூலம் நம் நேரத்துக்கு மதிப்பளிக்கிறார் சந்தியா.