Published:Updated:

“மைக் பிடிக்க ஆசை இருக்கு!”

 சசிகுமார்,  மீனாட்சி
பிரீமியம் ஸ்டோரி
சசிகுமார், மீனாட்சி

“சுசீந்திரனுக்குக் கபடி பற்றி ரொம்ப நல்லா தெரியும்; அவரே ஒரு கபடி வீரர்தான். முக்கியமா இது பெண்கள் கபடி பற்றிய கதை என்பதால், உடனே ஓகே சொல்லிட்டேன். ‘முருகானந்தம்’ கேரக்டர்ல நானும், ‘சவடமுத்து’ கேரக்டர்ல பாரதிராஜா சாரும் நடிச்சிருக்கோம்.

“மைக் பிடிக்க ஆசை இருக்கு!”

“சுசீந்திரனுக்குக் கபடி பற்றி ரொம்ப நல்லா தெரியும்; அவரே ஒரு கபடி வீரர்தான். முக்கியமா இது பெண்கள் கபடி பற்றிய கதை என்பதால், உடனே ஓகே சொல்லிட்டேன். ‘முருகானந்தம்’ கேரக்டர்ல நானும், ‘சவடமுத்து’ கேரக்டர்ல பாரதிராஜா சாரும் நடிச்சிருக்கோம்.

Published:Updated:
 சசிகுமார்,  மீனாட்சி
பிரீமியம் ஸ்டோரி
சசிகுமார், மீனாட்சி

சவடமுத்து கேரக்டர், சுசீந்திரனின் அப்பாவைப் பிரதிபலிக்கும் கேரக்டர். நான், பாரதிராஜா சார், ஹீரோயின் மீனாட்சி தவிர, நிஜக் கபடி வீராங்கனைகள் பலபேர் நடிச்சிருக்காங்க.’’ - உற்சாகமாகப் பேசுகிறார் சசிகுமார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

“நீங்க காலேஜ் படிக்கும்போது ‘வெண்ணிலா கபடி குழு’வை எப்போவாவது சந்திச்சிருக்கீங்களா?”

“எனக்கு எப்பவுமே விளையாட்டில் ஆர்வம் உண்டு. படத்தோட கதையை சுசீந்திரன் சொல்லி முடிச்சதும், அவங்க அப்பா நடத்திய ‘வெண்ணிலா கபடி குழு’வைப் பற்றிச் சொல்லிட்டு, சில புகைப்படங்களையும் காட்டினார். அதுல எனக்கொரு ஆச்சர்யம் காத்திருந்தது. என்னன்னா, இயக்குநர் ஆனதுக்குப் பிறகு நான் மதுரையில் நடந்த ஒரு கபடிப் போட்டிக்குத் தலைமை தாங்கினேன். அப்போ, ‘வெண்ணிலா கபடி குழு’தான் ஜெயிச்சிருந்தது. எல்லோரும் கோப்பையுடன் நின்னு போட்டோவுக்கு போஸ் கொடுக்க, அவங்ககூட நானும் நின்னுகிட்டிருந்தேன். இன்னொரு சுவாரஸ்யம் என்னன்னா, என்கூட புகைப்படத்தில் நிற்கிற அதே கபடி வீரர்கள் ‘கென்னடி கிளப்’ல என்கூட நடிச்சிருக்காங்க. கபடியை இன்னும் பல தலைமுறைக்குக் கொண்டுபோகணும்னு, அவங்கவங்க வேலையை விட்டுட்டு இந்தப் படத்துல நடிச்சுக் கொடுத்தி ருக்காங்க. முக்கியமா, கபடி வீராங்கனைகளின் வலியை எல்லோருக்கும் கொண்டுசேர்க்க நினைச்சாங்க. இவங்களுக்கு என்னால பண்ண முடிஞ்ச விஷயம், இந்தப் படத்துல நடிக்கிறதுதான்.”

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

“பாரதிராஜாவுடன் நடித்த அனுபவம்?”

“மறக்கவே முடியாத பசுமையான நினைவு அது. ஏன்னா, அவர் படங்களைப் பார்த்துதான் நான் சினிமாவுக்கு வந்தேன். ஆனா, அவர்கூட எனக்கு அவ்வளவா பழக்கமில்லை. ஷூட்டிங் ஸ்பாட்ல ரொம்ப எனர்ஜியா இருப்பார். வசனங்களை எப்படிப் பேசணும், நடிக்கணும்னு கவனமா இருப்பார். என் படங்களைப் பற்றியும் ஸ்பாட்ல பேசுவார். படத்துல நான் அவரை ஐயான்னு கூப்பிடுவேன். படத்துல எனக்கு அவர் கபடி சொல்லிக்கொடுக்கிற ஒரு காட்சி இருக்கும். அதைத் திரையில பார்க்கும்போது ஆடியன்ஸுக்கு ரொம்பப் பிடிக்கும்.”

“சுசீந்திரனுடன் வேலை பார்த்த அனுபவம்?”

“நம்மை அவர் டைரக்ட் பண்றமாதிரியே தெரியாது. கூடவே இருப்பார்; அவருக்கு என்ன வேணுமோ, அதை எங்ககிட்ட இருந்து எடுத்துப்பார். நான் கபடி பிளேயர் கிடையாது. ஆனா, சுசீந்திரனுக்குக் கபடி அத்துப்படி. படத்துல நான் பயிற்சியாளரா நடிச்சிருந்தாலும், எனக்குப் பயிற்சியாளரா இருந்து எல்லா விஷயங்களையும் சொல்லிக் கொடுத்தது அவர்தான். முக்கியமா, சீனியர் இயக்குநர் பாரதிராஜா சாரை சுசீந்திரன் கையாளும் விதம் எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. ஷூட்டிங் ஸ்பாட்ல நடிகர்களை வெச்சு கபடிக் காட்சிகளை எடுக்காம, ஒரிஜினல் கபடி வீரர்களோடு எங்களை மோதவிட்டார். படத்துல நாங்க மோதுன எல்லாக் கபடிப் போட்டியும் நிஜம்தான். படத்துல மாநில அளவிலான கபடிப் போட்டி நடக்கும். அது ரியலா இருக்கணும்னு, எங்களைச் சுத்தி 12 கேமரா வெச்சுட்டு, எல்லோரையும் உண்மையாவே விளையாட வெச்சுட்டார். எங்க குறிக்கோள், அந்தப் போட்டியை ஜெயிக்கணும் என்பதுதான். நிஜமாவே உருண்டு புரண்டோம். நிஜமாவே நான் கோச்சிங் கொடுத்தேன், நிஜமாவே கபடி வீரர்களுக்கு ஊக்கம் கொடுக்கிற மாதிரி பேசினேன்... ஷூட்டிங் ஸ்பாட்டை இப்படித்தான் வெச்சுக்கிட்டார் சுசீந்திரன்.”

“நிறைய ஸ்போர்ட்ஸ் கதைகள் தமிழ்சினிமாவுல வந்துகிட்டிருக்கே?”

“ஸ்போர்ட்ஸ் கதைகளில் உணர்வுகள்தான் வேறு. அதோட அடித்தளம் ஒண்ணுதான். ஒரு விளையாட்டை ஜெயிக்க ரொம்பக் கஷ்டப்படுவாங்க; கடைசியில ஜெயிப்பாங்க. ‘கென்னடி கிளப்’ படமும் அப்படித்தான் இருக்கும்னு நினைச்சேன்.

 “மைக் பிடிக்க ஆசை இருக்கு!”

ஆனா, பெண்கள் கபடிக் குழுவின் வலி, உணர்வு, உழைப்பு எல்லாமே வித்தியாசமான அனுபவமா இருந்தது. பெண்கள் இந்த விளையாட்டுல எவ்வளவு கஷ்டப்படுறாங்கன்னு இந்தப் படத்துல நடிச்சதுக்குப் பிறகுதான் தெரிஞ்சது. கஷ்டப்படுற குடும்பத்துல இருந்து வந்தவங்கதான் கபடி விளையாடுறாங்க. பிராக்டீஸுக்கு ஷூ, பேட், பால் எதுவும் தேவையில்லை... கபடி வீரர்களுக்கு ஒரு மணல் கோடு போதும்!”

“ ‘நாடோடிகள் 2’ படம் பற்றி?”

“ ‘நாடோடிகள்’ படத்துக்குக் கிடைச்ச அதே வரவேற்பு, இந்தப் படத்துக்கும் கிடைக்கும். இதுல காதலையும் சொல்லியிருக்கோம்; சமூகப் பிரச்னைகளையும் பேசியிருக்கோம். படத்துல என் கேரக்டர் பெயர், ஜீவானந்தம். அஞ்சலி பெயர், செங்கொடி. இதைக் கேட்கும்போதே, படம் எந்த அளவுக்கு சமூகப் பிரச்னைகளைப் பேசியிருக்கும்னு உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும்.”

“சாதியத்தைத் தூக்கிப் பிடிக்கிற சினிமாக்களை எப்படிப் பார்க்கிறீங்க?”

“கேள்வி கேட்குற நீங்கதான் சினிமாவில் சாதி இருக்குன்னு சொல்றீங்க. சினிமாவுல இருக்கிற நாங்க யாரும் சொல்றதில்லை. சாதி இருக்கக்கூடாதுன்னுதான் நாங்க எல்லோரும் போராடுறோம். என்மேலயே சாதிப் படங்கள்ல நடிக்கிறேன்னு ஒரு குற்றச்சாட்டு இருக்கு. ஒவ்வொரு இயக்குநரும் கதை சொல்ல வர்றப்போ, அவங்களோட கலாசாரம், அவங்க வாழ்ந்த வாழ்வியலைத்தான் எடுத்துக்கிட்டு வர்றாங்க. அப்படித்தான் வாழ்வியல் சினிமாக்களைப் பண்ணவும் முடியும். பா.இரஞ்சித் அவருடைய வாழ்வியல் பற்றித்தான் படங்கள்ல பேசுறார். அதேபோல் முத்தையாவும் அவருடைய வாழ்வியல் பற்றித்தான் படங்கள்ல பேசுறார். என்கிட்ட கதை சொல்ல வர்ற இயக்குநர்களிடம் ‘நீங்க என்ன சாதி’ன்னு நான் கேட்டதில்லை; நானும் இந்த சாதின்னு அவங்ககிட்ட சொன்னதில்லை. கதையைக் கேட்டுட்டு, அவர் யார்கிட்ட உதவி இயக்குநரா வேலை பார்த்திருக்கார்னு மட்டும்தான் கேட்பேன். ஷூட்டிங் ஸ்பாட்ல அவங்ககூட பழகும்போது தான், அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர்னு தெரியவரும். வேற எதையும் நான் கேட்கவும் மாட்டேன். ஹாஸ்டல்ல தங்கிப் படிச்சதால, சாதி பார்த்துப் பழகுற ஆளா நான் வளரல. சினிமாவுக்கு வெளியே இருக்கிறவங்கதான் இதைப் பெருசுபடுத்திப் பேசுறாங்க. உள்ளே இருக்கிறவங்க கண்டுக்கிறதில்ல. மத்தபடி, சாதி சார்ந்த விஷயங்களைத் தவிர்த்துட்டுப் போறதுதான் நல்லது.”

“ ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்துல நடிச்ச அனுபவம்?”

“இதுவரை பார்க்காத சசிகுமாரை இந்தப் படத்துல பார்க்கலாம். கெளதம் மேனன் கேட்கும்போது, என்னால தவிர்க்க முடியல. தனுஷுக்கு அண்ணனா நடிச்சிருக்கேன். ஃபைட் சீக்குவென்ஸ் எடுத்தாக்கூட சத்தம் இல்லாம எடுக்கிற ஆள், கெளதம் மேனன். இந்தப் படத்தில் எனக்கு சின்ன ரோல்தான். கௌதமின் நட்பு, தனுஷ் என்ற நடிகரின்மீது நான் கொண்ட மரியாதை இதெல்லாம்தான் என்னை நடிக்க வெச்சுது.”

“இயக்குநரா நல்ல படங்களைக் கொடுத்திருக்கீங்க. இப்போ, நடிகரா பிஸி. இயக்குநர் சசியை நாங்க மிஸ் பண்றோமே?”

“நானும் இயக்குநர் சசிகுமாரைப் பார்க்கக் காத்துக்கிட்டிருக்கேன். நான் நடிக்கிற படங்களில் இயக்குநர்கள் மைக் பிடிச்சிருக்கிறதைப் பார்க்கிறப்போ, எனக்கும் அந்த இடத்துல உட்கார்ந்து மைக் பிடிக்க ஆசையா இருக்கும். அதுக்குத்தான் தயாராகிட்டிருக்கேன். கமிட் ஆகியிருக்கிற படங்களையெல்லாம் முடிச்சுட்டு, சீக்கிரமே படம் இயக்கணும்.

 “மைக் பிடிக்க ஆசை இருக்கு!”

எழுத்தாளர் சு.வெங்கடேசனின் கதையை இயக்க வேண்டும் என்ற விருப்பம் உண்டு. இது தவிர, சில கதைகளையும் வெச்சிருக்கேன். இயக்குநரா வந்துட்டா அடுத்தடுத்து வித்தியாசமான படங்களை எடுக்கணும்னு இருக்கேன்.”

“இயக்குநர் சசிகுமாரைப் போலவே தயாரிப்பாளர் சசிகுமாரும் தொடர்ந்து இயங்குவாரா?”

“இப்போதைக்கு எந்தப் படத்தையும் தயாரிக்கிற ஐடியா இல்லை. ‘பேட்ட’ ஷூட்டிங்ல ‘சசிகுமார்... நடிங்க, டைரக்‌ஷன் பண்ணுங்க. படங்களைத் தயாரிச்சு சிரமப்படாதீங்க’ன்னு ரஜினி சார் சொன்னார். என் நண்பர்களும் இதைத்தான் சொன்னாங்க. அசோக்குமாரின் மரணத்துக்குப் பிறகு, படங்களைத் தயாரிக்கிற எண்ணம் எனக்கு வரலை. இனி காலம்தான் முடிவு பண்ணும். ‘கம்பெனி புரொடக்‌ஷன்’ மூலமா பத்துப் படங்களைத் தயாரிச்சுட்டேன், போதும்.”

“நெல் ஜெயராமன் வாழ்க்கையைப் படமா எடுக்கிறதா சொல்லியிருந்தீங்களே?!”

“எனக்கு நெல் ஜெயராமனைப் பிடிக்கும். அவரைப் பற்றி இயக்குநர் இரா.சரவணனிடம் அடிக்கடி பேசிக்கிட்டிருப்பேன். அவர் உயிரோடு இருக்கும்போதே நெல் ஜெயராமனைப் பற்றி டாக்குமென்டரி எடுத்திருந்தார், சரவணன். ஆனா, பயோபிக் எடுக்கக் கொஞ்ச காலம் ஆகும். ஏன்னா, அவர் கேரக்டர்ல நான்தான் அப்பா - மகன்னு டபுள் ரோல்ல நடிக்கலாம்னு இருக்கேன். நெல் திருவிழா நடக்கும்போது படத்தோட பூஜையை ஆரம்பிக்கலாம்னு இருக்கேன். நம் தமிழ்நாட்டைச் சேர்ந்த முருகானந்தத்தின் வாழ்க்கையை அக்‌ஷய்குமார் ‘பேட் மேன்’ படமா எடுக்கும்போது, தமிழ்நாட்டைச் சேர்ந்த நாம ஏன் படமெடுக்கக் கூடாதுன்னு தோணுச்சு. தமிழக அரசும் அவரைப் பற்றிப் பாடப்புத்தகத்தில் சேர்த்தி ருக்கிறது எங்களுக்குக் கூடுதல் எனர்ஜியைக் கொடுத்திருக்கு.”

“ ‘கொம்பு வெச்ச சிங்கம்டா’ என்ன மாதிரியான கதை?”

“நண்பர்களுக்கான கதை. இயக்குநர் மகேந்திரன் சார் நடிச்ச கடைசிப் படம் இது. படத்துல எனக்கு அப்பாவா நடிச்சிருந்தார். இதுல நடிக்கும்போது பல விஷயங்களை அவருடன் பகிர்ந்துக்க வாய்ப்பு கிடைச்சது. அது என் பாக்கியம்னுதான் சொல்லணும். இந்தப் படத்துல என் கேரக்டருக்குப் பெயரே கிடையாது. ஒரே ஒரு இடத்துல என் பெயர் வரும். அதையும் நுணுக்கமா கவனிச்சாதான் தெரியும்.”

“விஜய் சேதுபதியின் வளர்ச்சியை எப்படிப் பார்க்கிறீங்க?”

“ ‘சுந்தரபாண்டியன்’ல அவர் நடிக்கும்போது ஹீரோவா அவர் நடிச்ச ரெண்டு படம் ரிலீஸாகியிருந்தது. அவருடைய ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படம் ரிலீஸுக்காகக் காத்திருந்தது. அதனால, படத்துல வில்லனா நடிக்க ஆட்சேபனை ஏதும் இருக்கான்னு கேட்டேன். ‘அதெல்லாம் இல்லை; எல்லா கேரக்டரும் பண்ண ஆசை’ன்னு சொன்னார். தன்னை ஒரு இமேஜுக்குள்ள அடக்கிக்க விஜய் சேதுபதி என்னைக்கும் ஆசைப்பட்டதில்லை.”

“ ‘சுப்ரமணியபுரம்’ படம் பாலிவுட் வரைக்கும் ரீச் ஆனது. பாலிவுட்ல நடிக்க, படம் இயக்க வாய்ப்புகள் ஏதும் வந்ததுண்டா?”

“ ‘சுப்ரமணியபுரம்’ படம் ரிலீஸான சமயத்துல எனக்கு பாலிவுட்டில் படம் இயக்குற வாய்ப்பு வந்தது. அந்த நேரத்துல அனுராக் காஷ்யப் என்னோட ‘சுப்ரமணியபுரம்’ பார்த்து இன்ஸ்பையர் ஆகித்தான், ‘கேங்க்ஸ் ஆஃப் வாசிப்பூர்’ எடுத்தார். இதை அவரே பல இடங்கள்ல சொல்லியிருக்கார். ‘பேட்ட’ ஷூட்டிங்ல நவாஜுதீன் சித்திக் ‘ஓ... நீங்கதானா அவர்! அனுராக் உங்க படத்தைப் பற்றி நிறைய சொல்லியிருக்கார். அந்தக் கழுத்தறுக்கிற காட்சியை நான் மறக்கவே மாட்டேன். ‘கேங்க்ஸ் ஆஃப் வாசிப்பூர்’ல நடிக்கும்போது, உங்க படத்தின் டிவிடி-யைக் கொடுத்துப் பார்க்கச் சொன்னார்’னு சொல்லி, ‘சுப்ரமணியபுரம்’ பற்றி ரொம்ப நேரம் பேசினார்.”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism