Published:Updated:

"அனுஷ்கா போன் பண்ணாங்க; பிராங்க்ன்னு நினைச்சேன், ஆனா..."- `தென்றல் வந்து என்னைத் தொடும்' பவித்ரா

அனுஷ்கா - பவித்ரா

"களைப்பான நாளை பிரகாசமாக்கும் வகையில் 'பாகுபலி தேவசேனா' அனுஷ்கா மேடமிடம் இருந்து எனக்கு ஒரு போன் கால் வந்தது. அது பிராங்க் கால் என்றுதான் நினைத்தேன். ஆனா..." - பவித்ரா

"அனுஷ்கா போன் பண்ணாங்க; பிராங்க்ன்னு நினைச்சேன், ஆனா..."- `தென்றல் வந்து என்னைத் தொடும்' பவித்ரா

"களைப்பான நாளை பிரகாசமாக்கும் வகையில் 'பாகுபலி தேவசேனா' அனுஷ்கா மேடமிடம் இருந்து எனக்கு ஒரு போன் கால் வந்தது. அது பிராங்க் கால் என்றுதான் நினைத்தேன். ஆனா..." - பவித்ரா

Published:Updated:
அனுஷ்கா - பவித்ரா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர் 'தென்றல் வந்து என்னைத் தொடும்'. இந்தத் தொடரில் நாயகியாக நடித்துக் கொண்டிருக்கும் பவித்ரா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை இட்டிருக்கிறார். அது தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அவர், "தாமதமான பதிவுதான்... வார்த்தைகளாக இதனை மாற்றுவதற்கு எனக்கு சில காலம் தேவைப்பட்டது. களைப்பான நாளை பிரகாசமாக்கும் வகையில் 'பாகுபலி தேவசேனா' அனுஷ்கா மேடமிடம் இருந்து எனக்கு ஒரு போன் கால் வந்தது. அது பிராங்க் கால் என்றுதான் நினைத்தேன்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

'தென்றல் வந்து என்னைத் தொடும்' சீரியல் குறித்து பாராட்டுவதற்காக அழைத்திருக்கிறார். அவர் தொடர்ந்து இந்தத் தொடரைப் பார்ப்பதாகவும் தெரிவித்திருந்தார். அவரிடம் பேசியதிலிருந்து இப்போது வரைக்குமே பறந்து கொண்டிருக்கிறேன். களைப்பான நாளை இத்தனை உற்சாகமாக்கி மாயம் செய்ததற்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்!" எனப் பதிவிட்டிருக்கிறார்.

பவித்ரா
பவித்ரா

இந்தத் தொடரில் பவித்ராவிற்கு ஜோடியாக 'சுந்தரி நீயும் சுந்தரன் நானும்' தொடரில் நாயகனாக நடித்த வினோத் பாபு நடிக்கிறார். தற்போது தமிழ்ப் படங்களில் நடிப்பதை குறைத்துவிட்ட அனுஷ்கா, தமிழ் சீரியல் ஒன்றைப் பார்த்து விமர்சனம் செய்ததை பலரும் ஆச்சர்யத்துடன் பகிர்ந்து வருகின்றனர்.