Published:Updated:

``நான் ஒல்லியா, குண்டா... எனக்கு பிம்பிள்ஸா... நீங்க கவலைப்படாதீங்க!'' - `StopBodyShaming' ஸ்ருதி

ஸ்ருதிஹாசன்
ஸ்ருதிஹாசன் ( instagram )

"நான் கடந்துவந்த விஷயங்கள் அவ்வளவு எளிதானதில்லை. ஆனால், நான் கடந்துவந்த விஷயங்களைப் பகிர்வது எனக்கு எளிதானதுதான்!" - ஸ்ருதிஹாசன்.

நடிப்பு, இசை என எப்போது பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் ஸ்ருதிஹாசன் தன்னுடைய சோஷியல் மீடியா பக்கங்களிலும் ஆக்டிவாகவே இருக்கிறார்.

ஸ்ருதிஹாசன்
ஸ்ருதிஹாசன்
instagram

அந்தவகையில் நேற்றைய முன்தினம் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படத்தை வெளியிட்டிருந்தார் ஸ்ருதிஹாசன்.

அந்தப் புகைப்படத்தில், ஸ்ருதி மிகவும் ஒல்லியாக இருப்பதைக் கிண்டலடித்து நெட்டிசன்கள் கமென்ட்களைத் தட்டிவந்தனர்.

ஸ்ருதிஹாசன்
ஸ்ருதிஹாசன்
instagram

'நோய்வாய்ப்பட்டுள்ளதுபோல் இருக்கிறீர்கள்' 'இவ்வளவு ஒல்லியாக இருக்கிறீர்களே' என சகட்டுமேனிக்கு கமென்ட்டுகள் வந்து விழுந்தவண்ணம் இருந்தன.

இதற்கெல்லாம் பதிலளிக்கும் விதமாக, கடந்த மூன்று தினங்களில் எடுக்கப்பட்ட தன்னுடைய இருவேறு புகைப்படங்களை அவரது உருவ வித்தியாசத்தை எடுத்துரைக்கும் விதமாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றினார்.

View this post on Instagram

So .... I decided to post this right after my previous post and I’ll tell you why. I’m not one driven by other people’s opinions of me but the constant commenting and she’s too fat now she’s too thin is so avoidable. These two pictures have been taken three days apart. I’m sure there are women out there who relate to what I’m going to say. Most often I’m at the mercy of my hormones mentally and physically and over the years I work hard to try and have a healthy relationship with it. It isn’t easy. The pain isn’t easy the physical changes aren’t easy but what’s become easier to me is to share my journey. No one famous or not is in a position to judge another person. Ever. That’s just not cool. I’m happy to say this is my life my face and yes I’ve had plastic surgery which I’m not ashamed to admit. Do I promote it ? No am I against it ? No - it’s just how I choose to live. The biggest favour we can do for ourselves and others is just be and learn to accept the changes and the movement of our bodies and minds. Spread love and be chill . I’m learning everyday to love me for me just a little more because the greatest love story of my life is with myself and I hope yours is too :)

A post shared by @ shrutzhaasan on

அந்தப் பதிவில், "நான் மற்றவர்களின் கருத்துகளை வைத்து வாழ்வைக் கடத்துபவள் இல்லை. ஆனால், `அவ குண்டா இருக்கா, ஒல்லியா இருக்கா' இதுபோன்ற கமென்ட்டுகள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன.

``ஸ்ருதி, சமந்தா, ஐஸ்வர்யா... யார் லுக் ரொம்ப சவாலா இருந்துச்சு தெரியுமா?!" - `நாம்' காலண்டர் ஸ்டைலிஸ்ட்

இது போன்ற கமென்ட்டுகளுக்கு நான் அளிக்க விரும்பும் பதிலை தன்னோடு தொடர்புபடுத்திக்கொள்ள நிறைய பெண்கள் இங்கு இருக்கிறார்கள் என்பதை நிச்சயமாகச் சொல்வேன்.

ஸ்ருதிஹாசன்
ஸ்ருதிஹாசன்
instagram

நான் கடந்துவந்த வருடங்களில், என் உடலின் ஹார்மோன்களின் மாறுதல்களால் என்னில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டன. மனதளவிலும் உடலளவிலும் நிறைய வலிகளைக் கடந்து வந்திருக்கிறேன். அது அவ்வளவு எளிதான விஷயமாக இருந்ததில்லை. ஆனால், நான் கடந்துவந்த விஷயங்களைப் பகிர்வது எனக்கு எளிதானதுதான்.

``ஸ்ருதிக்கு இன்னொரு முகம் இருக்கு; அது இன்னும் கோலிவுட்டுக்குத் தெரியல!'' - பத்ரி வெங்கடேஷ்

அடுத்தவர் எப்படிப்பட்டவர் என்பதைத் தீர்மானிக்கும் நிலையில், இங்கு யாரும் இல்லை. இது என்னுடைய வாழ்க்கை, என்னுடைய முகம். ஆமாம் நான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளேன் என்பதை மகிழ்ச்சியாக சொல்கிறேன்.

ஸ்ருதிஹாசன்
ஸ்ருதிஹாசன்
instagram

இதைச் சொல்ல நான் அவமானப்படவில்லை. இதை விளம்பரப் படுத்திக்கொள்ளவும் எனக்கு விருப்பமில்லை. அதற்கு எதிராகவும் நான் இல்லை. 'என் வாழ்க்கையை நான் எப்படி வாழ வேண்டும் என்பது எனக்கானது' என்பது மட்டுமே இதன் அர்த்தம்.

Vikatan

நமக்கு விருப்பமானதை நமக்கு நாமே செய்துகொள்ளும்போது, நம்முடைய மனதும் உடலும் மாறும் விதத்தை மற்றவர்கள் அப்படியே ஏற்றுக்கொண்டு அன்பு பாராட்டி மகிழ்ச்சியாக இருக்கலாமே! நான் எப்படி இருக்கிறேனோ அதை அப்படியே காதலிக்க கற்றுக்கொண்டிருக்கிறேன். தினம்தினம் அந்தக் காதல் சிறிது அதிகரித்துக்கொண்டிருக்கிறது.

ஸ்ருதிஹாசன்
ஸ்ருதிஹாசன்
instagram

என்மேல் நான் வைத்திருக்கும் காதல்தான், என் வாழ்க்கையின் புனிதம். உங்களுடையதும் அப்படிப்பட்டது என நம்புகிறேன்" என மனதில் உள்ளதை ஒளிவு மறைவில்லாமல் பகிர்ந்திருக்கும் ஸ்ருதிஹாசனின் இந்தப் பதிவுக்குப் பிறகு அவருக்குப் பலவிதமான பாசிடிவ் கமென்ட்டுகள் வந்தவண்ணம் இருக்கின்றன.

`எனக்கு எந்த வருத்தமும் இல்லை!' - காதல் முறிவு பற்றி மனம் திறந்த ஸ்ருதிஹாசன்

இது குறித்து ஸ்ருதிஹாசனிடம் பேசியதில்...

"ஒரு பொண்ணு தினமும் ஒரே மாதிரி இருக்க முடியாது. ஒவ்வொருத்தரும் பிசிக்கலாவும், மென்ட்டலாவும் நிறைய பிரச்னைகளை சந்திச்சிட்டிருக்காங்க. ஆனா கிட்டத்தட்ட பத்து வருஷமா பெண்களை உருவ கேலி பண்றது சகஜமாயிடுச்சு.

ஸ்ருதிஹாசன்
ஸ்ருதிஹாசன்
instagram

எனக்கு மட்டுமல்ல, உலகம் முழுக்க நிறைய பேருக்கு இது நடந்துட்டுதான் இருக்கு. ஏன்... நம்ம வீட்டுலயே நடக்குதே, ரொம்ப நாள் கழிச்சு பாக்குற அத்தையோ, மாமியோ சித்தியோகூட சமயத்துல 'என்ன ஒல்லியா இருக்க' , 'என்னடி வெயிட் போட்டுட்டே போற'. ' என்ன முகத்துல ஒரே பிம்பிளா இருக்கு' இந்த மாதிரி கமென்ட் பண்றாங்களே..!

ஒருத்தரைப் பத்தி தெரியாம, அவங்களோட வாழ்க்கைமுறை தெரியாம அவங்களைத் தாக்குறமாதிரி அஃபென்ஸிவ்வா எதுக்கு கமென்ட் பண்ணனும்? தைராய்டு, டயபடீஸ்ன்னு நிறைய பேர் பிரச்னைகளோட வாழ்க்கை நடத்திட்டிருக்காங்க. இதுமாதிரி பாதிப்புகள் செலிபிரிட்டிகளுக்கும் இருக்கும்.

ஸ்ருதிஹாசன்
ஸ்ருதிஹாசன்
instagram

இதையெல்லாம் கடந்து வர்றது அவ்ளோ ஈஸியில்லை. இதுமாதிரி கமென்ட் பண்றவங்களுக்கு ரியாக்ட் பண்ணாம அமைதியா இருந்தா, அதை அவங்க சாதகமா எடுத்துட்டு அதையே தொடர்ந்து பண்ணிட்டுதான் இருப்பாங்க.

அவங்களைமதிரியே நாமளும் ரியாக்ட் பண்றதுல எந்த அர்த்தமும் இல்லை. அதனாலதான் என் மனசுக்கு நியாயமா பட்டதை அன்பா எடுத்துச்சொல்லி ஒரு போஸ்ட் போட்டேன்.

ஸ்ருதிஹாசன்
ஸ்ருதிஹாசன்
instagram

அதுக்கு பதிலா நிறைய பாசிட்டிவ் கமென்ட்ஸும் வந்திட்டிருக்கு. என்னுடைய போஸ்ட் இப்படியோர் அவேர்னஸை ஏற்படுத்தும்னு நான் எதிர்பார்க்கலை அந்த விதத்துல இது எனக்கு சந்தோஷமா இருக்கு" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு