Published:Updated:

அவரு கமலஹாசன்... இவரு கமல‘தாசன்’!

பத்மப்ரியா, அவரின் வருங்கால கணவர் ஜோஷ்வா ஆனந்த்
பிரீமியம் ஸ்டோரி
News
பத்மப்ரியா, அவரின் வருங்கால கணவர் ஜோஷ்வா ஆனந்த்

திருமண நிகழ்ச்சியில் புகைப்படம் எடுப்பதைக் காட்டிலும், திருமணத்துக்கு முன்பும் பின்புமான பிரீ அண்டு போஸ்ட் வெடிங் போட்டோகிராபியில்தான் இன்றைய தலைமுறையினர் அதிக ஈடுபாட்டுடன் இருக்கிறார்கள்.

அவரு கமலஹாசன்... இவரு  கமல‘தாசன்’!

ங்களை ஒரு ஹீரோ ஹீரோயினாக பாவித்து கண்ணுக்குக் குளிர்ச்சியான மலைப் பிரதேசங்கள், கடற்கரைகள் என அழகழகான இடங்களைத் தேர்வு செய்து புகைப்படம் எடுத்துக்கொள்கின்றனர். ஆனால், இதற்கும் ஒருபடி மேலே போய் தங்களுக்குப் பிடித்த ஹீரோவின் படங்களில், அவர் ஏற்று நடித்திருக்கும் கதாபாத்திரங்களின் தோற்றத்தில் பிரீ வெடிங் போட்டோ ஷூட்டை நடத்தியிருக்கிறார்கள் சிங்கப்பூரைச் சேர்ந்த பத்மப்ரியா மற்றும் அவரின் வருங்கால கணவர் ஜோஷ்வா ஆனந்த். எதனால் இந்த கான்செப்டில் ஷூட் என பத்மப்ரியாவைக் கேட்டதற்கு...

அவரு கமலஹாசன்... இவரு  கமல‘தாசன்’!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

“தாத்தா காலத்துலயே சிங்கப்பூருக்கு வந்து செட்டிலான தமிழ்க் குடும்பத்தில் பிறந்தேன். இங்கு மார்க்கெட்டிங் துறையில் வேலை. நேரம் கிடைக்கும்போது மாடலிங்னு பிஸியா சுத்திட்டிருப்பேன். ஃபேஸ்புக்கில் அறிமுகமாகி நட்பு, காதல், லிவ் இன் ரிலேஷன்ஷிப்னு ஜோஷ்வாவும் நானும் ரொம்ப க்ளோஸ் ஆகிட்டோம். கலாசாரம் ரொம்ப முக்கியம்னு வீட்ல கல்யாணம் பண்ணிக்க சொல்லிட்டாங்க. லைஃப்ல ஒருமுறை நடக்கும் நிகழ்ச்சியை எதுக்கும் மிஸ் பண்ணணும்னு ஓகே பண்ணிட்டோம். வரும் டிசம்பர்ல எங்களுக்கு கல்யாணம்னு” படபடத்தார் பத்மப்ரியா.

அவரு கமலஹாசன்... இவரு  கமல‘தாசன்’!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

எதனால் இந்த கான்செப்டில் போட்டோ ஷூட்?

உண்மையை சொல்லணும்னா எங்களோட ஃபேஸ்புக் நட்பு இந்த அளவுக்கு வளர்ந்ததுக்கான காரணங்களில் கமல்ஹாசன் சாரும் ஒருவர். நான் அவரின் தீவிர ரசிகைன்னா ஜோஷ்வா அவரின் படுதீவிர ரசிகர்னு சொல்லலாம். அவர் கமலஹாசன்னா... இவரு கமல‘தாசன்’. கமல் சாரோட படம் ரிலீஸ் ஆயிட்டா, ஜோஷ்வா ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ பார்த்துடுவார். விஸ்வரூபம் ஷூட் சிங்கப்பூர்ல நடந்தப்போ, கமல் சாரை சந்திக்க முயற்சி பண்ணி அவரை மீட் பண்ணிய நாளை என்கிட்ட விவரிக்கும்போது, இவர் கண்ணுல அவ்ளோ சந்தோஷத்தைப் பார்த்தேன். கமல் சார் மேல இவருக்கு இருக்குற காதல்னாலயும் இவரு மேல எனக்கு இருக்குற காதல்னாலயும்தான் இந்த போட்டோ ஷூட் சாத்தியமாச்சு” என சிலாகித்த பத்மப்ரியா தொடர்ந்து...

அவரு கமலஹாசன்... இவரு  கமல‘தாசன்’!

“கல்யாணத்துக்கு முன்னாடி ஒரு போட்டோ ஷூட் நடத்தணும்... என்ன கான்செப்டில் எடுக்கலாம்னு யோசித்து எடுத்த முடிவுதான் இது. எனக்கு தெரிஞ்ச மாடல் ஒருத்தர் சென்னையில் இருக்கும் மக்கா ஸ்டூடியோ பகத்குமார்தான் இதுக்கு சரியான ஆளுன்னு சொன்னார். அவரிடம் பேசி ஷூட் டேட் ஃபிக்ஸ் செய்து, போட்டோ ஷூட்டுக்காக சிங்கப்பூர்ல இருந்து சென்னைக்கு வந்து இறங்கினோம். எனக்கு மாடலிங் அனுபவம் இருக்கறதுனால கேமரா பயம் போஸ் கொடுக்கறதுன்னு எந்த பிரச்னையும் வராது. ஆனா, இவரு சொதப்பிட கூடாதேன்னு ஒரு சின்ன பயம்.

அவரு கமலஹாசன்... இவரு  கமல‘தாசன்’!

மேக்கப் எல்லாம் முடிச்சு கேமரா முன்னாடி வந்து நின்னு ரொம்ப இயல்பா போஸ் குடுக்க ஆரம்பிச்சுட்டார். எனக்கு ஒரே ஆச்சர்யம். ஷூட் முடிஞ்சதும் ‘எப்படிப்பா இப்படி கலக்குற’ ன்னு கேட்டதுக்கு ‘அவ்ளோ பெரிய நடிகரை இவ்ளோ நாளா பாத்துட்டு இருக்கேன். அவரோட பாதிப்பு கொஞ்சம் கூடவா இருக்காதுன்னு சிரிக்குறார். ஷூட் முடிச்சு படங்கள் அவ்ளோ அழகா வந்ததுல எல்லாருக்கும் அவ்ளோ சந்தோஷம்” எனக் கண்களில் காதல் மின்ன சிரித்தார் பத்மப்ரியா.