Published:Updated:

"`விஜய் 66' படத்திற்காக தமன் இசையில் பாடுகிறேனா?"- `வாய்யா சாமி' ராஜலட்சுமி செந்தில்கணேஷ் விளக்கம்

ராஜலட்சுமி - செந்தில்கணேஷ்
News
ராஜலட்சுமி - செந்தில்கணேஷ்

"என்னோட அம்மா படத்துக்கே போக மாட்டாங்க. ரொம்ப வருஷமாச்சு. அவங்க இந்தப் பாட்டை கேட்டுட்டு முதன்முறையா அவங்களை 'புஷ்பா' படத்துக்குக் கூட்டிட்டு போகச் சொல்லியிருக்காங்க."- ராஜலட்சுமி

நாட்டுப்புற பாடல்கள் மூலம் புகழ்பெற்றவர், ராஜலட்சுமி செந்தில்கணேஷ். தற்போது, புஷ்பா படத்தில் இவர் பாடிய 'சாமி சாமி' (வாய்யா சாமி) என்கிற பாடல் வைரலாகப் பேசப்பட்டது. இந்நிலையில், அவரை சந்தித்து பேசினோம்.

ராஜலட்சுமி - செந்தில் கணேஷ்
ராஜலட்சுமி - செந்தில் கணேஷ்

'வாய்யா சாமி' பாடல் பாடும்போது ரொம்பவே படபடப்பா இருந்துச்சு. தெலுங்கில் அந்தப் பாட்டை கேட்டப்போவே அவ்வளவு எனர்ஜெடிக் டோனில் இருந்துச்சு. அதனால, அந்த ஃபீல் கொஞ்சமும் குறையாமல் தமிழில் இந்தப் பாட்டை கொடுக்கணும்னு நினைச்சேன். இந்த அளவுக்கு பாட்டு ரீச் ஆகும்னு கொஞ்சமும் எதிர்பார்க்கலை. என்னோட அம்மா படத்துக்கே போக மாட்டாங்க. ரொம்ப வருஷமாச்சு. அவங்க இந்தப் பாட்டை கேட்டுட்டு முதன்முறையா அவங்களை 'புஷ்பா' படத்துக்குக் கூட்டிட்டு போகச் சொல்லியிருக்காங்க. அதுவே மிகப்பெரிய சந்தோஷமான தருணம்" என்றவரிடம், "இயக்குநர் வம்சி இயக்க்கத்தில் விஜய் நடிக்கும் படத்தில் இசையமைப்பாளர் தமன் இசையில் பாடுறீங்களாமே?" எனக் கேட்டோம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

"உங்களை மாதிரி அதே ஆச்சரியத்தோட தான் நாங்களும் அந்த செய்தியை பார்த்தோம். அது வதந்திதான். அப்படி இப்போவரை அதிகாரப்பூர்வமா எந்தத் தகவலும் வரலைங்க. தல படத்துக்கு பாடிட்டோம்... தளபதிக்கும் பாடிட்டா ரொம்பவே சந்தோஷமா இருக்கும். விஜய் சார் படத்தில் பாடுற வாய்ப்பு கூடிய சீக்கிரமே அமையும்னு நம்புறோம்!" என்றார்.

ராஜலட்சுமி - செந்தில் கணேஷ்
ராஜலட்சுமி - செந்தில் கணேஷ்

மேலும், செந்தில் கணேஷ் - ராஜலட்சுமி நம்மிடையே பல்வேறு விஷயங்கள் தொடர்பாக பகிர்ந்து கொண்டனர். முழுமையான பேட்டியை காண...