பிரபல நடிகையான சோனம் கபூர் தனது 37 ஆவது பிறந்தநாளை கொண்டாடிக் கொண்டிருக்கும் நிலையில், இன்னொரு புறம் தனது கர்ப்பத்தின் கடைசி மூன்று மாதங்களில் ( Third Trimester) இருக்கிறார். சோனமின் மகப்பேறு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கர்ப்பமாக இருக்கும் வயிறு தெரியும்படி, பளபளப்பான வெள்ளை ஆடையில் சோனம் போஸ் கொடுக்கும் அந்தப் படம் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. இந்தப் படத்தில் சோனம் பெண் தெய்வத்தைப்போல தோற்றமளிப்பதாகவும், கர்ப்ப கால புகைப்படம் வித்தியாசமான முறையில் அழகாக எடுக்கப்பட்டதாகவும் பலரும் அதை ஷேர் செய்து வருகின்றனர்.
இந்தப் புகைப்படத்தை பாலிவுட்டின் ஃபேஷன் டிசைனர்களான அபு ஜானி மற்றும் சந்தீப் கோஸ்லா வெளியிட்டதோடு சோனம் கபூருக்கு பிறந்தநாள் வாழ்த்தையும் தெரிவித்தனர். அதில் ''நீங்கள் தாய்மை எனும் புதிய பயணத்துக்குத் தயாராகிவிட்டீர்கள். இனி நீங்கள் எடுத்துவைக்கப்போகும் ஒவ்வோர் அடியும் உங்களை வலிமையானவராகவும் பிரகாசமானவராகவும் மாற்றட்டும்' என அதற்கு கேப்ஷன் பதிவிட்டுள்ளார்கள்.
தாங்கள் தங்கள் முதல் குழந்தையை வரவேற்கத் தயாராகியிருப்பதாக இந்த வருடத்தின் தொடக்கத்திலேயே சோனம்- ஆனந்த் தம்பதியர் சமூக வலைத்தளங்களில் அறிவித்தனர். விரைவில் பிரசவத்தை எதிர்நோக்கியிருக்கும் நிலையில், சமீபத்தில் இத்தாலிக்கு பேபிமூன் சென்று வந்திருக்கிறது இந்த ஜோடி.