சினிமா
Published:Updated:

Shareபட்டா பரம்பரை: 10 மில்லியன் லட்சியம்!

உமா மகேஸ்வரி
பிரீமியம் ஸ்டோரி
News
உமா மகேஸ்வரி

கடன் ரெடி பண்ணி சொந்தமா பிசினஸ் பண்ணலாம்னு ஒரு கடை ஆரம்பிச்சோம். ஆனால் கடை வியாபாரம் பெரிய அளவில் நஷ்டமாச்சு.

“என்னோட கடன் பிரச்னை தீர்வதற்கு யூடியூப் தளம் உதவியா இருக்கும்னு நம்பினேன். அதற்காக உழைச்சேன். அதுக்குப் பலன் கிடைச்சிருக்கு. பொம்பளைப் புள்ளைக்கு இதெல்லாம் தேவையான்னு என் முன்னாடியே பலர் கேட்டாங்க. என் அம்மாவும், என் கணவரும் கொடுத்த சப்போர்ட்டால இன்னைக்கு என் சேனலுக்கு ஒரு மில்லியன் சப்ஸ்கிரைபர்ஸ் இருக்காங்கன்னு பெருமையா சொல்ற அளவுக்கு யூடியூப்பில் சாதிச்சிருக்கேன்!’’ எனத் தன்னம்பிக்கையோடு பேசத் தொடங்கினார் உமா மகேஸ்வரி.

Shareபட்டா பரம்பரை: 10 மில்லியன் லட்சியம்!
Shareபட்டா பரம்பரை: 10 மில்லியன் லட்சியம்!

அன்றாட வேலைகளை எப்படிச் சுலபமாகச் செய்து முடிக்கலாம் என்று கேட்பவர்களுக்கு ‘Mrs. Abi Time’ யூடியூப் தளம் நிச்சயம் உதவியாக இருக்கும்.

“என்னோட சொந்த ஊர் கோயம்புத்தூரிலுள்ள பெரியநாயக்கன்பாளையம். வீட்ல என்னையும் சேர்த்து மூணு பொண்ணுங்க. அப்பா கூலி வேலைதான் பார்த்துட்டிருந்தாங்க. அதனால, பிளஸ்டூ முடிச்சதும் காலேஜ் படிக்க வைக்க வசதியில்லைன்னு கவர்ன்மென்ட் ஐ.டி.ஐ-யில் ஒரு வருட கம்ப்யூட்டர் கோர்ஸ் படிச்சேன். ஐ.டி.ஐ முடிச்சிட்டு கம்ப்யூட்டர் சம்பந்தமான வேலை செய்யலாமேன்னு தேடினப்போ டேட்டா என்ட்ரி வேலை கிடைச்சது. அந்தக் கம்பெனியில்தான் பிரசாத் எனக்கு அறிமுகமானார். ரெண்டு பேரும் காதலிச்சுத் திருமணம் பண்ணிக்கிட்டோம். திருமணத்துக்குப் பிறகு அவர் வெப் டிசைனிங் தொடர்பான வேலைக்குப் போயிட்டார். நான் வேலை பார்த்துட்டு இருந்த கம்பெனியும் பெங்களூருக்கு ஷிப்ட் ஆச்சு. அதனால, வேலையை விட்டுட்டு பிசினஸ்ல இறங்க முடிவு பண்ணினேன்.

உமா மகேஸ்வரி
உமா மகேஸ்வரி
Shareபட்டா பரம்பரை: 10 மில்லியன் லட்சியம்!

கடன் ரெடி பண்ணி சொந்தமா பிசினஸ் பண்ணலாம்னு ஒரு கடை ஆரம்பிச்சோம். ஆனால் கடை வியாபாரம் பெரிய அளவில் நஷ்டமாச்சு. கடனை அடைக்கிறதுக்காக ஏதாவது பண்ணியே ஆகணும்னு தோணுச்சு. 2019-ல் சேனல் ஆரம்பிச்சேன். என் அக்கா பொண்ணு என்னை அபின்னுதான் கூப்பிடுவா. அவ கூப்பிட்டு அந்தப் பெயர் அப்படியே அடையாளம் ஆகிடுச்சு. அதனால, சேனலுக்கு ‘Mrs. Abi Time’னு பெயர் வச்சேன். ஆரம்பத்தில், சமையல் ரெசிப்பி, கோலங்கள்னு வீடியோ போட்டுட்டிருந்தேன். பெரிய ரீச் கிடைக்கலை. எனக்கு கிரியேட்டிவ் ஐடியாஸ் நிறைய தோணும். நமக்குத் தோணுறதை எக்ஸ்பிரிமென்ட் பண்ணிப் பார்க்கலாமேன்னு வீடியோ போட ஆரம்பிச்சேன். அதற்கெல்லாம் நல்ல வரவேற்பு கிடைச்சது.

அதனால் ‘Ithu abi’s Diary’ என இன்னொரு சேனல் ஆரம்பிச்சி அதில் குக்கிங் மாதிரியான வீடியோக்கள் போட ஆரம்பிச்சேன். திடீர்னு ஒருநாள் ரெண்டு சேனலும் ஹேக் ஆகிடுச்சு. எப்படி சேனலை மீட்கிறதுன்னு தெரியாம ‘Mrs.Abi Time 2.0’ என மூன்றாவதா சேனல் ஆரம்பிச்சி அங்கே ரெண்டு சேனலும் ஹேக் ஆன தகவலைச் சொல்லிட்டு அந்தச் சேனலில் வீடியோ போட ஆரம்பிச்சேன். அப்படியே ஹேக் ஆன சேனலையும் மீட்க முயற்சி பண்ணிட்டிருந்தேன். பிறகு, ரெண்டு சேனலையும் ரெக்கவர் பண்ணிட்டேன். இப்போ மூன்று சேனலையும் மேனேஜ் பண்ணிட்டிருக்கேன்.

வீட்டு வேலையை எளிமையா எப்படிச் செய்யலாம்னு நிறைய விஷயங்கள் தேடி, படிச்சுத் தெரிஞ்சுகிட்டு அது தொடர்பான வீடியோக்கள் போட ஆரம்பிச்சேன். டேங்க் கிளீனிங் எப்படி எளிமையா பண்ணலாம்னு நான் போட்ட வீடியோவிற்கு நல்ல ரீச் கிடைச்சது. டோர் அலாரம் எப்படி வைக்கிறதுன்னு சொல்லிக் கொடுத்தேன். தொடர்ந்து எக்ஸ்பிரிமென்ட் வீடியோக்கள் பண்ண ஆரம்பிச்சேன். கோகோ கோலாவை உருக்கினா எப்படி ரிசல்ட் வரும்னு பல விஷயங்கள் எக்ஸ்பிரிமென்ட் பண்ணினேன். சில நேரம் எக்ஸ்பிரிமென்ட்டிற்குத் தேவையான பொருள்கள் வாங்குவதற்கே அதிகமா செலவு பண்ண வேண்டியிருக்கும். ரொம்ப கஷ்டப்பட்டு மெனக்கெட்டு எடுத்த சில வீடியோக்களுக்கு ரீச் கிடைக்காமலும் இருந்திருக்கு. இத்தனை கஷ்டங்கள் தாண்டி சேனலுக்காக கோல்டு பிளே பட்டன் வாங்கும்போது அவ்வளவு எமோஷனலா இருந்துச்சு.

Shareபட்டா பரம்பரை: 10 மில்லியன் லட்சியம்!
Shareபட்டா பரம்பரை: 10 மில்லியன் லட்சியம்!

சில எக்ஸ்பிரிமென்ட் பண்ணும்போது ஆடியன்ஸ்கிட்ட ‘இதை நீங்க வீட்டில் டிரை பண்ணாதீங்க’ன்னு முன்கூட்டியே சொல்லிட்டு வீடியோ பண்ணுவேன். உதாரணத்துக்கு, கண்ணாடி பாட்டில் கட் பண்ணி வீடியோ போட்டேன். முப்பது பாட்டில் ஈஸியா நான் கட் பண்ணிட்டேன். நீங்க முயற்சி பண்ண வேண்டாம்னு ஆடியன்ஸ்கிட்ட சொல்லியே பண்ணினேன்.

சொந்தக்காரங்க சிலர், உனக்கு இதெல்லாம் தேவையான்னு கேட்டிருக்காங்க. ஆரம்பத்தில், சேனலுக்கு நிறைய நெகட்டிவ் கமென்ட்ஸ் வரும். அதெல்லாம் படிச்சாலே ரொம்ப கஷ்டமா இருக்கும். முகத்தைக் காட்டி வீடியோ பண்றதால கேவலமா திட்டியிருக்காங்க. அப்போதெல்லாம் என் கணவர் எனக்கு ஆறுதலா இருப்பார்.

கேட் அலாரம் நிறைய பேருக்குப் பயனுள்ளதா இருக்கும். அது தொடர்பா இப்போ ரிசர்ச் பண்ணிட்டிருக்கேன். அதுமாதிரி டிரோன் கேமரா வாங்கி எப்படிப் பயன்படுத்தணும், அதில் என்ன இருக்குன்னு காட்டணும்னு ஆசை. அதுக்கு அதிகம் செலவாகும் என்பதால் வெயிட் பண்ணிட்டிருக்கேன். சீக்கிரமே டிரோன் ஆசையை நிறைவேற்றிடுவேன். என் கடன் பிரச்னையும் ஓரளவு குறைஞ்சிருக்கு. சீக்கிரமே ஒரு மில்லியன் சப்ஸ்கிரைபரைப் பத்து மில்லியனா பெருசாக்கணும்!’ என்கிறார் உமா மகேஸ்வரி.