Published:Updated:

காயத்ரி ரெட்டி: `பிகில்' பட நடிகைக்கு நிச்சயதார்த்தம்... மாப்பிள்ளை யார் தெரியுமா?

காயத்ரி ரெட்டி

"அவங்க ஃபேமிலி பயங்கர சப்போர்ட்டிவ். சிலர் சினிமாவில் நடிக்கிற பொண்ணுங்களே வேண்டாம்னு சொல்லுவாங்க. ஆனா, இவங்க 'காயத்ரி' யாரு... அவங்களுடைய கேரக்டர் என்னன்னுதான் பார்த்தாங்க!" - காயத்ரி

காயத்ரி ரெட்டி: `பிகில்' பட நடிகைக்கு நிச்சயதார்த்தம்... மாப்பிள்ளை யார் தெரியுமா?

"அவங்க ஃபேமிலி பயங்கர சப்போர்ட்டிவ். சிலர் சினிமாவில் நடிக்கிற பொண்ணுங்களே வேண்டாம்னு சொல்லுவாங்க. ஆனா, இவங்க 'காயத்ரி' யாரு... அவங்களுடைய கேரக்டர் என்னன்னுதான் பார்த்தாங்க!" - காயத்ரி

Published:Updated:
காயத்ரி ரெட்டி

நடிகை, மாடல் என பன்முகம் கொண்டவர் காயத்ரி ரெட்டி. 'பிகில்' பட நடிகை என்றால் பலருக்கும் சட்டென இவர் முகம் நினைவுக்கு வரும். சமீபத்தில் ஜீ தமிழில் ஒளிபரப்பான 'சர்வைவர்' ரியாலிட்டி ஷோவில் இவர் பங்கேற்று சிறப்பாக விளையாடினார். இந்நிலையில், இவருக்கு கடந்த மாதம் 29ஆம் தேதி அவருடைய வீட்டில் எளிமையாக நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இது குறித்து தெரிந்து கொள்ள காயத்ரியிடம் பேசினோம்.

காயத்ரி ரெட்டி
காயத்ரி ரெட்டி

"எனக்கு 26 வயது பூர்த்தியடையப் போகுது. வீட்ல திருமணத்துக்காக மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிக்கணும்னு சொன்னாங்க. எனக்கு லவ் செட் ஆகாதுன்னு தெரியும். அதனாலதான் நான் கடந்த ஆறு வருடங்களாக யாரையும் டேட் கூட பண்ணல. எனக்கு அரேஞ்சிடு மேரேஜ்தான் செட் ஆகும்னு தெரிஞ்சதால நானும் அவங்கக்கிட்ட ஓகே சொன்னேன். வீட்ல பார்த்தப் பையன்தான் அவர்! 

அவங்க ஃபேமிலி பயங்கர சப்போர்ட்டிவ். சிலர் சினிமாவில் நடிக்கிற பொண்ணுங்களே வேண்டாம்னு சொல்லுவாங்க. ஆனா, இவங்க 'காயத்ரி' யாரு... அவங்களுடைய கேரக்டர் என்னன்னுதான் பார்த்தாங்க. ரெண்டு பேருக்கும் ஒருத்தரையொருத்தர் பிடிச்சிருந்தது. ரெண்டு மாசமா போனில் பேசிட்டேதான் இருக்கோம். இப்ப பக்கா அரேஞ்சிடு மேரேஜ்... லவ் கம் அரேஞ்சிடு மேரேஜ் மாதிரி ஆகிடுச்சு.

காயத்ரி ரெட்டி
காயத்ரி ரெட்டி

அவர் வெளிநாட்டில் கன்ஸ்ட்ரக்‌ஷன் ஒர்க் பண்ணிட்டு இருக்கார். திருமணத்துக்குப் பிறகு நானும் அவருடன் ஃபாரீன் போயிடுவேன். கொஞ்ச பிரேக்கிற்கு பிறகு கண்டிப்பா சினிமாவில் என்னை பார்க்கலாம். நிச்சயம் திரும்பி வருவேன். எங்க வீட்ல கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு பிறகு நடக்குற முதல் விசேஷம் என்பதால் ஃபேமிலியில் எல்லாரும் பயங்கர ஹேப்பியா இருக்காங்க.

உண்மையைச் சொல்லணும்னா நிச்சயதார்த்தத்தை பிளான் பண்ணி பண்றதாகத்தான் இருந்தோம். திடீர்னு 28ஆம் தேதி முடிவு பண்ணி 29ஆம் தேதி நிச்சயம் நடந்துருச்சு. விரைவிலேயே கல்யாண தேதியை அறிவிக்கிறோம்!" என்றார். 

வாழ்த்துகள் காயத்ரி!